எதிர்ப்புக்கு பயப்படமாட்டேன் என்று நடிகை ஜோதிகா கூறினார்.

ஜோதிகா கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ராட்சசி படத்துக்கு பிறகு அவர் நடிப்பில் ஜாக்பாட் படம் திரைக்கு வருகிறது. சூர்யா தயாரித்துள்ள இப்படத்தை கல்யாண் இயக்கியுள்ளார். இந்நிலையில் ஜோதிகா அளித்துள்ள பேட்டி வருமாறு:- ஜாக்பாட் படத்தில் துணிச்சலான பெண்ணாக நடித்துள்ளேன். இது நகைச்சுவை படம் போல் தெரியும். அதற்கு பின்னால் கதையும் இருக்கும். பெரிய கதாநாயகனுக்கு படத்தில் என்னவெல்லாம் இருக்குமோ அதெல்லாம் இந்த படத்திலும் நிறைய இருக்கிறது. கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் வருகிறேன். நம் கையில் காசு நிறைய வந்தா நிச்சயமா அதை திருப்பி மற்றவங்களுக்கும் கொடுக்கணும். அதுதான் ஜாக்பாட் படத்தின் முக்கியமான கரு. பல இளம் இயக்குனர்கள் எனக்காகவே கதைகளை எழுதுகிறார்கள். அது சந்தோஷமா இருக்கு. ஆனால் ரசிகர்கள் கதாநாயகிகள் படங்களுக்கு பெரிய ‘ஓபனிங்’ கொடுப்பதில்லை. அதுதான் கஷ்டமா…

முரளிதரனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு

இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்கள் சச்சின் தெண்டுல்கர், டோனி ஆகியோரின் வாழ்க்கை திரைப்படங்களாக வெளிவந்தன. கபில்தேவ் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வென்ற நிகழ்வை மையமாக வைத்து ‘83’ என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது. இந்த நிலையில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் வாழ்க்கையையும் சினிமா படமாக எடுக்கின்றனர். முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். படத்துக்கு ‘800’ என்ற தலைப்பை வைத்துள்ளனர். ஸ்ரீபதி ரங்கசாமி டைரக்டு செய்கிறார். இந்த படத்தில் நடிப்பது குறித்து விஜய் சேதுபதி கூறும்போது, “உலக அளவில் கிரிக்கெட் விளையாட்டில் முத்திரை பதித்த முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பது பெருமையாக உள்ளது. இந்த…

மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் தூத்துக்குடி கடல் பகுதியில் கைது

மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதிப் தூத்துக்குடி கடல் பகுதியில் இந்திய உளவுத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். மாலத்தீவு நாட்டின் துணை அதிபராக இருந்தவர் அகமது அதிப். இவர் அந்த நாட்டு அதிபரை கொல்ல முயன்றதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு 15 வருட தண்டனை வழங்கப்பட்டது. 3 வருட ஜெயில் தண்டனைக்கு பிறகு அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். இந்நிலையில் வீட்டுக்காவலில் இருந்த அகமது அதிப் தலைமறைவானார். அவர் எங்கு சென்றார் என்பது மர்மமாக இருந்தது. அகமது அதிப் வெளிநாட்டுக்கு தப்பி சென்று இருக்கலாம் என்று கருதப்பட்டது. இந்த நிலையில் அவர் இந்தியாவிற்கு தப்பி ஓடி இருக்கலாம் என தகவல் வெளியானது. இதற்கிடையே தூத்துக்குடியில் இருந்து சமீபத்தில் 9 பேருடன் சரக்கு கப்பல் மாலத்தீவுக்கு சென்றது. அந்த கப்பல் திரும்பி வந்தபோது 10 பேர்…

மரண தண்டணையை நீக்குவது தொடர்பான சட்டமூலம்

மரண தண்டனையை முற்றாக நீக்குவது குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் எம்.பி.யான பந்துல லால் பண்டாரி கொடவினால் கொண்டுவரப்பட்ட தனிநபர் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. பாராளுமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடியதையடுத்து ஐ.தே .க.வின் காலி மாவட்ட எம்.பி.யான பந்துல லால் பண்டாரி கொடவினால் மரண தண்டனையை இல்லாதொழிப்பதற்கான இச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டது. இச் சட்டமூலத்தை தமிழ் முற்போக்கு கூட்டணி எம்.பி.யான மயில்வாகனம் திலகராஜ் வழி மொழிந்தார். இச் சட்டமூலத்தின்படி ஏதாவது ஒரு சட்டத்தில் மரணதண்டனையை விதித்தல் அல்லது மரண தண்டனையால் தண்டனையளித்தல் என்று கூறப்பட்டிருப்பது இச் சட்டம் அமுலுக்கு வந்தவுடன் வாழ்நாள் சிறைத்தண்டனைமூலம் தண்டனையளித்தல் எனத் திருத்தப்படும் . அத்துடன் இச் சட்டமூலம் அமுலுக்கு வருமுன்னர் மரணதண்டனை வழங்கப்பட்டிருக்கும் எந்த நபரும் அக்குறித்த குற்றத்திற்காக வாழ் நாள்…

தமிழ் மக்களின் பிரச்சினைகளில் கூட்டமைப்பு மௌனம் காப்பது ஏன்?

