மார்ச் 1ம் திகதிக்கு பின்பாராளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதிக்கு முடியும்

அரசியலமைப்பின் 19 ஆம் திருத்தத்திற்கமைய மார்ச் முதலாம் திகதிக்கு பின்னர் எந்த வேளையும் பாராளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதிக்கு முடியும் என சட்டமா அதிபர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

தற்போதைய பாராளுமன்றத்துக்கு எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் ஆம் திகதி வருடங்களும் 6 மாதங்களும் பூரணமாகின்றது. அதனால் எதிர்வரும் மார்ச் 1 ஆம் திகதிக்கு பின்னர் எந்த வேளையும் பாராளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரம்அரசியலமைப்பினூடாக ஜனாதிபதிக்கு கிடைக்கப்பெறுகின்றது. என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாராளுமன்றத்தை உரிய காலத்துக்கு முன்னர் கலைத்தல் மற்றும் தேர்தல்கள் நடவடிக்கைகள் தொடர்பாக வினவி, ஜனாதிபதியின் செயலாளர்
பீ.பி.ஜயசுந்தர தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரியவுக்கு கடந்த வாரம் கடிதமொன்று அனுப்பி இருக்கிறார். ஜனாதிபதி உரியா காலத்துக்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைத்தால், பாராளுமன்ற தேர்தலுக்கு வேட்பாளர் பட்டியலை கோரும் திகதி, அதன் இறுதித் திகதி, பொதுத்
தேர்தலை நடத்தும் திகதி, பாராளுமன்ற சபை அமர்வு ஆரம்பமாகும் திகதி என்ற விடயங்களை பாராளுமன்றத்தை கலைப்பதாக தெரிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பில் உள்ளடக்கவேண்டும் என்பதற்காவே ஜனாதிபதி செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு குறித்த கடிதத்தை அனுப்பியிருப்பதாக
தெரிவிக்கப்படுகின்றது.

அதன் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இந்த வாரத்துக்குள் தனது நிலைப்பாட்டை ஜனாதிபதி செயலாளருக்கு அறிவிக்க இருப்பதாக தெரியவருகிறது.

Related posts