முதல் காட்சி ரத்து: பைனான்ஸ் சிக்கலில் ஆடை

அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள 'ஆடை' திரைப்படம் பைனான்ஸ் சிக்கலில் இருப்பதால், திட்டமிட்டப்படி வெளியாகவில்லை. ‘மேயாத மான்’ படத்தைத் தொடர்ந்து ரத்னகுமார் இயக்கியுள்ள படம் ‘ஆடை’. நாயகியை மையப்படுத்திய இந்தக் கதையில், பிரதான பாத்திரத்தில் அமலா பால் நடித்துள்ளார். வி.ஜே.ரம்யா, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் இன்று (ஜுலை 19) வெளியாகவிருந்தது. ஆனால், படத்துக்கு வாங்கப்பட்ட பைனான்ஸில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் க்யூப் நிறுவனத்திலிருந்து எந்தவொரு திரையரங்கிற்கு அதன் பாஸ்வோர்ட் அனுப்பப்படவில்லை. பல திரையரங்குகள் படங்கள் வெளியாகாததால், ஏமாற்றத்துடன் ரசிகர்கள் திரும்பியுள்ளனர். விரைவில், பிரச்சினைகளைத் தீர்த்து மாலைக்குள் வெளிக்கொண்டுவர பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழ் திரையுலகில் படங்கள் வெளியாகும் இறுதி நேரத்தில், பைனான்ஸ் சிக்கல் ஏற்பட்டு, வெளியீடு தாமதாவது தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது. பெண் ஒருவர் ஆடையில்லாமல், ஒரு இடத்தில் மாட்டிக்…

மனிதன் நிலவுக்கு செல்கிறான் அங்கேயே தங்குகிறான் நாசா!

மனிதன் நிலவுக்கு செல்கிறான், 'இந்த முறை, அங்கேயே தங்குகிறான் என்று நாசா ட்வீட் செய்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்வெளி ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலவைப் பற்றி ஆராய்வதற்காக இஸ்ரோ ‘சந்திராயன்-1’ என்ற விண்கலத்தை தயாரித்து கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22-ந் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இதன் மூலம் நிலவின் மேற்பரப்பில் நீர் மூலக்கூறுகளை கண்டுபிடிப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆய்வுகளை செய்து முக்கிய பங்கு வகித்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சந்திரயான் 2 விண்கலம், ஜூலை 15 ஆம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு ஏவப்பட இருந்தது. ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 56 நிமிடங்களுக்கு முன்னதாக அதிகாலை 1.55 மணிக்கு, சந்திரயான் 2…

பிக்பாஸில் கமல் பிசி வேலூர் தொகுதியில் போட்டியிடவில்லை

பிக்பாஸில் கமல் பிசியாக உள்ளதால் வேலூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலாக பதிலளித்தார். சென்னை ராயபுரத்தில் உள்ள புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். மாணவிகள் மத்தியில் தாவரவியல் குறித்து கேள்வி எழுப்பிய ஜெயக்குமார், பதிலளித்த மாணவிகளுக்கு 500 ரூபாய் பரிசளித்தார். புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி, மாணவர்களிடையே சுவாரசியமாக பேசி மரங்களை வளர்க்க அறிவுறுத்தினார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:- பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ள பயோமெட்ரிக் கருவியில் இந்தி என்ற குற்றச்சாட்டு குறித்து பதிலளித்த அவர் இந்தியை எந்த வழியிலும் அனுமதிக்கமாட்டோம் என்பதில் உறுதியாக இருப்பதாகவும், பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ள பயோமெட்ரிக் கருவியில் இந்தி இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். திமுக மொழியை வைத்து வியாபாரம்…

வட கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிடேன்

அபிவிருத்தி, வாழ்வாதாரம், எனது அமைச்சின் அமைச்சரவை பத்திரங்கள் தவிர வட கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிடேன் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். உரிமை கோரிக்கைகள் தொடர்பில் எனது தலையீட்டை வடகிழக்கின் மக்கள் பிரதிநிதிகள் எழுத்து மூலமாக கோருவார்களாயின் அவை பற்றி பரிசீலிப்பேன் எனவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், அமைச்சருமான மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார். நேற்று ஜனாதிபதியுடன் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய சில கட்சிகளின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளாமையை பெரிது படுத்த வேண்டாம். இது தொடர்பில் எனக்கு எவர் மீதும் கோபம் கிடையாது. அனைவராலும் கலந்துக்கொள்ள முடியாமை பற்றி நான் எனது கவலையை மட்டுமே பகிர்ந்து கொள்கிறேன். உண்மையில் 11.30 க்கு ஆரம்பமாக வேண்டிய கூட்டத்தை,…

கூட்­ட­மைப்பு எம்.பி.க்கள் பங்­கேற்­காமை கவ­லை

வடக்கு, கிழக்கில் திட்­ட­மிட்­ட­வ­கையில் பௌத்த ஆக்­கி­ர ­மிப்பு இடம்­பெற்று வரும் இந்த வேளையில் ஜனா­தி­ப­தி­யு­ட­னான சந்­திப்பில் தமிழ் தேசி­யக்கூட்.டமைப்பு எம்.பி.க்கள் கலந்­து­கொள்­ளாமை கவ­லை­ய­ளிக்கும் விட­ய­மாகும் என்று மட்­டக்­க­ளப்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ். வியா­ழேந்­திரன் தெரி­வித்தார். கன்­னியா வென்­னீ­ரூற்று பிள்­ளையார் ஆலய விவ­காரம் தொடர்பில் ஆராய்­வ­தற்­காக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை அமைச்சர் மனோ கணேசன் தலை­மை­யி­லான எம்.பி.க்கள் சந்­தித்து பேசி­யி­ருந்­தனர். நேற்று முற்­பகல் நடை­பெற்ற இந்த சந்­திப்பில் கலந்­து­கொண்ட வியா­ழேந்­திரன் எம்.பி. சந்­திப்பை அடுத்து ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளிடம் கருத்து. தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு கூறினார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், இந்த முக்­கிய சந்­திப்பில் கலந்­து­கொள்­ளு­மாறு சகல தமிழ் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் அமைச்சர் மனோ கணேசன் அழைப்பு விடுத்­தி­ருந்தார். வடக்கு, கிழக்கில் திட்­ட­மிட்­ட­வ­கையில் பௌத்த ஆக்­கி­ர­மிப்பு இடம்­பெற்று வரு­கின்­றது. இந்த நிலையில் அவற்றை தடுத்து நிறுத்­த­வேண்­டி­யுள்­ளது. இத்­த­கைய முக்­கிய…

