Month: September 2019
சவுதி, ஈரான் போர் மூண்டால்..? சவுதி இளவரசரின் நேற்றைய பேட்டி..!!
சைக்கிள் ஓட்டத்தில் நேற்று உலக கிண்ணம் வென்ற இளைஞனும் நீங்களும்..!
சவுதி இளவரசரை பலியெடுக்க தலைக்கு மேல் சுற்றும் ஜமாலின் ஆவி.. சி.ஐ.ஏ..!
நேற்று டென்மார்க்கில் ஒபாமா ஆற்றிய 80 லட்சம் ரூபா தன்னம்பிக்கை பேச்சு தமிழில்
மூன்று புதிய ஐபோன்களில் எதை வாங்கலாம்.. தமிழில் விளக்கும் காணொளி..!
அம்மா உங்களைத் தேடி வந்துருக்கேன் :பெற்றோரைத் தேடும் டென்மார்க் இளைஞர்
ஐ.நா. சபையில் புறநானூற்றை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி
ஐ.நா. பேரவையில் நேற்று (செப். 27) உரையாற்றிய பிரதமர் மோடி, 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்னும் புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டினார். ஐ.நா. கூட்டத்தில் அவர் பேசும்போது, ''ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான பண்பாடு இந்தியப் பண்பாடு. இந்தியாவின் வளர்ச்சி, வளரும் நாடுகளுக்கு உதாரணம். வளரும் நாடுகளுக்கு உதவ நாங்கள் விரும்புகிறோம. அனைத்து மக்களையும் , எங்கள் மக்களாக கருதுகிறோம். புது இந்தியா, பன்னாட்டு நோக்கங்களைக் கொண்டதாகவே இருக்கும். எங்கள் நாட்டின் வளர்ச்சியே எங்களுடைய கனவு. எங்கள் நாட்டின் வளர்ச்சி, உலக நாடுகளுக்கு உதவும் வகையில் இருக்கும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என 3,000 ஆண்டுகளுக்கு முன்பே எங்கள் நாடு கூறியது'' என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதுகுறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் கவிஞர் வைரமுத்து கருத்துத் தெரிவித்துள்ளார். அவரின் பதிவில், ''ஐ.நா. சபையில் தமிழ்…
நம்ம வீட்டு பிள்ளையா MGR இன் எங்க வீட்டு பிள்ளையா ? விமர்சனம் !
யார் என்ன பேசினாலும் எங்களுக்கு கவலையில்லை
நடிகர் விஜய் ஜனநாயக நாட்டின் குடிமகன் என்ற முறையில் சுபஸ்ரீ மரணம் தொடர்பாக கருத்து தெரிவித்தார் என்று விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார். நாகர்கோவிலில் எஸ்.ஏ.சந்திரசேகர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது:- நடிகர் விஜய் ஜனநாயக நாட்டின் குடிமகன் என்ற முறையில் சுபஸ்ரீ மரணம் தொடர்பாக கருத்து தெரிவித்தார். அதற்கு எதிராக யார் பேசினாலும் எங்களுக்கு கவலையில்லை. தமிழ் திரைத்துறை வளர்ச்சிக்காக தமிழக அரசு தற்போது எடுத்துவரும் சில நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது. பிகில் படத்தை வெளியிடுவதில் எந்த பிரச்சினையும் இருக்காது என்றார். பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ குறித்து நடிகர் விஜய் தமிழக அரசை மறைமுக சாடினார். அதற்கு தமிழக அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.