ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர்

இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் மீதும் அதில் இலங்கை தொடர்பாக இடம்பெறப்போகின்ற நடவடிக்கைகள் தொடர்பாகவுமே அனைவரது பார்வையும் திரும்பியிருக்கிறது. ஜெனிவாவில் என்ன நடக்கப்போகின்றது என்ற கேள்வி அனைத்து தரப்பினரும் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.

அதுவும் விசேடமாக நாட்டில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஜெனிவாவில் ஏற்படப்போகின்ற புதிய நிலைமை என்ன? இலங்கை தொடர்
பான நகர்வுகளுக்கு என்ன நடக்கப்போகின்றது? மிக முக்கியமாக பாதிக்கப்பட்ட மக்கள்ளுக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்படுமா? பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கிடைக்குமா?

பாதிக்கப்பட்ட மக்கள் ஆற்றுப்படுத்தப்படுவார்களா? போன்ற கேள்விகள் பரவலாக எழுப்ப்படுகின்றன. ஏற்கனவே இலங்கை தொடர்பாக ஜெனிவா மனித உரிமை பேரவையில் நடைமுறையில் இருக்கின்ற 30/1 என்ற பிரேரணையை அரசாங்கம் மீளாய்வு செய்துகொண்டிருக்கும் சூழலில் அதன் அடுத்த கட்டமாக என்ன நடக்கப்போகின்றது என்பதே பிரதான பேசு பொருள் மாறியிருக்கிறது.

இம்முறை ஜெனிவா கூட்டத் தொடர் இலங்கையைப் பொறுத்தவரையில் மிகவும் தீர்க்கமாக அமைகின்றது. எதிர்வரும் 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கூட்டத் தொடர் மார்ச்மாதம் 20ஆம் திகதிவரை நடைபெறவிருக்கிறது. இதில் இம்முறை ஐக்கிய நாடுகள்மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லட் இலங்கை தொடர்பாக ஒரு இடைக்கால அறிக்கையை வெளியிட இருப்பதே விசேடமாக அமைந்திருக்கிறது. எதிர்வரும் 27ஆம் திகதி ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை தொடர்பான இடைக்கால அறிக்கையை மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கவிருக்கின்றார். அதற்கு முன்னர் இந்த அறிக்கை ஊடகங்களுக்கு வெளியிடப்படவிருக்கிறது.

Related posts