கொரோனா சுற்றுலா வழிகாட்டி நேற்றிரவு (28) உயிரிழந்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இலங்கையில் உயிரிழந்தவரின் இறுதிக்கிரியை இன்று (29) இடம்பெற்றது. விசேட சட்ட வைத்திய அதிகாரி, பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் கொட்டிகாவத்தை பொது மயானத்தில் குறித்த இறுதிக்கிரியை இடம்பெற்றது. சீல் வைக்கப்பட்ட சடலத்தின் முகத்தை சிறிது நேரத்திற்கு பார்வையிட குடும்ப உறவினர்கள் மாத்திரமே அனுமதிக்கப்பட்டனர். கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த நோயாளி அங்கொடை ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே நேற்றிரவு (28) உயிரிழந்துள்ளார். குறித்த வைரஸினால் பாதிக்கப்பட்ட இவர் நான்காவது நோயாளி என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, சுற்றுலா வழிகாட்டியாகவும் இருந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த இவர் 60 வயதுடைய ஆண் நபர் ஆவர்.

மட்டக்களப்பு மதனமோதகம் எனப்படும் கஞ்சா !

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட இருதயபுரம் மேற்கு பகுதியில் மதுவரித்திணைக்கள அதிகாரிகள் இன்று (29) காலை கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றினை முற்றுகையிட்டதுடன் வீடு ஒன்றில் இருந்து ஆயிரக்கணக்கான மதனமோதகம் எனப்படும் கஞ்சா கலந்த அவின் உருளைகளையும் மீட்டுள்ளனர். ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சட்ட விரோத போதைப்பொருள் பாவனை அதிகரித்துவருவதாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித் திணைக்களம் தொடர்ச்சியான சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இதன் கீழ் இன்று காலை மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட இருதயபுரம் மேற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டது. கசிப்பு உற்பத்தி மேற்கொண்டிருந்த போது அங்கு முற்றுகை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அது தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த கசிப்பு உற்பத்தி நிலையத்தின் உரிமையாளர் தப்பிச் சென்றிருந்தார். இதன்போது அங்கு கைது செய்யப்பட்டவரிடம்…

கொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை இந்திய டாக்டர்

உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்திய கொரோனா வைரஸ், இந்தியாவிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் 114 புதிய தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. இதுவரை 17 பேர் இறந்துள்ளனர், 873 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் கொரோனா வைரஸிற்கான தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், பெங்களூரில் உள்ள ஒரு டாக்டர் கொரோனாவுக்கு ஒரு சிறந்த சிகிச்சையை கண்டுபிடித்ததாகக் கூறியுள்ளார். கொரோனாவை குணமாக்க சிகிச்சை முறையை கண்டுபிடித்ததாக பெங்களூரு புற்றுநோய் நிபுணர் விஷால் ராவ் கூறியுள்ளார். இந்த வார இறுதிக்குள் இந்த சிகிச்சை பரிசோதனைக்கு தயாராக இருக்கும் என்று அவர் கூறி உள்ளார். நோயெதிர்ப்பு மண்டலம் சார்ஸ்-கோவ் -2 வைரஸ் காரணமாக பாதிக்கப்படுகிறது. இந்த சிகிச்சை நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்காக செயல்படும், இதனால் நோயாளியின் உடல்…

காலை நேர சிறிலங்கா செய்திகள் 28.03.2020

நேற்று (27) காலை 6.00 மணி முதல் இன்று (28) காலை 6.00 மணி வரையான காலப்பகுதியினுள் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 1,167 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இக்காலப்பகுதியில் 260 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதற்கமைய கடந்த 20ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் இன்று (28) காலை 6.00 மணி வரையான காலப்பகுதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 5,185 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 1,293 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் கடந்த 20ஆம் திகதி மாலை 6.00 மணியிலிருந்து நாட்டில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ------ வவுனியா, மயிலங்குளம் பிரதேசத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒரு நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது இலங்கையில் 107 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் இருவர் பூரணமாக குணமடைந்து இன்று வீடு திரும்பியதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரை 9 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. அதில் 88 பேர் அங்கொடை ஐடிஎச் வைத்தியசாலையிலும், 9 பேர் வெலிகந்த வைத்தியசாலையிலும், மின்னேரியா ஆதார வைத்தியசாலையில் ஒருவரும் தற்போது சிகிச்சைப் பெற்று வருகிறனர். மேலும் 109 பேர் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் நாட்டின் பல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள 9 முக்கிய அறிவிப்புகள்!

