பாண்டிய நிலா புத்தகம் அச்சானது நாளை வெளியீடு

தமிழர் தேசிய தந்தை செல்வா பாண்டியர் மரணித்த ஓராண்டு தினம் நாளையாகும். அதன் பொருட்டு உலகின் பல நாடுகளிலும் தமிழர் தேசிய ஒளியூட்டி நாள் என்ற சிறப்பு நிகழ்வு கொண்டாடப்படுகிறது.

இதன் பொருட்டு தோழர் செல்வா பாண்டியரின் வாழ்க்கையையும் அவர் வாழ்ந்த காலத்தே அவர் கூறிய தத்துவங்களையும் உள்ளடக்கி வெளி வருகிறது கி.செ.துரை எழுதிய பாண்டிய நிலா என்ற நூல்.

இந்த நூல் தமிழகம், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட பல்வேறு நாடுகளில் நாளை வெளியீடு செய்யப்படுகிறது. தமிழ்நாடு பரமக்குடியில் இதன் பொருட்டு பாரிய விழா ஒன்று ஏற்பாடாகியிருக்கிறது. நாளை அந்த மண்டபத்தில் புத்தகம் வெளியீடு செய்யப்படுகிறது.

இந்த நூலுக்கு ஒரு சிறப்பம்சம் உள்ளது. அலைகளில் தொடராக வெளி வந்து மக்களின் பாராட்டுக்களை பெற்றது. இப்போது நூல் வடிவில் வருகிறது.

பூமி, ஆகாயம், அண்டவெளி முதற் கொண்டு மடிந்த சாதனை மனிதர்களை இணைத்து, இன்றுள்ள போராட்டங்கள் வரை தழுவி, அமெரிக்கா முதல் சீனாவரையான சித்தாத்தங்களை அலசி , பிரபஞ்ச இரகசியங்கள் பலதை தெளிந்த ஞானத்துடன் பேசி மிகப்பெரும் அறிவியல் வாதாட்டத்தை செய்கிறது பாண்டிய நிலா. மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்புடன் வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நூலை பிரதி பார்ப்பதற்காகப் படித்த தமிழகத்தில் உள்ள ஆசிரியையான திருமதி ரமேஸ் கண்ணா எழுதிய விமர்சன உரை கீழே தரப்படுகிறது.

——–

இப்படியான ஒரு மகத்தான உயிரும் ரத்தமுமாக தமிழர்களுக்காக வாழ்ந்து மறைந்த சிறந்த மாமனிதர் தமிழர் தேசிய தந்தை மேதகு செல்வா பாண்டியரின் “பாண்டிய நிலா” என்கிற காவியத்தை படைத்த ஐயா மாஸ்டர் துரை அவர்களுக்கு நன்றி.

வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த இந்த புத்தகத்தை proof reading செய்ய கிடைத்த அனுபவத்தை நினைத்து நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த புத்தகத்தை வாசிக்கும் போது எனக்கு தமிழர் தேசிய தந்தை செல்வா பாண்டியர் அண்ணன் மற்றும் சுரேசு குடும்பனார் அண்ணனுடன் ஒன்றிணைந்து பயணிப்பது போல் உணர்வு பூர்வமாக இருந்தது.

இப்படியான ஒரு உணர்வு பூர்வமான அனுபவம் வேறு எந்த நூல்களிலும் நான் வாழ்நாளில் படித்தது இல்லை என்பதே உண்மை..

தமிழர் தேசிய தந்தை மேதகு செல்வா பாண்டியர் அண்ணாவை நேரில் பார்த்தது இல்லை நான் என்று நான் சிந்தித்து கவலையுற்ற நாள்கள் உண்டு.

அந்த வருத்தம் இந்த புத்தகத்தை படிக்கும் போது மறைந்து போனது.

நாம் எத்தகைய மாபெரும் சிறப்பு மிக்க மனிதர் வாழ்ந்த இப்பூவுலகில் வாழ்ந்திருக்கிறோம் என்று நினைக்க தோன்றியது.

எழுத்து வடிவத்தில் நம்மால் ஒருவரை கண் முன்னே தோன்ற வைக்க முடியும் என்பதை உணர்ந்தேன்..

கத்தி முனையை விட பேனா முனை வலிமையானது என்பது போல கருத்தியல் என்பது எவ்வளவு பெரிய ஆயுதம் என்பதை தமிழர் தேசிய தந்தை மேதகு செல்வா பாண்டியர் அண்ணனின் வாழ்க்கை புத்தகமான இந்த பாண்டிய நிலா உணர்த்துகிறது.

இப்புத்தகத்தை படிக்கும் ஒவ்வொரு தமிழரும் நம்மை சுற்றி எத்தகைய சூழல் நிலவுகிறது என்பது நன்கு உணர்ந்து கொள்ள முடியும்.

தமிழர்கள் நாம் எப்படிபட்ட வியூகத்தில் சிக்கியுள்ளோம். தமிழர் தேசிய தந்தை மேதகு செல்வா பாண்டியர் அண்ணன மற்றும் பாண்டியர் படை தளபதி சுரேஷ் குடும்பனார் அவர்களின் தியாகத்தை இந்த பாண்டிய நிலா புத்தம் முலம் அறிந்து கொள்ள முடிகிறது.

கொடிய ஓநாய் மத்தியில் இருப்பது போல் ஒரு உணர்வு ஏற்படுகிறது. ஆனாலும் இயற்கை அன்னையின் பேரருளாலும் மதுரை மீனாட்சி அம்மாவின் கருணையாலும், வல்வையிலு குடி கொண்ட முத்து மாரி தாயின் துணையாலும் இந்த உலகம் நல்ல எண்ணத்தில் படைக்கப்பட்டது.

இந்த உலகத்தை தீயவர்களால் அழிக்க முடியாது என்ற எழுத்துக்கள் நமக்குள் எழும் அத்தனை எதிர்மறை சிந்தனைகளையும் அழித்து மனதிற்கு ஒளியூட்டுகிறது.

பாரதி, கம்பர், மற்றும் திருவாசகர் எழுதிய பாடல்களில் இருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ள பாடல்கள் இந்த காவியத்திற்கு மெருகேற்றுகிறது.

தாங்கள் இந்நூலில் கூறியுள்ளது போல் ‘பாண்டிய நிலா’ புத்தகம் தமிழர் வாழும் பகுதியெங்கும் காவியமாய் படிக்க பட வேண்டியது. பாரதமும் இராமாயணம் மட்டும் படிப்புக்குரிய காவியம் அல்ல இந்த “பாண்டியநிலா”வின் ஒளியும் உலகெல்லாம் பரவி மிளிர வேண்டிய ஒன்று தான்.

திருமதி ரமேஸ் கண்ணா


Related posts