கவிஞர் வேலணையூர் பொன்னண்ணாவிற்கு அஞ்சலி நிகழ்வு

காலம் சென்ற அமரர் வேலணையூர் பொன்னண்ணா அவர்களுக்கு டென்மார்க் கேர்னிங் நகரில் உள்ள நோரகேத கலாச்சார இல்லத்தில் எதிர்வரும் 21ம் திகதி அக்டோபர் மாதம் ஞாயிறு மாலை அஞ்சலி நிகழ்வொன்று நடத்தப்பட இருக்கிறது. இந்த நிகழ்வை டென்மார்க் தமிழ் கலைஞர்கள் சங்கமும் சைவத்தமிழ் பண்பாட்டுப் பேரவையும் இணைந்து முன்னெடுக்கவுள்ளன. விழாவை எவ்வாறு நடத்துவதென்ற பூர்வாங்க கலந்துரையாடல் இன்று கேர்ணிங் நகரத்தில் உள்ள பிறண்கோ பாடசாலையில் இடம் பெற்றது. கவிஞர் பொன்னண்ணாவிற்கான அகவணக்கத்துடன் கூடிய நிகழ்வை கலைஞர் சங்கத்தின் தலைவர் திரு. மா. தேவன் ஆரம்பித்து வைத்தார். அத்தருணம் இரு அமைப்புக்களில் இருந்தும் முக்கிய உறுப்பினர்கள் பங்கேற்று எவ்வாறு நிகழ்வை வடிவமைக்கலாம் என்று தத்தமது கருத்துக்களை முன் வைத்தார்கள். அஞ்சலி நிகழ்வில் பொன்னண்ணாவின் பணிகள் ஏழு தலைப்புக்களில் நினைவுகூருவதென முடிவு காணப்பட்டது. 01. பொன்னண்ணாவும் சைவத்தமிழ் பண்பாட்டுப் பேரவையும்…

நாட்டின் முக்கிய தொழில் மையமாக சென்னை திகழ்கிறது

நாட்டின் முக்கிய தொழில் மையமாக சென்னை திகழ்வதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றுவரும் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும் அவர் பேசியதாவது: இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பாக வாழும் மெட்ரோ நகரங்களில் சென்னை முதலிடம் வகிக்கிறது. இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக சென்னையில் குவிகிறார்கள். தமிழகத்தில் முதலீட்டாளர்கள் குவிவார்கள் என நம்பிக்கை உள்ளது. உலக முதலீட்டாளர்கள் தொழில் தொடங்க சென்னைக்குதான் முதலிடம் தருகிறார்கள். உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் வகிக்கிறது. ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆரின் பெயர் சூட்ட மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இறப்பைக் கூட வெற்றி கண்டு மக்களின் மனதில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் எம்ஜிஆர். தென்மாவட்டத்துக்கு செல்லும் வகையில் கிளாம்பாக்கத்தில் புதிய…

கொழும்பு நகரில் விமானத்தை மோதி தாக்குதல் நடத்த திட்டமிட்டனர்

உச்சக்கட்ட போர் நடந்து கொண்டிருந்தபோது கொழும்பு நகரில் விமானத்தை மோதி தாக்குதல் நடத்த விடுதலைப்புலிகள் திட்டமிட்டனர் என அமெரிக்காவில் இலங்கை அதிபர் சிறிசேனா பேசினார். இலங்கையில் தனி ஈழம் கேட்டு விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தி போராடினர். விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே 1983-ம் ஆண்டு ஜூலை மாதம் 23-ந் தேதி உள்நாட்டுப்போர் தொடங்கியது. கால் நூற்றாண்டுக்கும் மேலாக நடந்த போர், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து 2009-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ந் தேதி முடிவுக்கு வந்தது. அந்தப் போர் முடிந்து இப்போது 9 ஆண்டுகள் முடிந்து விட்டன. இந்த நிலையில் தற்போது அமெரிக்கா சென்றுள்ள இலங்கை அதிபர் சிறிசேனா, அங்கு நியூயார்க் நகரில் அமெரிக்க வாழ் சிங்களர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் உச்சக்கட்ட போர் பற்றி கூறியதாவது:- 2009-ம் ஆண்டு சென்னையில் இருந்து…

