அனைத்து கட்சிகளும் ஒன்றாக செயற்படவேண்டும் : சுமந்திரன்

தமிழ் தேசிய பரப்பில் இருக்க கூடிய அனைத்து கட்சிகளும் ஒன்றாக செயற்படவேண்டும் என்ற தன்மையை வலியுறுத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் எம.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் காலம் கடந்து ஞானம் வந்தது போல் ஸ்ரீலங்கா அரசாங்கம் ஓடித்திரிகிறது எனவும் தெரிவித்துள்ளார். தமிழ்தேசியப் பரப்பில் இருக்கக்கூடிய தமிழ் கட்சிகள்,வட கிழக்கில் இருக்கக்கூடிய கிறிஸ்தவ ஆயர்கள், ஆதினமுதல்வர்கள், மற்றும் சிவில் அமைப்புக்கள் ஆகியவற்றின் ஒன்றிணைந்த கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் இன்று இடம்பெற்றது. இதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இன்றைய கால கட்டத்தில் தமிழ் மக்களின் அரசியல் ஒற்றுமை இன்றியமையாதது என்ற கருத்தை நாங்கள் எல்லாருமே ஏற்றுக் கொண்டிருக்கிறோம். அதனை மத தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர். அந்த அரசியல் ஒற்றுமையை எவ்வாறு வேகமாகவும், தீவிரமாகவும் நகர்த்துவது என்பது…

தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கான பொதுத்தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என கூறப்படுகிறது. புதுடெல்லியில் இன்று மாலை 4.30 மணியளவில் நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பில், தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தேர்தல் அட்டவணையை வெளியிடுகிறார். தமிழ்நாடு, அசாம், புதுச்சேரி, மேற்குவங்கம், கேரளம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது நடைபெறும், தமிழகத்துக்கு எத்தனை கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது என்பது உள்ளிட்ட தகவல்கள் இன்று வெளியாக உள்ளது. இன்று மாலை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நிலையில், இன்று மாலை முதலே தேர்தல் நடத்தை…

ஐ.நா மனித உரிமைகள் அறிக்கை முற்றிலும் பக்கச்சார்பானது ?

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை முற்றிலும் பக்கச்சார்பானது என்பதில் எதுவித சந்தேகமும் கிடையாது என வெகுஜன ஊடக மற்றும் தகவல்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். பிரபாகரனும் அவரது நண்பர்களும் பிரபாகரனின் மகளுக்கு வைர மோதிரங்களை அணிவித்து மகிழ்ச்சி கண்டபோது, அப்பாவி தமிழ் குழந்தைகளின் கழுத்தில் சயனைட் குப்பிகளை தொங்கவிட்டு சிறுவர் படையினராக மாற்றினர் என்றார். கண்டி குண்டசாலை பிரதேச செயலகத்தில் நேற்று ( 25) நடைபெற்ற வைபமொன்றில் கலந்து கொண்ட பின்னர், ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் அங்கு மேலும் தெரிவிக்கையில்: அப்பாவி தமிழ் குழந்தைகளுக்கு புத்தகங்களை வழங்குவதற்குப் பதிலாக துப்பாக்கிகளை ஒப்படைப்பதன் மூலம் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுவது குறித்து மனித உரிமை ஆணைகுழுவோ அல்லது வேறேதும் அமைப்புகளோ இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது.…

தடுப்பூசியினால் மாத்திரம் கொரோனாவில் இருந்து பாதுகாப்பு பெற முடியாது

கொவிட் தடுப்பூசியால் மாத்திரம் கொவிட் வைரஸிலிருந்து முழுமையாக பாதுகாப்பு பெற முடியும் என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை என தொற்றுநோய் ஆய்வு பிரிவின் பிரதானி விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார். தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மற்றும் தடுப்பூசி போடாத அனைவரும் தொடர்ந்து சுகாதார நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் எனவும் தடுப்பூசி போடப்பட்டதால் அவற்றில் மீற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் கொவிட் தடுப்பூசிக்கு மது அல்லது புகைபிடிக்கும் பழக்கம் ஒரு தடையாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனமோ அல்லது தடுப்பூசியை தயாரித்த ஆராய்ச்சி நிறுவனங்களோ இதுவரையில் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உன்னதத்தின் ஆறதல்! இரட்சிப்பின் வசனம். வாரம் 21. 8

