பொரு­ளியல் பேரா­சி­ரியர் மு.சின்­னத்­தம்பி கால­மானார்

இந்­திய வம்­சா­வளி மலை­யக சமூ­கத்தின் முதல் பேரா­சி­ரியர் என்ற பெரு­மைக்­கு­ரிய பொரு­ளியல் பேரா­சி­ரியர் மு.சின்­னத்­தம்பி தனது 79 ஆவது வயதில் நேற்று கொழும்பில் கால­மானார்.

கண்டி மாவட்டம் ரங்­கல எனும் பிர­தே­சத்தில் முத்­து­சாமி –முத்­து­வ­டிவு தம்­ப­தி­க­ளுக்கு பிறந்த இவர், அங்­குள்ள தோட்டப் பாட­சா­லையில் ஆரம்பக் கல்­வி­யைத் ­தொ­டர்ந்தார். இவ­ரது தந்தை தோட்ட வெளிக்­கள உத்­தி­யோ­கத்­த­ராவார். 1948 ஆம் ஆண்டு இவ­ரது குடும்பம் தல­வாக்­கலை கல்­கந்த எனும் பிர­தே­சத்­துக்கு இடம்­பெ­யர்ந்­தது. பின்னர் தல­வாக்­கலை அரச சிரேஷ்ட பாட­சா­லையில் சாதா­ரண தரம் வரை பயின்றார். பின்னர் 1959 இல் தெல்­லிப்­பளை மக­ஜனா கல்­லூ­ரியில் உயர்­தரம் பயின்று 1961 இல் பேரா­தனை பல்க­லைக்­க­ழ­கத்­துக்கு தெரி­வாகி பொரு­ளி­யலை விசேட பாட­மாக தொடர்ந்தார். 1965 இல் உதவி விரி­வு­ரை­யா­ள­ராகும் சந்­தர்ப்பம் கிடைத்­தது.

இரண்டு வரு­டங்­களில் நிரந்­தர விரி­வு­ரை­யா­ள­ராகி பின்பு 1969 இல் இங்­கி­லாந்தின் மன்­செஸ்டர் பல்­க­லைக்­க­ழ­கத்தில் பொரு­ளியல் முது­மாணி பட்­டத்தைப் பெற்றார். 1974 இல் பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் சிரேஷ்ட விரி­வு­ரை­யா­ள­ராகி கட­மை­யாற்றி வந்த இவர், 1993 ஆம் ஆண்டு பொரு­ளி­யல்­துறை பேரா­சி­ரி­ய­ரா­கவும் 1997 இல் துறைத்­த­லை­வ­ரா­கவும் தெரிவு செய்­யப்­பட்டு 2006 இல் ஓய்வு பெற்றார். தோட்ட வீட­மைப்பு உட்­கட்­ட­மைப்பு மற்றும் சமூக அபி­வி­ருத்தி அமைச்சின் கீழ் 2006 ஆம் ஆண்டு பத்­தாண்டு திட்ட உரு­வாக்­கத்தில் தொழில் கல்வி சம்­பந்­த­மான குழு­விற்கு தலைமை தாங்கி பல்­வேறு காத்­தி­ர­மான பங்­க­ளிப்பை செய்தார். தேயி­லையின் செழு­மையும் தொழி­லா­ளர்­களின் ஏழ்­மையும் என்ற ஆய்வு நூலிற்­காக 2015 ஆம் ஆண்டு இவ­ருக்கு சாகித்ய விருது கிடைத்­தது.

தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­களின் மாதச்­சம்­பளம் குறைந்த பட்சம் ஆயிரம் ரூபா­வாக இருக்க வேண்டியதன் அவசியம் ஏன் என்­பதை புள்ளி விப­ரங்­க­ளோடு ஆய்வு செய்து வெளி­யிட்ட இவர், மலை­யக பல்­க­லைக் ­க­ழகம் பற்­றிய செயற்­பா­டு­களில் காத்­தி­ர­மான கருத்­துக்­களை முன்­வைத்­தார். அன்­னாரின் பூத­வுடல் அஞ்­ச­லிக்­காக கொழும்பு ஜய­ரத்ன மலர்ச்­சா­லையில் வைக்­கப்­பட்டு, இன்று ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை 4 மணி­ய­ளவில் பொரளை கனத்தை மயா­னத்தில் நல்­ல­டக்கம் செய்­யப்­படும்.

– எம். வாம­தேவன்

Related posts