கமலுக்கு நாளை அறுவை சிகிச்சை

நவம்பர் 22-ம் தேதி கமலுக்கு, காலில் அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து அவர் ஓய்வெடுக்கவுள்ளதாகவும் மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது. கமல்ஹாசன் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார் . இதன் படப்பிடிப்புக்கு இடையே தனது பிறந்த நாள் கொண்டாட்டம் மற்றும் திரையுலகிற்கு வந்து 60-ம் ஆண்டு கொண்டாட்டம் ஆகியவற்றையும் முடித்துள்ளார். இந்தப் பணிகளுக்கு இடையே மக்கள் நீதி மய்யத்தின் கட்சிப் பணிகளையும் கவனித்து வருகிறார். இந்நிலையில் கமலுக்கு நாளை காலில் அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து அவர் ஓய்வில் இருக்கப் போவதாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் ஆர்.மகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கடந்த 2016-ம் ஆண்டு எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்தின் காரணமாக கமலின் வலது காலில் முறிவு…

மீண்டும் சூர்யா ஜோடியாக அனுஷ்கா?

சூர்யா ஜோடியாக அனுஷ்கா நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. சூர்யா என்.ஜி.கே. படத்துக்கு பிறகு கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்த ‘காப்பான்’ படம் சமீபத்தில் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது. தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்த சூரரை போற்று படப்பிடிப்பு முடிந்து தற்போது டப்பிங், ரீரிக்கார்டிங், கிராபிக்ஸ் பணிகள் நடக்கின்றன. இதில் அபர்ணா பாலமுரளி, மோகன்பாபு, ஜாக்கி ஷெராப் ஆகியோரும் நடித்துள்ளனர். அடுத்து அவரது 39-வது படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இந்த படத்தை ஹரி இயக்குவதாக பேசப்படுகிறது. இவர்கள் கூட்டணியில் ஆறு, வேல் படங்களும் சிங்கம் படத்தின் 3 பாகங்களும் வந்துள்ளன. பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை சமீபத்தில் திரைக்கு வந்த அசுரன் ஆகிய படங்களை எடுத்த வெற்றி மாறன் இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கவும் பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்த நிலையில் கவுதம் மேனன் இயக்கும்…

அஜித்தின் ‘வலிமை’ஜேம்ஸ்பாண்ட் பட சண்டை பயிற்சியாளர்

அஜித்தின் 'வலிமை' படத்திற்கு ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு சண்டை காட்சிகள் மற்றும் கார் சேசிங் காட்சிகள் அமைக்கும் ஹாலிவுட் சண்டை பயிற்சியாளர் ஒப்பந்தம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து 'வலிமை' படத்தில் நடிக்கிறார் அஜித். இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். கடந்த அக்டோபர் மாதம் 18-ம் தேதி 'வலிமை' படம் பூஜையுடன் தொடங்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பு டிசம்பர் மாதத்தில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் நடிகர் அஜித், காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். மேலும் அஜித்தின் 'கார் சேசிங்' காட்சிகளும் இடம் பெறும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் 'கார் சேசிங்' காட்சிகளை பிரமாண்டமாக அமைத்துக் கொடுக்கும் ஹாலிவுட் கலைஞர்களில் ஒருவரான ஹென் கொலின்ஸ் என்பவரை தமிழகத்துக்கு அழைத்து வர பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…

என்னை வாழ வைக்கும் தமிழ் மக்களுக்கு நன்றி – ரஜினிகாந்த்

என்னை வாழ வைக்கும் தமிழ் மக்களுக்கும், விருது வழங்கிய மத்திய அரசுக்கும் நன்றி என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார். இந்திய அரசின் திரைப்படத்துறை சார்பில் கோவாவில் 50-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது. 50-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா விழாவை மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இன்று தொடங்கி, 28-ந்தேதி வரை தொடர்ந்து 9 நாட்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில், கோவாவில் நடைபெறும் 50-வது சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு “ஐகான் ஆப் கோல்டன் ஜுப்ளி“ விருது வழங்கப்பட்டது. மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோர் இணைந்து ரஜினிகாந்துக்கு விருதை வழங்கினர். விருதை பெற்றுக்கொண்ட பின் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:- என்னை வாழ வைக்கும் தமிழ்…

