இந்தியாவை குறைவாக எடை போட கூடாது – சீனா

இந்தியா-சீனா கல்வான் மோதலுக்கு பின் இரண்டு நாட்டு எல்லையிலும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. லடாக் எல்லையில் நிமிடத்திற்கு நிமிடம் பதற்றம் அதிகரித்து வருகிறது. லடாக்கில் அனைத்து பகுதிகளிலும் சீனா தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது. அங்கு இந்தியாவின் ராணுவமும், விமான படையும் தீவிரமாக ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகிறது.இந்த நிலையில் சீனாவின் முன்னாள் விமானப்படை மேஜர் ஜெனரல் மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு ஆலோசகர்களில் ஒருவரான குயோ லியாங் சீன நாட்டு அரசுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், இந்தியா சீனா பிரச்சனை இப்போது சரியாகாது. இது முழு அளவில் பெரிதாக வெடிக்க வாய்ப்புள்ளது. சீனா இதற்கு தயாராக இருக்க வேண்டும். இந்தியாவை நாம் குறைவாக எடை போட கூடாது. நமது எல்லைகளை நாம் கவனமாக பாதுகாக்க வேண்டும். எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் நாம் செயல்பட வேண்டும்.…

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புதிதாக 27 காவலர்கள் நியமனம்

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்தை அடுத்து அதிரடி நடவடிக்கையாக, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புதிதாக 27 காவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும், ஊரடங்கை மீறி தங்களது செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி, கடந்த 19-ந்தேதி இரவில் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர். பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட மகனும், தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரித்ததுடன், கோவில்பட்டி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன், சாத்தான்குளத்தில் தங்கியிருந்து சாட்சிகளிடமும், கோவில்பட்டி சிறையிலும் நேரடியாக விசாரணை நடத்த அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதனைத்தொடர்ந்து சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக வடசேரி காவல் நிலைய…

இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது பிரதமர் மோடி

கிழக்கு லடாக் எல்லையில் சீன ராணுவத்துக்கு இந்திய ராணுவம் சார்பில் தகுந்த பதிலடி தரப்பட்டுள்ளது. துணிச்சல் மிகுந்த நமது வீரர்கள் இந்தியாவின் கவுரவத்துக்கு களங்கம் வரவிடமாட்டார்கள் என்று 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்தார். ஒவ்வொரு மாதத்திலும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று, வானொலியில் 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசி வருகிறார். அந்த வகையில் இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது: ''இந்த ஆண்டின் பாதி நாட்கள் கடந்துவிட்டன. 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பல்வேறு தலைப்புகள் குறித்து விவாதித்துவிட்டோம். இப்போது பொதுவாக மக்கள் எப்போது 2020-ம் ஆண்டு முடியப்போகிறதோ என்று கேட்கிறார்கள். இந்த ஆண்டு பல்வேறு சோதனைகளைத் தந்த ஆண்டாக மக்கள் நினைக்கிறார்கள். எந்த…

உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 20. 26

இளைப்பாறுதலின் வழி. சகோதரன்.பிரான்சீஸ அந்தோனிப்பிள்ளை. ரெகொபோத் ஊழியங்கள் - டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம். என் ஆத்துமாவே, கர்த்தர் உனக்கு நன்மை செய்தபடியால், நீ உன் இளைப்பாறு தலுக்குத் திரும்பு. சங் 116:7 இன்று இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் ஏற்படும் நிலைமை மீண்டுமாக மக்கள் அமைதியை, இளைப்பாறுதலை, சமாதானத்தை இழந்து வாழவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவதுபோல உணரவேண்டிய கட்டாயம் ஏற்ப்படுவதை நீங்களும் நானும் காணக்கூடியதாக உள்ளது. சுயத்தின் செயல்கள் மக்களை கதிகலங்க வைக்கிறது. பயந்த சூழலில் வாழ்ந்த இருவரின் அனுபவங்களை இந்த தியானத்தின் ஊடாக பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். வேதத்தில் இரண்டுபேர் தங்கள் ஆத்துமாவோடு பேசிக்கொண்டார்கள். பழைய ஏற்பாட்டில் தாவீதும், புதிய ஏற்பாட்டில் ஒரு ஐசுவரியவானும். இங்கு நாம் கவனிக்க வேண்டியது, அவர்களின் பேச்சில் வெளிப்பட்ட இருதயத்தின் நோக்கத்தை. ஐசுவரியவான் ஆத்துமாவே வயல்வெளி நிலங்களெல்லாம் நன்றாய் விளந் திருக்கிறது. நீ…