இங்கிலாந்து பொருளாதாரத்தினை இந்தியா முந்தும்

இங்கிலாந்து நாட்டு பொருளாதாரத்தினை இந்தியா முந்தும் நாள் வெகு தொலைவில் இல்லை என பிரதமர் மோடி பேசியுள்ளார். குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் அஞ்சார் பகுதியில் முந்த்ரா எல்.என்.ஜி. முனையம், அஞ்சார்-முந்த்ரா மற்றும் பலன்பூர்-பாலி-பார்மர் வாயு பரிமாற்ற திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். அதன்பின் உரையாற்றிய அவர், கடந்த 60 வருடங்களில் 13 கோடி குடும்பங்கள் நாட்டில் எரிவாயு இணைப்புகளை பெற்றுள்ளன. கடந்த 4 வருடங்களில் எனது அரசு 10 கோடி குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்புகளை தந்துள்ளன. இங்கிலாந்து நாட்டு பொருளாதாரத்தினை இந்தியா முந்தும் நாள் வெகுதொலைவில் இல்லை என கூறினார். பல பிரதமர்கள் மற்றும் முதல் மந்திரிகள் வந்து சென்றுள்ளனர். ஆனால் இங்கு 3வது எல்.என்.ஜி. (திரவ இயற்கை வாயு) முனையம் ஒன்றை தொடங்கி வைக்கும் வாய்ப்பு கிடைத்தது எனது அதிர்ஷ்டம். அன்றைய மக்கள் பராமரிப்பு…

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பேனர்களை அகற்ற உத்தரவு

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: சாலையை ஆக்கிரமித்து வைத்த பேனர்களை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு சென்னைஎம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்காக அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னாள் முதல்வரும், அதிமுக ஸ்தாபகருமான எம்ஜிஆரின் நூற்றாண்டு நிறைவு விழா நாளை (செப்.30) சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அரசு விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது. விழாவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்துக்கொள்கின்றனர். இந்த விழாவுக்காக சென்னை அண்ணா சாலை, பசுமை வழி சாலை, கிண்டி ஆகிய பகுதிகளில் சாலை ஓரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பேனர்கள், கட்டவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடுமையாக பாதிக்கப்படுவதால் விதிமீறல் பேனர்களை அகற்றக்கோரியும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல்துறையில் டிராபிக் ராமசாமி புகார்…

சென்னையில் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50-ம்ஆண்டு பொன்விழா இன்று மாலை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கிறது. இதில், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். இந்த விழாவில் எம்ஜிஆருடன் திரைத்துறையில் பங்காற்றியவர்கள் கவுரவிக்கப்படு வதுடன், பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன. மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் 31 மாவட்டங்களில், நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அந்தந்த மாவட்டங்களில், அங்குள்ள மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை முதல்வர் தொடங்கி வைத்தார். மேலும் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய துடன், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இவை மட்டுமின்றி, மாவட்டங்களுக்கான புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். இதையடுத்து, எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா, நந்தனம்…

பழக்க வழக்கங்களில் உள்ள குறைபாடுகளே புற்றுநோய்க்கு காரணம்

நமது பழக்க வழக்கங்களில் உள்ள குறைபாடுகளே புற்று நோய்க்கு முக்கிய காரணம் என நடிகை கௌதமி தொிவித்துள்ளார். புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த நடிகை கௌதமி அந்நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உரையாற்றி வருகிறார். விருதுநகரில் உள்ள வன்னியப்பெருமாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது அவர் இவ்வாறு கூறினார். இங்கு அவர் மேலும் கூறியதாவது: நமது பழக்க வழக்கங்களில் உள்ள குறைபாடுகளே புற்று நோய்க்கு முக்கிய காரணம். வெள்ளையாக காணப்படும் அனைத்து பொருட்களும் சுத்தமானவை அல்ல. வெண்மைக்காக பல இரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. வெள்ளை சீனி, வெள்ளை உப்பு, மைதா போன்ற உணவு களை தவிர்ப்பது நல்லது. புகைப் பிடித்தல், மது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். புற்றுநோயை தொடக்கத்திலேயே கண்டறிந்தால், சிகிச்சை மூலம் குணமாக்க முடியும். அதற்கு நானே நேரடி சாட்சி. வெள்ளை சீனி, வெள்ளை…

