இம்சை அரசன் 24-ம் புலிகேசியில் வடிவேலுக்கு பதில் யோகிபாபு?

ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு நடித்த ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படம் ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு நடித்த ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படம் 2006-ல் திரைக்கு வந்து நல்ல லாபம் பார்த்ததால் அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகள் நடந்தன. இதற்கு இம்சை அரசன் 24-ம் புலிகேசி என்று பெயர் வைத்தனர். அரண்மனை அரங்குகள் அமைத்து சென்னையில் படப்பிடிப்பையும் தொடங்கினர். இந்த படத்தில் சில நாட்கள் நடித்த வடிவேலு இயக்குனர் சிம்புதேவனுடன் ஏற்பட்ட மோதலால் படத்தில் இருந்து விலகினார். தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் படத்தில் நடித்துக் கொடுக்கும்படி வற்புறுத்தியும் வடிவேலு ஏற்கவில்லை. படம் நின்று போனதால் ரூ.9 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று ஷங்கர் கூறினார். அந்த பணத்தை கொடுக்குமாறு வடிவேலுவை வற்புறுத்தினர். புதிய படங்களில் அவரை ஒப்பந்தம் செய்யவும் தடை விதிக்கப்பட்டது. இதனால்…

உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 19. 33

கடவுள் பேரில் நம்பிக்கையும் ஆறுதலும். சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை. ரெகொபோத் ஊழியங்கள் - டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம். நான் தேவனுக்கு முன்பாக ஜீவனுள்ளோருடைய வெளிச்சத்திலே நடக்கும்படி, நீர் என் ஆத்துமாவை மரணத்துக்கும் என் கால்களை இடறலுக்கும் தப்புவியாதிருப்பீரோ? சங்கீதம் 56: 13 கடந்த சிலமாதங்களாக இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் துயரங்களை பத்திரிகையில் நாம் அனைவரும் படித்திருப்போம். அவர்களின் வாழ்க்கையில் அமைதி ஏற்படாதவென ஏங்கும் நிலை சகலருக்கும் அதிகரித்து வருவதை நாம் அனைவரும் உணரக்கூடியதாக உள்ளது. அமைதி வருவதைப்போல நிழல் தெரிந்தாலும் அது கானல்நீரைப்போல மறைந்து விடுகிறது. அந்த வேதனையின் நிமித்தம் எமக்கு விடுதலை கிடையாத என்ற எண்ணத்துடன் மாத்திரமல்ல, விடுதலையைக் குறித்ததான எண்ணமற்றவர்களாகவும் வாழவேண்டி வருவதைக் காணும்போது நாம் அனைவரும் மிகவும் துக்கப்பட வேண்டியதாக உள்ளது. அப்படியான துன்ப துயரங்களோடு வாழும் மக்களுக்காக இந்த அருமையான தியானத்தை…

காஷ்மீர் பகுதியை மீட்க இந்தியா போருக்கு தயார்

காஷ்மீரில் போருக்கு தயாராவதாக இந்தியா மீது மற்றொரு குற்றச்சாட்டை அந்த நாட்டு பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார். பாகிஸ்தான் சுதந்திர தினத்தையொட்டி நேற்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் தொலைக்காட்சிமூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், ‘பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீர் பகுதியை மீட்பதற்காக இந்தியா போருக்கு தயாராவதாக, எங்கள் நாட்டு படையினருக்கு வலுவான ஆதாரம் கிடைத்து உள்ளது. ஆனால் இதற்கு தக்க பதிலடி கொடுக்க எங்கள் ராணுவமும் தயாராக இருக்கிறது என்று தெரிவித்தார். காஷ்மீரில் இந்தியா மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளை மீண்டும் கண்டித்த இம்ரான்கான், இந்த நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் நாடுகள்கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்தார். இருநாட்டு உறவுகளை பலப்படுத்துவதற்காக இந்தியா எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் எதிர்வினையாக பாகிஸ்தான் 2 அடி எடுத்து வைக்கும் என்றும் அவர் கூறினார்.

சிந்தித்து செயல்பட்டு உயிர் பிழைத்த கணவர்

கள்ளக்காதலருடன் சேர்ந்து உயிருடன் எரித்து கொல்ல முயன்ற மனைவியிடம் இருந்து சிந்தித்து செயல்பட்டு கணவர் உயிர் பிழைத்துள்ளார். மகாராஷ்டிராவில் பால்கார் மாவட்டத்தின் மாணிக்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தம்பதியினர் வசித்து வருகின்றனர். மனைவி (வயது 28) கள்ளக்காதலருடன் சேர்ந்து இருப்பது கணவருக்கு (வயது 35) பிடிக்கவில்லை. தொடர்ந்து அதனை எதிர்த்து வந்துள்ளார். இதனால் அவரை கொலை செய்ய மனைவி முடிவு செய்துள்ளார். நேற்றிரவு கணவரின் கால்களை கட்டி போட்டு விட்டு கள்ளக்காதலர் உதவியுடன் சூடான எண்ணெயை கணவரின் தலை மற்றும் முகத்தில் ஊற்றியுள்ளார். இதன்பின் அவரது முகத்தில் சுத்தியலால் அடித்தும் உள்ளனர். அந்த நபர் தப்பி வெளியே சென்று விடாமல் இருவரும் தடுத்துள்ளனர். இதனால் அதிர்ந்து போன கணவர் சமையலறையில் இருந்த பாத்திரங்களை ஜன்னல் வழியே வெளியில் தூக்கி எறிந்துள்ளார். இதனை கண்ட அருகில் வசித்தவர்கள்…