உலகத் தமி­ழ­ருக்கு தேசிய தலைவர் பிர­பா­கரன் மட்­டுமே கருணா

இறுதி யுத்­தத்தின் பின் அப்­போ­தைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷவின் வேண்­டு­கோ­ளுக்கு அமை­வா­கவே நான் யுத்தம் இடம்­பெற்ற இடத்­துக்கு சென்று சட­லத்தை அடை­யா­ளப்­ப­டுத்­தி­னே தவிர அதற்கு முன் நான் ஒரு போதும் அப்­ப­கு­திக்கு செல்­ல­வில்லை என முன்னாள் பிரதி அமைச்சர் விநா­ய­க­மூர்த்தி முர­ளி­தரன் (கருணா) தெரி­வித்­துள்ளார். மன்­னாரில் நேற்­று­முன்­தினம் இடம்­பெற்ற மக்கள் சந்­திப்­பின்­போதே அவர் இதனைக் குறிப்­பிட்­டுள்ளார். இங்கு அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில், இறுதி யுத்­தத்தில் தலைவர் வேலுப்­பிள்ளை பிர­பா­கரன் கொல்­லப்­பட்­டுள்­ள­தாக கூறு­கின்­றார்கள். நீங்கள் மட்டும் சென்று உறு­தி­ப்ப­டுத்தி கூறினால் மட்­டுமே நான் நம்­புவேன் என அப்­போ­தைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ என்­னிடம் கூறினார். நான் அவ்­வாறு நடந்­தி­ருக்­கக்­கூ­டாது என நினைத்து களத்­துக்குச் சென்றேன். அங்கு சென்று பார்த்தேன் அவர் தான். ஆனால் அத­னைக்­கூட எங்­க­ளு­டை­ய­வர்கள் உரிமை கோரு­கின்­றார்கள் இல்­லையே. அவர் வருவார், அவர் வருவார்…

ஐனாதிபதியால் இந்த நாட்டிற்கு எந்த நன்மையும் கிடையாது

ஐனாதிபதியால் இந்த நாட்டிற்கு எந்த நன்மையும் கிடையாது என ஜக்கிய சோசலிசக் கட்சியின் தலைவர் சிறீதுங்க ஜெயசூரிய தெரிவித்தார் யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடவியலாளர் மாநாட்டிலே இதனைத் தெரிவித்தார் அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் ஐனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தனது முதலாவது உரையில் தான் சிங்கள பொளத்த மத வாக்குகளால் தான் தெரிவு செய்யப்பட்டேன் ஆகையால் அவைக்கே முன்னுரிமையேன்றவாறு தனது கருத்துக்களை கூறியுள்ளார் அவ்வாறு கூறுபவர் ஏனைய மக்களுக்கு எதையும் செய்யமாட்டார் இதுமட்டுமன்றி பெளத்த மதம்பற்றி கூறியுள்ள போதும் ஏனைய மதங்களைப்பற்றி எதையும் கூறவில்லை ஆகையால் பெளத்த மதத்தையே முன்னுரிமைப்படுத்துவார் மேலும் அவர் மீதான வழக்குகள் இருந்த போது அதற்கு சமுகமளிக்காது பாதுகாப்பு காரணங்கள் கூறியவர் இனிவரும் காலத்தில் அவைதொடர்பான வழக்குகள் இடம்பெறமாட்டாது பாதிக்கப்பட்டமக்களுக்கு ஏத்தகைய நன்மைகளையும் அவர் செய்யப்போவதும் இல்லை சிங்கள பெளத்த…

254 சிறைக் கைதிகள் விடுதலை

சிறு குற்றங்களுக்காக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த 254சிறைக் கைதிகள் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பரிந்துரைக்கமைய பொது மன்னிப்பின் கீழ் மேற்படி 254சிறைக் கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் பந்துல ஜயசிங்க தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், கொலை, கொள்ளை, பாலியல் துஷ்பிரயோகம் சிறுவர் துஷ்பிரயோகம், போதைப் பொருள் வர்த்தகம் ஆட்கடத்தல் உள்ளிட்ட பாரிய 30குற்றங்களுக்குட்பட்ட குற்றவாளிகளுக்கு விடுதலை வழங்கப்படவில்லை. சிறு குற்றங்கள் புரிந்துள்ள 65வயதுக்கும் மேற்பட்டவர்களே பெரும்பாலும் விடுவிக்கப்பட்டனர். கடந்த 3மாதங்களுக்கு முன்னர் சிறைச்சாலைகள் தலைமையகம் ஜனாதிபதிக்கு வழங்கிய பட்டியலுக்கு அமைய கடந்த 13ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்படி 254சிறைக் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்குவதற்கான அனுமதியை வழங்கியிருந்ததார் என்றார்.