உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவாதம் புதன்கிழமை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விவாதத்தை நாளை மறுதினம் புதன்கிழமை (24) முதல் மூன்று நாட்களுக்கு நடத்துவதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் குழு தீர்மானித்துள்ளதாக பிரதிப் பொதுச் செயலாளரின் பிரதானி சமிந்த குலரத்ன தெரிவித்தார்.

இதன்படி, புதன்கிழமை (24), வியாழன் (25) மற்றும் வெள்ளிக்கிழமை (26) ஆகிய நாட்களில் விவாதம் நடைபெறவுள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்டம் (திருத்தம்) சட்டமூலம் (இரண்டாம் வாசிப்பு) மற்றும் நச்சு, அபின் மற்றும் ஆபத்தான மருந்துகள் கட்டளைச் சட்டத்தின் கீழான விடயங்கள் 24 ஆம் திகதி புதன்கிழமை காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை விவாதிக்கப்பட்ட பின்னர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விவாதம் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts