உயிர்த்தும் உயிர்க்காத ஞாயிறு தாக்குதல் ரிஷாத் பதியுதீன் விசாரணை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக விசாரணை செய்யும் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு நாளை பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றும் இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளருக்கும், தொழில்துறை அபிவிருத்தி சபையின் பொது முகாமையாளருக்கும் பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் முன் ஆஜராக அழைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பாராளுமன்றத் தெரிவுக் குழு இனிவரும் நாட்களில் நடத்தும் விசாரணைகளின் இரகசியத் தன்மையை பேணுவதற்கு தீர்மானித்துள்ளது.

சில சாட்சி விசாரணைகளின் போது ஊடகங்கள் இன்று விசாரணை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த 19ம் திகதி தெரிவுக்குழு உறுப்பினர்கள் கலந்துரையாடி இந்த தீர்மானத்துக்கு வந்துள்ளனர்.

——–

பண மோசடி செய்ததை தவிர நாட்டில் வேறு எவ்வித அபிவிருத்தியையும் தற்போதைய அரசாங்கம் செய்யவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

தனது ஆட்சிக் காலத்தில் முழு நாட்டிலும் அபிவிருத்தி பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்ததாக அவர் கூறியுள்ளார்.

உனவட்டு பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வௌியிடும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பொதுஜன பெரமுன எந்தவொரு தேர்தலுக்கும் தயார் என்றும், ஜனாதிபதி வேட்பாளர் சம்பந்தமாக எவ்வித பிரச்சினையும் தேவையில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.

நாட்டுக்கும் மக்களுக்கும் அன்பு செலுத்துகின்ற உணர்வுபூர்வமான ஒருவரே வேட்பாளராக முன்னிறுத்துவதாக அவர் கூறியுள்ளார்.

18 மற்றும் 19 வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் உடந்தையாக இருந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

——-

பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டால் கட்டாயமாக தான் ஆஜராவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று (24) கம்பஹா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தெரிவு குழு தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருப்பினும் அதன் பிரதான நோக்கம் உயிர்த் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மக்களை தெளிவூட்டுவதே ஆகும் என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது எதிர்கட்சி தெரிவுக்குழு தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும் கட்சி தவைர்களின் கூட்டத்தின் போது அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க இணக்கம் தெரிவித்திருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

—–

கிளிநொச்சி பிரதேசத்தில் இடம்பெற்ற பாரிய விபத்தில் 04 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன், 03 இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

இராணுவ கவச வாகனம் ஒன்று புகையிரதத்துடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் சுமித் அத்தபத்து கூறினார்.

கொழும்பில் இருந்து யாழப்பாணம் நோக்கி சென்ற புகையிரதத்துடன் குறித்த இராணுவ வாகனம் மோதியுள்ளது.

கிளிநொச்சி 55ம் சந்திப் பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையினூடாக இராணுவ வண்டி செல்ல முற்பட்ட வேளை விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த இராணுவ வீரர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

——

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை அடுத்து, பாதுகாப்பு நிலைமையை கருத்திற்கொண்டு இலங்கைக்கு விதித்திருந்த பயணத்தடையை தளர்த்த அமெரிக்க வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய அவர்களின் சுற்றுலா அறிவுறுத்தல் மட்டத்தை 03 இலிருந்து 02 ஆக சுற்றுலா எச்சரிக்கையை குறைத்துள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரக அலுவலகம் அறிவித்துள்ளது.

எனினும், இலங்கைக்கு பயணிக்கும்போது அவதானத்துடன் இருக்குமாறும் தனது நாட்டு பிரஜைகளுக்கு அமெரிக்க ஆலோசனை வழங்கியுள்ளது.

Related posts