புலிகளின் பொங்கு தமிழ் மேடையில் ஏறி பேசினேன் மனோ கணேசன்

போர்நிறுத்த காலத்தில் சட்ட பூர்வமாக தென்னிலங்கையிலிருந்து சென்று பொங்கு தமிழ் விழாவில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினேன். நான் ஒருபோதும் புலிகளின் மேடையில் ஏறி, தனிநாட்டு கோரிக்கையை வலியுறுத்தியோ, ஆயுத போராட்டத்தை ஆதரித்தோ பேசியதில்லை. அன்றைய காலகட்டத்தில் அது சட்டவிரோமானதாக இருக்கவில்லையென தமிழ் முற்போக்கு கூட்டணித் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கருணா அம்மான், முன்னாள் அமைச்சர் மனோ தொடர்பில் கூறிய கருத்துக்கு பதில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அது தொடர்பில் தொடர்ந்து பேசிய அவர், நான் பொங்கு தமிழ் விழாவுக்குச் சென்று அந்த அமைப்பிற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக கூறி தனிநாட்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசியதாக, புலிகள் இயக்கத்தின் முன்னாள் பிரமுகர், வேட்பாளர் கருணா அம்மான் கூறியுள்ளார். இது இதற்கு முன்னர் பல சிங்கள அடிப்படைவாதிகள் என் மீது சுமத்திய குற்றச்சாட்டு தான். இப்போது புதிதாக…

ஹிஸ்புல்லா பகிர்ந்த துப்பாக்கிகள் சஹ்ரானிடம்!

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எல்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவால் பகிர்ந்தளிக்கப்பட்ட ஆயுதங்கள் சிலவற்றை சஹரான் ஹசீம் பெற்றுக் கொண்டமை தொடர்பான தகவல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரியவந்துள்ளது. ஊடகவியலாளர் கிறிஸ்டோபர் கமலேந்திரன் ஆணைக்குழுவில் சாட்சியமளித்த போதே குறித்த விடயம் தெரிய வந்துள்ளது. கிறிஸ்டோபர் கமலேந்திரன் கடந்த 2009 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்தில் தேசிய தௌப்பீக் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹீசீமை நேர்கண்டிருந்தார். இது தொடர்பிலேயே ஆணைக்குழு நேற்று (24) அந்த ஊடகவியலாளரிடம் வினவியிருந்தது. அதாவது ´2009 ஜூலை மாதத்தில் பேருவளையில் சஹ்ரான் ஹசீமின் குழுவுக்கும் பாரம்பரிய முஸ்லிம் குழுவுக்கும் இடையில் பல தடவைகள் மோதம் ஏற்பட்டிருந்ததை அறிந்துக் கொண்டேன். காத்தான்குடியில் உள்ள ஒருவரிடம் சஹ்ரான் ஹசீமின் தொலைப்பேசி இலக்கத்தை பெற்று அங்கிருந்த அவரின் அலுவலகத்திற்கு சென்றேன். அங்கு டி…

