அலைகள் வாராந்த பழமொழிகள் 25.11.2019

01. திறன் என்பது உண்மையில் ஒரு மனோ நிலைதான். என்னால் எவ்வளவு வேலைகளை செய்ய முடியும் என்பது, என்னால் எவ்வளவு வேலைகளை செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேனோ அதை சார்ந்துள்ளது.

02. தனக்கு எவ்வளவுதான் வேலை இருந்தாலும் இந்த கூடுதல் வேலையை செய்து முடிப்பேன் என்று எண்ணும் ஒருவர்தான் வாழ்க்கையில் வேகமாக முன்னேறுவார்.

03. வீடு, சமுதாயம் என்று நீங்கள் செய்கின்ற வேலைகளை அதிகமாகவும், சிறப்பாகவும் செய்வதுதான் வெற்றிக்கான சூத்திரமாகும்.

04. வெற்றி வேண்டுமானால் நீங்கள் உங்கள் வேலையின் தரத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும் கூடவே அதன் அளவையும் அதிகரித்துக்கொள்ள வேண்டும்.

05. ஒரு சமுதாய பிரச்சனையில் தலையிடும்படி அண்டை வீட்டார் கேட்டால் தயங்காது தலையிடுங்கள். ஒரு சமுதாய தலைவராக ஆவதற்கு அது உதவும்.

06. வேலையில் பெரும் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்வது உங்களை தனித்துவப்படுத்தி, நீங்கள் அதிக மதிப்பு வாய்ந்தவர் என்பதைக் காட்டுகிறது.

07. அதிகப்படியான வேலைகளை எடுத்துக் கொண்டால் அதற்கு எப்படி தீர்வு காண்பது என்ற வழிகளை உங்கள் மனது தானாகவே கண்டு பிடித்து சொல்லும்.

08. ஒரு வேலை செய்து முடிக்கப்பட வேண்டும் என்றால் அதை மும்முரமான ஒருவரிடம் கையளியுங்கள். ஏராளமான ஓய்வு நேரம் இருக்கும் ஒருவர் செயற்திறனற்ற ஒருவராகவே இருப்பார்.

09. ஒரு மும்முரமான மனிதர்தான் வேலைகளை ஒழுங்காக செய்து முடிக்கிறார்.

10. உங்கள் பணியை மேலும் விரிவுபடுத்த என்ன வழியென கேளுங்கள் மனது படைப்பாற்றலோடு செயற்பட்டு உங்களுக்கு புது வழி காட்டும்.

11. ஒரு மனிதர் பெரியவராக இருக்கிறார் என்றால் அவர் உங்களை ஊக்குவிப்பார். அவர் சிறியவராக இருந்தால் போதனைகள் செய்ய தயாராக இருப்பார்.

12. பெரிய மனிதர் நீங்கள் பேசுவதை காது கொடுத்து கேட்பர். சிறிய மனிதர் உங்கள் வாய்களை அடைத்துவிட்டு தாங்கள் பேசுவார்கள்.

13. வாழ்வில் அனைத்து நிலைகளையும் சேர்ந்த வெற்றிகரமான மனிதர் மற்றவருக்கு அறிவுரை வழங்குவதைவிட அதிகமாக மற்றவரிடமிருந்து அறிவுரை கேட்பர்.

14. ஒரு வெற்றிகரமான மனிதர் தீர்மானத்தை மேற்கொள்ள முன்னர் மற்றவரிடம் அறிவுரை கேட்பார். படைப்பாற்றல் மிக்க தீர்மானங்களை எட்டுவதில் மற்றவருடைய பரிந்துரைகளும், தீர்மானங்களும்தான் கச்சா பொருட்கள்.

15. நீங்கள் மற்றவர்கள் கூறுவதை கேட்பது எதற்காக என்றால் அதை செய்வதற்கல்ல உங்கள் படைப்பாற்றலை தூண்டுவதற்காகவே.

16. விளம்பரம் செய்யப் போகிறீர்களா..? முதலில் மக்களின் அபிப்பிராயங்களை காது கொடுத்து கேளுங்கள், பின்னர் அவர்களை மகிழ்விக்கின்ற விளம்பரங்களை செய்யுங்கள்.

17. நாம் பேசுவதில் இருந்து எதையும் கற்றுக்கொள்ள முடியாது. கேட்பதன் மூலம்தான் கற்றுக்கொள்ள முடியும்.

18. மற்றவர்களை பேச அனுமதித்தால் கருத்துக்கள் கிடைக்கும் அத்தோடு அவர்கள் நல்ல நண்பர்களாகவும் மாறிவிடுவார்கள்.

19. உங்கள் யோசனைகளை பட்டை தீட்டி மெருகேற்ற வேண்டுமானால் மற்றவர்கள் உங்களுக்கு உதவ அனுமதியுங்கள்.

20. பிறருடைய கருத்துக்களை கருத்தில் கொள்ளாது விட்டுவிட்டு தனக்குள் மட்டுமே உழன்று கொண்டிருக்கும் மனது விரைவில் பழுதடைந்து படைப்பாற்றல் மிக்க சிந்தனையை இழந்துவிடும்.

21. யோசனைகள் என்பவை உங்கள் சிந்தனைகளில் விளைபவை, அவை பலனளிக்க வேண்டும் என்றால் அவற்றை பயன்படுத்த வேண்டும்.

22. உங்களுக்கு மாறுபட்ட தொழில்களை செய்வோருடன் பழகும்போது கிடைக்கும் புதிய தகவல்கள் உங்கள் ஆற்றலை மேலும் பல மடங்கு தூண்டிவிடும்.

23. கருவாலி என்கின்ற மரம் ஒரு காட்டையே உருவாக்கக் கூடிய விதைகளை போடுகிறது. ஆனால் அவற்றில் பெரும்பாலானவற்றை அணில்கள் தின்றுவிடும். அம்மரங்களின் கீழ் இருக்கும் நிலமும் இடம் விடுவதில்லை. யோசனைகளும் அப்படியே சமுதாயம் என்ற இறுகிய நிலம் அதை வளர விடாது. எதிர்மறையாக சிந்திக்கும் மக்கள் அதை அணில்கள் போல அழித்துவிடுவர்.

24. யோசனைகள் உங்களிடமிருந்து தப்பிப்போக விடாதீர்கள், அவற்றை தவறாது எழுதி வைத்துவிடுங்கள். உடனடியாக பதியாவிட்டால் யோசனைகள் வானில் வெட்டிய மின்னல் போல உடன் மறைந்துவிடும்.

25. ஒரு நல்ல யோசனை எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதை வளமான படைப்பாற்றல் உள்ளவர்கள் நன்கு அறிந்துள்ளனர். யோசனைகளைப் பாதுகாப்பதும் வங்கியில் பணத்தை சேர்ப்பது போன்ற ஒரு விடயம்தான்.

அலைகள் பழமொழிகள் தொடரும்.
25.11.2019

Related posts