அலைகள் வாராந்த பழமொழிகள் 25.11.2019

01. திறன் என்பது உண்மையில் ஒரு மனோ நிலைதான். என்னால் எவ்வளவு வேலைகளை செய்ய முடியும் என்பது, என்னால் எவ்வளவு வேலைகளை செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேனோ அதை சார்ந்துள்ளது. 02. தனக்கு எவ்வளவுதான் வேலை இருந்தாலும் இந்த கூடுதல் வேலையை செய்து முடிப்பேன் என்று எண்ணும் ஒருவர்தான் வாழ்க்கையில் வேகமாக முன்னேறுவார். 03. வீடு, சமுதாயம் என்று நீங்கள் செய்கின்ற வேலைகளை அதிகமாகவும், சிறப்பாகவும் செய்வதுதான் வெற்றிக்கான சூத்திரமாகும். 04. வெற்றி வேண்டுமானால் நீங்கள் உங்கள் வேலையின் தரத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும் கூடவே அதன் அளவையும் அதிகரித்துக்கொள்ள வேண்டும். 05. ஒரு சமுதாய பிரச்சனையில் தலையிடும்படி அண்டை வீட்டார் கேட்டால் தயங்காது தலையிடுங்கள். ஒரு சமுதாய தலைவராக ஆவதற்கு அது உதவும். 06. வேலையில் பெரும் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்வது உங்களை தனித்துவப்படுத்தி, நீங்கள்…

ஜெயலலிதா வேடத்துக்கு நான் பொருத்தம்

ஜெயலலிதா வாழ்க்கை தலைவி என்ற பெயரிலும் த அயன் லேடி என்ற பெயரிலும் சினிமா படமாக தயாராகிறது. தலைவி படத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார். த அயன் லேடி படத்தில் ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்கிறார். இந்த படத்தில் நடிப்பது குறித்து நித்யா மேனன் அடிக்கடி பேசி வருகிறார். தற்போது அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:- “ஜெயலலிதாவுக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. நாங்கள் இருவருமே பெங்களூருவில் படித்து இருக்கிறோம். பழக்க வழக்கம், பேசும் விதம், ஒழுக்கம், மேனரிசம் போன்ற விஷயங்களில் எல்லாம் ஜெயலலிதாவுக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இதனை இயக்குனர் பிரியதர்ஷினியும் என்னிடம் பலமுறை சொல்லி இருக்கிறார். ஜெயலலிதா மாதிரி நானும் பிடிக்காத விஷயங்களை பட்டென்று சொல்லி விடுவேன். ஜெயலலிதாவிடம் இருந்த நல்ல குணங்கள் என்னிடமும் இருக்கிறது. அதனால் ஜெயலலிதா சம்பந்தமான எல்லா விஷயங்களையும்…

கமலின் இந்தியன்-2 படத்தில் விஜய்சேதுபதி?

விஜய்சேதுபதி இமேஜ் பார்க்காமல் 2 கதாநாயகர்கள் படங்களில் நடித்து வருகிறார். மாதவனின் விக்ரம் வேதா, ரஜினியின் பேட்ட படங்களில் வில்லனாக வந்தார். சீதக்காதி படத்தில் வயதானவராகவும் சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாகவும் நடித்தார். தற்போது விஜய்யின் புதிய படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்தார். மலையாள படத்திலும் நடித்து வருகிறார். இந்தி படவாய்ப்பும் வந்துள்ளது. சமீபத்தில் சென்னையில் கமல்ஹாசனுக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டு விஜய் சேதுபதி பேசும்போது, ஏற்கனவே கமல்ஹாசனுடன் நடிக்கும் வாய்ப்பை தவற விட்டதாகவும் மீண்டும் அவருடன் நடிக்க வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் நடிப்பேன் என்றும் குறிப்பிட்டார். இதையடுத்து இந்தியன்-2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது. படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை. இந்தியன்-2 படம்…

இலங்கை தமிழர்களை காப்பாற்ற உலக நாடுகள்

இலங்கை தமிழர்கள் மிகப்பெரிய அழிவை எதிர்நோக்கி இருப்பதால், அவர்களை காப்பாற்ற உலக நாடுகள் முன்வர வேண்டும் என தமிழர் தேசிய முன்னணியின் தலைவரான பழநெடுமாறன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதுதொடர்பாக நாகப்பட்டினத்தில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது... “விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசு கூறியதை இந்திய அரசும் ஏற்றுக்கொண்டது. இந்நிலையில் சோனியா காந்திக்கு அளிக்கப்பட்டு வந்த உயர் பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றதை கண்டிக்காமல், விடுதலைப் புலிகளால் சோனியாகாந்தி உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று மக்களவையில் திமுக உறுப்பினர் டி ஆர் பாலு கூறியிருப்பது வீண் பழிசுமத்தும் செயல். இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு 2009 ஆம் ஆண்டில் வருகை தந்த 3 லட்சம் ராணுவ வீரர்கள் தற்போது வரை அங்கு தான் இருக்கிறார்கள். இலங்கை அரசு தற்போது கொண்டு வந்துள்ள அவசர சட்டம், புதிதாக…

3 மாகாணங்களுக்கு இந்த வாரம் ஆளுநர் நியமனம்

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாண ஆளுநர்கள் இவ்வாரம் நியமிக்கப்படவுள்ளதாக முன்னாள் அமைச்சரும் சமசமாஜக் கட்சி தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். கிழக்கு மாகாண ஆளுநராக தான் நியமிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். மேல், ஊவா, சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் ஆகிய ஆறு மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் கடந்த 20ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவால் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமிக்கப்படவில்லை. வடமாகாண ஆளுனராக யாரை தெரிவுசெய்வதென எழுந்த சிக்கலான நிலைமையால் இன்னமும் குறித்த மூன்று மாகாணங்களுக்குமான ஆளுநர்கள் நியமிக்கப்படவில்லை. இதுதொடர்பில் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவிடம் வினவிய போது, வடமாகாணத்துக்கான ஆளுநரை நியமிப்பதில் ஏற்பட்ட சிக்கலான நிலைமையால் கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான ஆளுநர் நியமனமும் தாமதமடைந்துள்ளது. கிழக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதி என்னையே நியமிக்கவுள்ளார். இந்த வாரம்…

நாளை நள்ளிரவுடன் மேலதிக வகுப்புக்களுக்கு தடை

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்கள் - டியுசன் வகுப்புகள், மீட்டல் பயிற்சிகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் அனைத்தும் நாளை நள்ளிரவுடன் (26) தடைசெய்யப்படுகின்றன. இந்த விதிமுறையை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித அறிவித்துள்ளார். இதுதொடர்பான முறைப்பாடுகளை பொதுமக்கள் பொலிஸாருக்கோ அல்லது 1911 எனும் பரீட்சைகள் திணைக்களத்தின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கோ தொடர்பை ஏற்படுத்தி அறிவிக்கமுடியும். க.பொ.த சாதாரண தர பரீட்சை எதிர்வரும் இரண்டாம் திகதி நாடாளவிய ரீதியில் 4,987 பரீட்சை மத்திய நிலையங்களில் ஆரம்பமாகிறது. இம்முறை ஏழு இலட்சத்து 17 ஆயிரத்து 8 பரீட்சார்த்திகள் இந்தப் பரீட்சைக்கு தோற்றுகின்றனர். இந்த பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி ஆரம்பித்து12 ஆம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.