கமல் ஹாசனின் 234-வது படத்தில்

நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன்-2 படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்து வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இது அவரது 233வது படம் (KH233) ஆகும். இந்த படத்திற்காக கமல் ஹாசன் தயாராகி வருகிறார்.

விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகும்முன்பே, 234வது படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

கமல் ஹாசன் நடிக்கும் 234வது படத்தை மணிரத்னம் இயக்க உள்ளார்.

ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கான நடிகர், நடிகையர் தேர்வு நடைபெறுகிறது.

மெகா பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் நடிக்க ஜெயம் ரவி, திரிஷா, துல்கர் சல்மான் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் சீசன்-6 மற்றும் கமலின் 233வது படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்குவதற்கு முன் 234வது படத்துக்கான புரோமோ படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே இந்த மாதமே படத்தின் அறிவிப்பு தொடர்பான டீசர் படமாக்கப்படலாம். 234வது படத்தின் படிப்பிடிப்பை அடுத்த ஆண்டு தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

——

கமல்ஹாசன் நடிக்கும் அவரது 233-வது படத்தை வினோத் டைரக்டு செய்ய இருக்கிறார். இவர் ஏற்கனவே சதுரங்க வேட்டை, தீரன் ஆதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, துணிவு ஆகிய படங்களை இயக்கி பிரபலமானவர்.

தற்போது கமல்ஹாசனுடன் இணைகிறார்.

இந்த படத்துக்காக கமல்ஹாசன் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில் வினோத் இயக்கும் படத்தில் கமல்ஹாசன் ராணுவ வீரராக நடிப்பதாக தகவல் பரவி உள்ளது.

துப்பாக்கி சுடும் பயிற்சியிலும் அவர் ராணுவ உடை அணிந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை வைத்தே அவர் ராணுவ வீரராக நடிப்பதாக பேசுகின்றனர்.

ஆனாலும் படக்குழுனர் அதை உறுதி செய்யவில்லை. ஏற்கனவே விஸ்வரூபம் படத்தில் ராணுவ அதிகாரியாக கமல்ஹாசன் நடித்து இருந்தார்.

Related posts