தமிழ் மக்களின் பிரச்சினைகளில் வாய்திறக்காது மௌனம் காக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதைச் செய்யப்போகிறதென? ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பொது வேட்பாளரையன்றி, தேசிய வேட்பாளரையே களமிறக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இங்கு கருத்துத் தெரிவித்த அவர்; ஜனாதிபதி வேட்பாளர் நாட்டின் மீது பற்றுள்ளவராகவும் நாட்டின் இறைமை, தேசிய பாதுகாப்பு ஆகியவற்றில் பொறுப்புடன் செயற்படுபவராகவும், தேசிய வளங்களை விற்காதவராகவும் இருப்பது அவசியம். நிறுத்தப்படும் வேட்பாளர், அரசியல் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துபவராகவன்றி சகல கட்சிகளுக்கும் தலைமைத்துவம் வகிப்பவராகவும் சிறந்த நோக்கம் கொள்கையுடையவராக இருக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மாகாண சபை தேர்தல் தொடர்பில் தெரிவித்த அவர்: வட,கிழக்கு மக்களுக்காகவே மாகாண சபை…

கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சனின் நினைவேந்தல்

ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் (01) வியாழக்கிழமை நடைபெற்றது. யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு அருகில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியாளர்கள் நினைவு தூபியில் இந்நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. இதன்போது, நினைவு தூபிக்கு மலர் மாலை அணியப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ். பல்கலை கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் ஊடக கற்கை மாணவனும், சாரளம் சஞ்சிகையின் ஆசிரியரும், யாழ்,மாணவர் பேரவையின் முன்னாள் தலைவருமான சகாதேவன் நிலக்சன் கடந்த 2007ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 01ஆம் திகதி அவரது வீட்டில் இருந்த வேளை, அவரது வீட்டிற்கு அதிகாலை 5.00 மணியளவில் சென்ற ஆயுதாரிகள் நிலக்சனை வெளியே அழைத்து அவரது பெற்றோர்கள் முன்னிலையில் சுட்டுப்படுகொலை செய்தனர்.

உணவுப் பொருட்களுக்கு சடலத்தை நறுமணமூட்டும் போர்மலின்

இலங்கையில் உணவு பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் போர்மலின் தொடர்பில் தாம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக கைத்தொழில் மற்றும் வர்தக அலுவல்கள் நீண்டகாலம் இடம்பெயர்ந்த மக்களை மீள குடியமர்த்தல் கூட்டுறவு அபிவிருத்தி தொழிற்பயிற்சி திறனாற்றல் இராஜாங்க அமைச்சர் புத்திக பத்திரண தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தின் வர்த்தக கூட்டுத்தாபனத்தினால் இதனை இறக்குமதி செய்வதற்கான அதிகாரம் பெற்றுக்கொள்ளப்பட்டது. அதற்கு முன்னர் அவ்வாறான நிலை இருக்கவில்லை. இந்த போர்மலின் சடலங்களின் (எம்பாமிற்காக) சடலத்தை நறுமணமூட்டி வைத்திருப்பதற்காக மாத்திரமே பயன்படுத்தப்படும். ஆனால் உணவுப்பொருட்களை நீண்டகாலம் வைத்திருப்பதற்காகவும் தற்பொழுது பயன்படுத்தப்படுவது கவலைக்குரிய விடயமாகும் என்றும் அவர் கூறினார். இதனால் நாட்டில் உள்ள மலர்சாலைகளை பதிவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மலர்சாலைகளின் எண்ணிக்கைக்கு அமைவாக இந்த போர்மலினை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த…

வடக்கிற்கு 2 புதிய புகையிரத சேவைகள்

வடக்கில் இருந்து காங்கேசன்துறை முதல் கொழும்பு வரை இரண்டு புதிய புகையிரத சேவைகள் நாளை (02) முதல் காலை மற்றும் இரவு வேளைகளில் இடம்பெறவுள்ளதாக யாழ். புகையிரத நிலையத்தின் தலைமை அதிகாரி ரி. பிரதீபன் தெரிவித்துள்ளார். கொழும்பு முதல் காங்கேசன்துறை வரையான இரண்டு புதிய புகையிரத சேவைகள் இன்று முதல் காலை மற்றும் இரவு நேரங்களில் ஆரம்பமாகி உள்ளதாகவும் இந்த சேவைகள் தினசரி இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார். யாழில் இருந்து நாளை காலை 6.25 க்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படவுள்ள 4082 இலக்க புகையிரதம், காலை 7.43 க்கு கிளிநொச்சியையும், வவுனியாவை 9.02 க்கும் மாலை 4 மணிக்கு கொழும்பை சென்றடையவுள்ளது. இரண்டாவது புகையிரத சேவையில் 4088 இலக்க புகையிரதம் மாலை 5.40 க்கு காங்கேசன்துறையில் இருந்து புறப்பட்டு யாழ். புகையிரத நிலையத்தை 6.16 க்கு…