ஆத்தும ஈடேற்றத்துக்கான வழி. சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை. சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாக இருக்கி றது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவ பெலனாக இருக்கிறது. 1கொரிந்தியர் 1:18 உலகமெங்குமுள்ள கிறிஸ்தவர்கள் (இன்று ஏனைய மக்களும்கூட) இந்நாட்களை லெந்து நாட்கள் எனக்கூறி இயேசுவின் சிலுவையையும், பாடுகளையும், மரணத்தை நினைவுகூர்ந்து அதை விசேசித்த நாட்களாக நினைத்து அனுசரித்து வருகிறார்கள். கிறிஸ்தவ மார்க்கத்தின் மகிமை இயேசுகிறிஸ்துவின் சிலுவையே. அப்போஸ்தலனான பவுல் இயேசுவை சொந்தஇரட்சகராக ஏற்றுக்கொள்ளுமுன் தனது படிப்பையும், பணத்தையும், சமூக அந்தஸ்த்தையும், பதவியையும் குறித்து மேன்மை பாராட்டினான். ஆனால் இயேசுகிறிஸ்துவை சிலுவையில் அறையப்பட்டவராககண்டபோது, முழு உலகத்தின் மகிமையும் சிலுவையில் அறையப்பட்டிருப்பதைக் கண்டார். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து முழுஉலகத்தின் பாவங்களுக்காக சிலுவையிலே உயர்த்தப்பட்டார். அந்த சிலுவையில் அறையப்பட்ட இரட்சகரை நோக்கிப் பார்க்கிற ஒவ்வொருவரும் இன்றுவரை பாவமாகிய நித்திய மரணத்தி னின்றும், நித்திய அழிவில் இருந்தும்,…

ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு அழுத்தங்களை..

அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களுக்கு அரசு ஏற்கனவே பதிலளித்துள்ளது ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் 46ஆவது அமர்வு சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நேற்று ஆரம்பமானது. இந்த அமர்வு எதிர்வரும் மார்ச் 23ம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில் நாளை 24ம் திகதி வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இணையத்தள மூலம் மனித உரிமை பேரவை அமர்வில் உரையாற்றவுள்ளார். அது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்: இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள அனைத்து நடவடிக்ைககளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை பேரவையின் அறிக்கை தொடர்பில் இலங்கை சார்பான பதிலை நாம் ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளோம். இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. அதற்கு நாம் வெற்றிகரமாக முகம் கொடுப்போம். இலங்கைக்கு ஆதரவு வழங்கும் நாடுகளோடு இணைந்து நாம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு…

பிரபாகரனின் காணொளியை டிக் டொக்கில் பதிவேற்றிய இளைஞன் கைது

விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் காணொளியொன்றினை ´டிக் டொக்´ சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய நபரொவர் கைது செய்யப்பட்டுள்ளாார். வத்தளை பிரதேசத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யபபட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். 25 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுளளதாக அவர் மேலும் தெரிவித்தார். முல்லைத்தீவு பிரதேசத்தை சேர்ந்த குறித்த இளைஞன் பின்னர் ஹட்டனில் வசித்து வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அவரின் கைப்பேசியயை சோதனையிட்டதில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பல்வேறு செய்திகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. --- வவுனியாவில் காணாமல் போன தனது மகனைத் தேடி வந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக நேற்று மரணமடைந்துள்ளார். வவுனியா மறவன்குளம் பகுதியை சேர்ந்த தாமோதரம்பிள்ளை பேரின்பநாயகி வயது 61என்ற தாயே நேற்றையதினம் மரணமடைந்துள்ளார். இவரது…