புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் அதுரலியே ரத்ன தேரர் !

இலங்கைக்கு எதிராக செயற்படும் புலம்பெயர் தமிழர்களுடன் அதுரலியே ரத்ன தேரர் கூட்டணி அமைத்து விட்டார். அதன் காரணமாகவே வைத்தியர் சாபி மீதான குற்றப்புலனாய்வு உள்ளிட்ட உள்நாட்டு விசாரணைகள் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கவேண்டும் என்றும் அதுரலிய தேரர் கூறுவதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜூபுர் ரஹூமான் குற்றஞ்சாட்டினார்.

அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,

குருணாகலை போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் வைத்தியர் மொஹமட் சாபி மீதான குற்றசாட்டுக்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் ஒருக்கட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் அந்த விசாரணை அறிக்கை நீதி மன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வைத்தியர் சாபி தொடர்பான விசாரணைகளை மேலும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமாயின் வைத்திய பிரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

ஆனால் அதுரலியே ரத்ன தேரர், வைத்தியர் சாபி மீதான குற்றபுலனாய்வினரின் விசாரணைகளிலும் உள்நாட்டு விஞ்ஞான ஆய்வுகளிலும் தனக்கு நம்பிக்கையில்லை என்று கூறியுள்ளார்.கடந்த காலங்களில் புலம் பெயர் தமிழர்களும் இலங்கைக்கு எதிராக இவ்வாறான கருத்துக்களையே முன்வைத்து வந்தனர். மேலும் இலங்கை மீது சர்வதேச விசாரணைகள் அவசியம் என்பதே புலம்பெயர் தமிழர்களின் பிரதான வேண்டுக்கோள் என்பது அனைவரும் அறிந்ததே.

வைத்தியர் சாபி மீதான விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலைமையில் குற்றபுலனாய்வு பிரிவின் மீது நம்பிக்கையில்லைள என்று ரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளது புலம் பெயர் தமிழர்களின் எதிர்பாரப்புக்கு ஆதரவளிக்கும் வகையில் அமைந்துள்ளது என அவர் தெரிவித்தார்.

Related posts