சந்திரயான்கவனத்தை திசை திருப்பும் முயற்சி

சந்திரயான் விண்கலம் நிலவுக்கு அனுப்பப்படுவது இது முதல்முறையா என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

நிலவை ஆராய்வதற்காக இந்திய விண் வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ‘சந்திரயான்-2’ விண்கலத்தை ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 22-ம் தேதி விண்ணில் செலுத்தியது. பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வந்த சந்திரயான் விண்கலம் பின்னர் இதில் இருந்து விலகி, நிலவின் சுற்றுப்பாதையில் வலம் வருகிறது. பின்னர் பல நிலைகளை அடைந்து தற்போது இறுதிகட்டத்தை நோக்கி சந்திரயான் விண்கலம் அடைந்துள்ளது.

48 நாட்கள் பயணத்துக்குப் பிறகு, சந்திரயானின் லேண்டர் பகுதி நாளை (செப்டம்பர் 7) அதிகாலை நிலவின் தென்துருவத்தில் மெதுவாக தரையிறங்க உள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் மேற்குவங்க சட்டப்பேரவையில் பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இதுபற்றி குறிபிட்டார்.

‘‘சந்திரயான் விண்கலம் நிலவுக்கு அனுப்பப்படுவது இது முதல்முறையா. இவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இதுபோன்ற எந்த முயற்சியும் மேற்கொள்ளப்பட வில்லையா. சந்திரயான் குறித்து தகவல்களை பரவச் செய்யும் இந்த நடவடிக்கை எல்லாம், பொருளாதார பேரழிவில் இருந்து கவனத்தை திசை திருப்பும் முயற்சி’’ எனக் கூறினார்.

Related posts