போர் முடிந்தாலும் இலங்கையில் மரண எண்ணிக்கை விழவில்லை

இலங்கையில் போர் நடைபெறும் காலத்தில் குண்டு வீச்சு போன்றவற்றால் மக்கள் மரணமடைவதைப்போல இப்போதும் மக்கள் மரணமடையும் தொகை காணப்படுகிறது. முன்னர் போர் காரணமாக இருந்தது இப்போதோ விபத்துக்கள் அந்த இடத்தை பிடித்துவிட்டன, மரண எண்ணிக்கையில் பெரிய மாற்றம் இல்லை. ஒவ்வொரு மாதமும் 236 பேர் வீதி விபத்துக்களால் அந்த நாட்டில் மரணமடைகிறார்கள் என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த எட்டு மாத காலத்தில் 1890 பேர் வீதிவிபத்தில் மரணித்துள்ளனர், இவர்களில் 570 பேர் பாதசாரிகளாகவும் 638 பேர் மோட்டார் சைக்கிள் விபத்திலும் மரணித்துள்ளனர். அத்துடன், கடந்த 8 மாதத்தில் மோட்டார் வாகனத்தில் பயணித்த 123 பேர் , சாரதிகள் 151 பேர் , பயணிகள் 259 பேர், சைக்கிளில் பயணித்த 144 பேர் என மொத்தமாக 1890 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மரணங்களுக்கு பிரதானமான காரணங்கள் என்ன..?…

கோடம்பாக்கம் சினிமாவை வளைத்து போட்ட லைக்கா

லைக்கா நிறுவனம் என்றால் அவர்களை துரோகி போல காட்டும் புலம் பெயர் தமிழர்கள் ஏறத்தாழ இப்போது ஓய்ந்து போனார்கள் போலும். காரணம் தமிழகத்தில் இருந்து வரும் முக்கியமான திரைப்படங்களை யார் தயாரித்திருக்கிறார்கள் என்று பார்த்தால் முழுவதுமே லைக்காதான். இவ்வாரம் வெளிவந்த செக்கச் சிவந்த வானமும் லைக்காவின் தயாரிப்பிலேயே வந்துள்ளது. எந்திரன் 2.0 என்ற பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்படும் படமும் லைக்காவினுடையதுதான். மிகப்பெரிய தயாரிப்பு ஜாம்பவான்களான ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன், ஏ.எம்.ரத்தினம், தாணு போன்றவர்களை எல்லாம் காணவில்லை லைக்காவே எங்கும் காணப்படுகிறது. ஏறத்தாழ தமிழக சினிமாவே லைக்கா நிறுவனத்தின் உரிமையாளனான ஓர் ஈழத்தமிழனிடம் போய்விட்டது. கூடவே ஐங்கரனுடைய ஆதரவும் காணப்படுகிறது, இந்த இரண்டு தமிழர்களுமே இப்போது சினிமாவின் முக்கிய தாதாக்கள் ஆகிவிட்டார்கள். அதேவேளை யாராவது ஈழத் தமிழர்கள் இவர்களுக்கு மேல் தலை காட்டினால் அவர்களை நாராக உரித்து…

செக்கச் சிவந்த வானம் பணம் மணிரத்தினத்தின் பத்து தவறுகள்

மணிரத்தினம் என்பவர் உண்மையில் ஒரு சரியான இயக்குனர் அல்ல பெரு நஷ்டங்களை ஏற்படுத்தும் ஒருவர் என்று முன்னர் அவரை வைத்து படம் எடுத்த ஒரு தயாரிப்பாளர் சொன்னது இப்போது நினைவுக்கு வருகிறது. செக்கச் சிவந்த வானத்தில் அவர் இழைத்த தவறுளபை; பார்த்தல் அவர் சொன்னது சரிபோலவே தெரிகிறது. அப்படத்தில் அவர் இழைத்த பத்து மடைத்தனங்கள். 01. பிரகாஷ்ராஜின் தாதா பதவியை கைப்பற்ற அவருடைய பிள்ளைகள் மோதி மடிகிறார்கள் என்பதே கதை. ஆனால் அப்படி முழு குடும்பமுமே அழியுமளவுக்கு பிள்ளையார் கோயிலுக்கு போகும் சாதாரண பிரகாஷ்ராஜின் பவர் என்ன.. என்பதை படத்தில் காட்ட தவறிவிட்டார் மணிரத்தினம். இதனால் கதையில் அவர் எடுத்த எல்லா முயற்சியும் நாசமாகிவிடுகின்றன. படத்தின் ஒவ்வொரு செயலும் அர்த்தமற்று போகின்றன. 02. தந்தையை மகன் கொல்வதற்கும் சகோதரங்கள் ஆளையாள் கொல்வதற்கும் உரிய காரணங்கள் திரைக்கதையில் பலமாக…