புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றார்

இடைக்கால அரசாங்கத்தின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (21) பிற்பகல் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ரணில் விக்கிரமசிங்க நேற்று அறிவித்ததை தொடர்ந்து இன்று (21) முற்பகல் ஜனாதிபதியை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்குமாறு ஐக்கிய தேசிய கட்சி சபாநாயகரிடம் கோரியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

—–

6 மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி 6 மாகாணங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள் விபரம் பின்வருமாறு,

மேல் மாகாணம் – டொக்டர் சீதா அரபேபொல
மத்திய மாகாணம் – லலித் யு கமகே
ஊவா மாகாணம் – ராஜா கொல்லூரே
தென் மாகாணம் – டொக்டர் வில்லி கமகே
வடமேல் மாகாண – ஏ.ஜே.எம் முஸம்மில்
சப்ரகமுவ மாகாணம் – டிகிரி கொப்பேகடுவ

Related posts