ட்ரம்புக்கு எதிராக வாக்களிக்க 52% அமெரிக்கர்கள் முடிவு

அடுத்தாண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபர் ட்ரம்ப் மீண்டும் போட்டியிட்டால் அவருக்கு எதிராக வாக்களிக்க போவதாக 52 சதவீத பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபராக உள்ள டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரியுடன் முடிவடைகிறது. புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. அந்நாட்டு சட்டப்படி அதிபராக பதவி வகிக்கும் ஒருவர் மீண்டும் ஒருமுறை மட்டுமே போட்டியிட முடியும். மீண்டும் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் களமிறங்க ட்ரம்ப் முடிவு செய்துள்ளார். அவர் குடியரசு கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட அதிகமான வாய்ப்புகள் உள்ளன. அதேசமயம் ஜனநாயக கட்சியின் சார்பில் யார் வேட்பாளர் என்பது இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. இந்த நிலையில், அமெரிக்காவில் அதிபர் தேர்தல் தொடர்பாக ராஸ்மூசன் நிறுவனம் அண்மையில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும்…

சந்திரயான்கவனத்தை திசை திருப்பும் முயற்சி

சந்திரயான் விண்கலம் நிலவுக்கு அனுப்பப்படுவது இது முதல்முறையா என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். நிலவை ஆராய்வதற்காக இந்திய விண் வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ‘சந்திரயான்-2’ விண்கலத்தை ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 22-ம் தேதி விண்ணில் செலுத்தியது. பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வந்த சந்திரயான் விண்கலம் பின்னர் இதில் இருந்து விலகி, நிலவின் சுற்றுப்பாதையில் வலம் வருகிறது. பின்னர் பல நிலைகளை அடைந்து தற்போது இறுதிகட்டத்தை நோக்கி சந்திரயான் விண்கலம் அடைந்துள்ளது. 48 நாட்கள் பயணத்துக்குப் பிறகு, சந்திரயானின் லேண்டர் பகுதி நாளை (செப்டம்பர் 7) அதிகாலை நிலவின் தென்துருவத்தில் மெதுவாக தரையிறங்க உள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் மேற்குவங்க சட்டப்பேரவையில் பேசிய அம்மாநில முதல்வர் மம்தா…

சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு இழப்பீடு – அர்ஜுன

பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கான உரித்துக்களை உறுதிப்படுத்தினால் அதற்கான தக்க இழப்பீடுகளை வழங்கத் தயாராக இருப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க பாரளுமன்றில் தெரிவித்தார். அத்துடன் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் முதற்கட்ட அபிவிருத்திப் பணிகளை விரிவுபடுத்தும் நோக்கில் 349 ஏக்கர் பொது மக்களின் காணிகள் 1950 – 1960 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுவிகரிக்கப்பட்டன. 716 பேர் இக்காணிகளின் உரிமையாளர்களாக இருந்துள்ள நிலையில், அவர்களில் 215 பேருக்கு மட்டுமே இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன. ஏனையவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதற்கான சான்றுகள் இல்லை. இக்காணிகளுக்கான உரித்தை உரியவர்கள் உறுதிப்படுத்தினால் இழப்பீடுகளை வழங்க நான் தயார். மேலும், பலாலி விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிக்கென 1984 ஆம் ஆண்டு 397 உரிமையாளர்களது 64 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்பட்டன, இவர்களுக்கான…