முஸ்லிம் எம்.பி.க்களுடன் பிரதமர் ரணில்

முஸ்லிம் விவாகம், விவா­க­ரத்து மற்றும் தனியார் சட்டம் தொடர்­பான திருத்­தங்­களை இறு­திப்­ப­டுத்­துதல், அமைச்­ச­ர­வைக்கு அடுத்­த­ வாரம் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வி­ருக்கும் மத்­ரஸா சட்­ட­மூலம், ஏப்ரல் 21 தாக்­கு­தலின் பின்னர் கைது ­செய்­யப்­பட்டு தடுத்­து­வைக்­ப்பட்டுள்ள முஸ்­லிம்கள் மற்றும் கல்­முனை வடக்கு பிர­தேச செய­லக விவகாரம் உள்­ளிட்ட சம­கால நெருக்­க­டிகள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டு­வ­தற்­காக நேற்­று­முன்­தினம் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்க அலரி மாளி­கைக்கு அழைத்து பேச்சு நடத்­தினார். இதில் அமைச்சர் அப்துல் ஹலீம், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ஏ.எச்.எம்.பௌஸி, ரிஷாத் பதி­யுதீன், முஜிபுர் ரஹ்மான், எச்.எம்.எம்.ஹரீஸ், அலி­சாஹிர் மௌலானா, பைஸர் முஸ்­தபா, இஸ்­மாயில், எஸ்.எம்.மரிக்கார், காதர் மஸ்தான், மஹ்ரூப் உள்­ளிட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் சட்­டமா அதிபர் திணைக்­கள அதி­கா­ரிகள், பொலிஸ் அதி­கா­ரிகள் உள்­ளிட்ட பலரும் கலந்­து­ கொண்­டனர். முஸ்லிம் தனியார் சட்டம் முஸ்லிம் தனியார் சட்ட விவ­காரம் தொடர்பில் இறுதித் தீர்­மா­ன­மொன்று…

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பினர் ஏன் வரவில்லை ?

கன்­னியா வெந்நீ­ரூற்றுப் பிள்­ளையார் ஆலய விவ­காரம் தொடர்பில் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நேற்று நடை­பெற்ற விசேட கூட்­டத்தில் தமிழ் தேசி­யக்­ கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எவரும் கலந்­து­கொள்­ள­வில்லை. இது குறித்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன இந்த சந்­திப்­பின்­போது கேள்வி எழுப்­பி­யுள்ளார். அமைச்­சரும் தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலை­வ­ரு­மான மனோ கணே­சனின் ஏற்­பாட்டில் கன்­னியா வென்­னீ­ரூற்று பிள்ளையார் ஆலய விவ­காரம் தொடர்பில் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இணக்கம் தெரி­வித்­தி­ருந்தார். இதற்­கென நேற்று 11 மணிக்கு விசேட கூட்­டத்­தையும் ஜனா­தி­பதி ஜனா­தி­பதி செய­ல­கத்தில் ஏற்­பாடு செய்­தி­ருந்தார். இந்­தக்­கூட்­டத்தில் அமைச்­சர்­க­ளான மனோ கணேசன் பி. திகாம்­பரம், எம்.பிக்­க­ளான எம். தில­கராஜ், வேலுக்­குமார் மட்­டக்­க­ளப்பு மாவட்ட எம்.பி. வியா­ழேந்­திரன், ஆகிய ஐவ­ருமே கலந்­து­கொண்­டி­ருந்­தனர். இந்த சந்­திப்பில் பங்­கேற்­கு­மாறு தமிழ் தேசியக்­கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் எம்.ஏ. சுமந்­திரன், உட்­பட கூட்­ட­மைப்பு எம்.பி.க்களிடம் அமைச்சர் மனோ கணேசன்…

தமிழர் அரசியலில் புதிய கூட்டணி?

தமிழர் அரசியலில் புதிய கூட்டு அமைப்பது தொடர்பில் வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தலைமையிலான ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்திற்கும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான மாற்று அணி தொடர்பில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்ற நிலையில் விக்கினேஸ்வரன் தலைமையிலான அந்த மாற்று அணிக்கான பேச்சுவார்த்தைகள் குழப்பங்களை தோற்று வித்திருக்கும் நிலையில் மேற்படி இரண்டு தரப்பினர்களுக்கும் இடையே திடீரென இச்சந்திப்பு நேற்று (18) இடம்பெற்றுள்ளது. கூட்டமைப்பிற்கு மாற்றாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வீ. விக்கினேஸ்வரன் தலைமையில் தமிழ்த் தேசியக் மக்கள் முன்னணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, அனந்தி ச்சிதரன் மற்றும் பொ. ஐங்கரநேசன் ஆகியோர் தலைமையிலான கட்சி அல்லது அமைப்புக்களும் இணைந்து புதிய கூட்டணியை அமைக்கவுள்ளதாக…