கரோனா தொற்று இந்தியா முழுவதும் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இதில் மருத்துவர்கள் மற்றும் தொழிலாளர் நலனுக்காக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். ► மத்திய அரசின் 'கிஷன் சம்மான் நிதி' திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 6000 ரூபாய் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், 2000 ரூபாய் தற்போது உடனடியாக வழங்கப்படும். இதன் மூலம், 8.69 கோடி விவசாயிகள் பயன்பெறுவார்கள். ► ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு தலா ரூ.2,000 வழங்கப்படும். இதன் மூலம் 5 கோடி குடும்பங்கள் பயன்பெறுவர். ► ஏழை மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைப் பெண்கள் பயன்பெறும் வகையில் தலா ரூ.1000 இரண்டு தவணைகளாக வழங்கப்படும். 3 கோடி பேர் இதில் பயன்பெறுவர். ► ஜன் தன் யோஜனா…

இவர் தமிழராக இருந்திருந்தால் பொது மன்னிப்பு கிடைக்குமா..?

மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இராணுவ சார்ஜன்ட் ஆர்.எம். சுனில் ரத்நாயக்க ஜனாதிபதி மன்னிப்பில் விடுதலையாகியுள்ளார். அவருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். கடந்த 2000ஆம் ஆண்டு, யாழ்ப்பாணத்தின் மிருசுவிலில் இடம்பெற்ற கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இலங்கை இராணுவத்தின் முன்னாள் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு, 13 ஆண்டு விசாரணைகளுக்கு பின்னர் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் கடந்த 2015 ஜூன் 25ஆம் திகதி மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஞானபாலன் ரவிவீரன், செல்லமுத்து தெய்வகுலசிங்கம், வில்வராஜா பிரதீபன், சின்னையா வில்வராஜா, வில்வராஜா பிரசாத், நடேசு ஜெயச்சந்திரன், கதிரன் ஞானச்சந்திரன், ஞானச்சந்திர சாந்தன் ஆகிய 8 பேரை கொலை செய்தமை உள்ளிட்ட 19 குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்ட மாஅதிபரால் கடந்த 2002 நவம்பர் 27ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றின் ட்ரையல் அட் பார் மன்றில் சார்ஜன்ட் ஆர்.எம்.…

‘கொரோனா’ வைரஸ் தாக்கிய மேலும் 4 பேர் பூரண குணம்

கொரோனா (கொவிட் 19) வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் அங்கொடை ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 4 பேர் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரை 6 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதா அமைச்சு தெரிவித்துள்ளது. எவ்வித கொரோனா நோயாளர்களும் நேற்று (25) பதிவாகாத நிலையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 102 ஆக பதிவாகி உள்ளது. அவர்களில் 6 பேர் தற்போது நிலையில் முழுவதுமாக குணமடைந்து வெளியேறி உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். வைரஸ் தொற்றுக்குள்ளான காரணத்தால் ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மற்றுமொரு நபர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்படி தற்போது நிலையில் மூன்று பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர்…

இலங்கையில் இன்று கொரோனா தொற்றாளர்கள் எவரும் பதிவாகவில்லை

இன்று மாலை 4.30 மணி வரையில் எந்தவொரு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றாளரும் நாட்டில் இன்றைய தினம் (25) பதிவாகவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். அதன்படி, இதுவரை இந்நாட்டில் 102 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மூன்று வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா தொற்று அறிகுறிகளுடன் 252 பேர் நாடு பூராகவும் உள்ள 22 வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ------- மட்டக்களப்பு மாவட்டத்தில் 1037 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தொற்று தடுப்பு செயலணியின் விசேட கூட்டம் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபரும் தொற்று தடுக்கு செயலணியின் தலைவருமான திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த…