இந்தியாவில் ஒரே நாளில் 17,296 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஒரே நாளில் இந்தியாவில் 17,296 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மொத்த பாதிப்பு 5 லட்சத்தை நெருங்குகிறது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளதகவலில் இதுவரை இல்லாத வகையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17,296 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. 407 பேர் உயிரிழந்து உள்ளனர். மொத்த பாதிப்பு - 4,90,401 ஆக உயர்ந்து 5 லட்சத்தை நெருங்கி உள்ளது. குணமடைந்தவர்கள் - 2,85,636 பேர், மொத்த உயிரிழப்பு 15,301 ஆகும் என கூறப்பட்டு உள்ளது. இந்தியாவில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு கொரோனா பாதிப்பு 33.39 ஆக உள்ளது. தற்போது உலகில் சராசரி லட்சம் மக்கள் தொகைக்கு 120.21 பாதிப்புகள் உள்ளன.நாட்டில் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு இறப்புகள் 1.06 ஆக உள்ளது.இது உலக சராசரியான இறப்புகள் 6.24 விட மிகக்குறைவு ஆகும்…

உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி

கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்திற்கு திமுக சார்பில் 25 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படுவதாக, மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூரி இருப்பதாவது:- கொரோனாவைவிடக் கொடூரமான முறையில் தமிழகக் காவல்துறை நடந்து கொண்ட காரணத்தால், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வணிகர்களான ஜெயராஜூம், அவரது மகன் பென்னிக்சும் அநியாயமாக அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஊரடங்கு நேரத்தில், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய காவல்துறையினர், சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொள்ள திரு. பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு அனுமதித்ததன் விளைவுதான் இந்தப் பெருங்கொடூரம். சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தையையும் மகனையும் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல்துறையினர் சூழ்ந்துகொண்டு சரமாரியாகத் தாக்கியும், லத்தியை அவர்களின் பின்புறம் வழியே உடலுக்குள் திணித்துக் கொடுமைப்படுத்தியும், வேட்டி - சட்டையெல்லாம் ரத்தத்தின் நனையும் வகையில் சித்திரவதை செய்தும், நெஞ்சுப்பகுதியில் உள்ள…

எச் -1 பி விசா: டொனால்டு டிரம்ப் அறிவிப்பு அமெரிக்க நிறுவனங்களை பாதிக்கும்

டொனால்டு டிரம்பின் எச் -1 பி விசா அறிவிப்பு அமெரிக்க நிறுவனங்களை வெகுவாக பாதிக்கும் உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய நோயாக கொரோனா வைரஸ் உள்ளது. இந்த நோய் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில், அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.அதுமட்டுமின்றி, கொரோனா' வைரஸ் பரவலால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பால், அமெரிக்காவில் லட்சகணக்கானவர்கள் வேலை இழந்துள்ளனர். இதையடுத்து, அமெரிக்காவில் வேலை பார்க்கும் வெளிநாட்டவருக்கு, கிரீன் கார்டு எனப்படும் குடியுரிமை வழங்குவதை, 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக, ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஏப்ரலில் அறிவித்தார். இது, இந்தாண்டு இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எச் -1 பி விசாக்களை நிறுத்தி வைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்த முடிவு பல பெரிய அமெரிக்க நிறுவனங்களை பாதிக்கும். அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகளின் தரவுகளின்படி, 2019 நிதியாண்டில் புதிய எச்…

CID யில் ஆஜராக கருணா அம்மான்

விநாயகமூர்த்தி முரளிதரன் எனும் கருணா அம்மான் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். அம்பாறை பகுதியில் வைத்து கடந்த 23 ஆம் திகதி அவர் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். குறித்த கருத்து தொடர்பில் பதில் பொலிஸ்மா அதிபரின் அறிவுரைக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தான் கொரோனாவை விட பயங்கரமானவர் எனவும் ஆணையிறவில் ஒரே இரவில் இரண்டு மூவராயிரம் இராணுவத்தினரை கொலை செய்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். ------ கருணா அம்மான்’ என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை கைது செய்யுமாறு கோரி, உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விநாயகமூர்த்தி முரளிதரனை கைது செய்வதற்கான உத்தரவை பொலிஸாருக்கு பிறப்பிக்குமாறு கோரியே, சமூக செயற்பாட்டாளரும் ஆசிரியருமான பி.கலஹெபத்திரண இம்மனுவை இன்று (25) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அத்தோடு,…