பாண்டிய நிலா புத்தகம் அச்சானது நாளை வெளியீடு

தமிழர் தேசிய தந்தை செல்வா பாண்டியர் மரணித்த ஓராண்டு தினம் நாளையாகும். அதன் பொருட்டு உலகின் பல நாடுகளிலும் தமிழர் தேசிய ஒளியூட்டி நாள் என்ற சிறப்பு நிகழ்வு கொண்டாடப்படுகிறது. இதன் பொருட்டு தோழர் செல்வா பாண்டியரின் வாழ்க்கையையும் அவர் வாழ்ந்த காலத்தே அவர் கூறிய தத்துவங்களையும் உள்ளடக்கி வெளி வருகிறது கி.செ.துரை எழுதிய பாண்டிய நிலா என்ற நூல். இந்த நூல் தமிழகம், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட பல்வேறு நாடுகளில் நாளை வெளியீடு செய்யப்படுகிறது. தமிழ்நாடு பரமக்குடியில் இதன் பொருட்டு பாரிய விழா ஒன்று ஏற்பாடாகியிருக்கிறது. நாளை அந்த மண்டபத்தில் புத்தகம் வெளியீடு செய்யப்படுகிறது. இந்த நூலுக்கு ஒரு சிறப்பம்சம் உள்ளது. அலைகளில் தொடராக வெளி வந்து மக்களின் பாராட்டுக்களை பெற்றது. இப்போது நூல் வடிவில் வருகிறது. பூமி, ஆகாயம், அண்டவெளி முதற் கொண்டு மடிந்த…

அஜித்தை ஒருதலையாக காதலிக்கிறேன்

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, பல்வேறு தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் மீது பாலியல் புகார் கூறியவர். தனது முகநூல் பக்கத்தில் தான் அவர் தனது புகார்களை பதிவிடுவார். இந்நிலையில், நடிகை ஸ்ரீ ரெட்டி, நடிகர் அஜித் குறித்து தனது முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், நடிகர் அஜித்தை புகழ்ந்து இருப்பதோடு, அவரை ஒருதலையாக காதலிப்பதாகவும் கூறியுள்ளார். அவர் தனது பேஸ்புக் பதிவில், "அஜித்தின் படத்தை பார்க்காமல் நான் உறங்க செல்ல மாட்டேன். அவர் தமிழ்நாட்டில் நம்பர் 1 ஹீரோ. சர்ச்சைகளில் இருந்து அவர் விலகியே இருப்பார். மிகவும் தன்மையாக பேசக்கூடியவர்.குடும்பத்தை மதிக்கும் மனிதர் அஜித். தனது ரசிகர்களை மிகவும் நேசிக்கிறார். மிகச் சிறந்த மனிதர். சிறந்த கணவர், சிறந்த தந்தை. கோடிக்கணக்கான பெண்களின் இதயங்களை திருடியவர். என் தலை உங்கள் காலில் தல", என…

உடனே திருமணம் திரிஷா திட்டம்

திரிஷா, நயன்தாரா, அனுஷ்கா பற்றி அடிக்கடி திருமண, காதல் கிசுகிசுக்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. நயன்தாரா இயக்குனர் விக்னேஷ்சிவனை காதலிக் கிறார், அனுஷ்கா பிரபாஸை காதலிக்கிறார் என்று தகவல்கள் பரவினாலும் அதை அவர்கள் யாரும் உறுதி செய்யவில்லை. முன்னதாக திரிஷாவுக்கும் நடிகர் ராணாவுக்கும் காதல் என்று கிசுகிசு பரவியது. அதற்கு மாறாக திரிஷாவுக்கு தயாரிப்பாளர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் அந்த திருமணத்தை சில காரணங்களால் ரத்து செய்துவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் திரிஷா. இந்நிலையில் திருமணம் பற்றி அவரிடம் கேட்டபோது தனது எண்ணத்தை வெளிப்படுத்தினார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது திருமணம் குறித்து திரிஷா கூறும் போது,’இப்போதைக்கு நான் யாரையும் காதலிக்கவில்லை. ஆனால், எனக்கான சரியான ஒருவரை நான் சந்தித்து விட்டால் உடனே திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார். திரிஷாவின் பார்வையில் படப்போகும்…

ஆதி – ஹன்சிகா நடிக்கும் ‘பார்ட்னர்’

ஆதி - ஹன்சிகா நடிக்கும் படத்துக்கு ‘பார்ட்னர்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆதி நடிப்பில் கடைசியாக வெளியான தமிழ்ப் படம் ‘யு-டர்ன்’. பவன் குமார் இயக்கிய இந்தப் படம், கடந்த வருடம் (2018) செப்டம்பர் மாதம் ரிலீஸானது. பிரதான வேடத்தில் சமந்தா நடித்தார். தெலுங்கில் வெளியான ‘யு-டர்ன்’ படத்தின் ரீமேக் இது. இந்தப் படத்தைத் தொடர்ந்து, ‘பார்ட்னர்’ என்ற படத்தில் நடிக்கிறார் ஆதி. மனோஜ் தாமோதரன் இந்தப் படத்தை இயக்குகிறார். சற்குணத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய இவர், ‘டோரா’ படத்தில் இணை இயக்குநராகவும் பணியாற்றினார். ஹன்சிகா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தில், ஆதி ஜோடியாக பாலக் லல்வாணி நடிக்கிறார். பாண்டியராஜன், யோகி பாபு, ரோபோ சங்கர், விடிவி கணேஷ், ஜான் விஜய், ரவிமரியா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். காமெடியை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தில்,…

மக்கள் நீதி மய்யம் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல்

மக்கள் நீதி மய்யம் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முதல் 20 வேட்பாளர்களின் பட்டியலை கமல்ஹாசன் வெளியிட்டார். அதில் 50 சதவீதம் தொழிலதிபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ரசிகர் மன்றத்திலிருந்து யாரும் வேட்பாளராக இல்லை என்பது தெரிகிறது. இதுகுறித்து கமல் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: ''நாடாளுமன்றத் தேர்தல் – 2019 மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் பட்டியல் நமக்கான அரசியல் நமக்கான கட்சி என்கின்ற உயரிய நோக்கத்துடன் என்னைப் போல் முன்வைக்கப்பட்டு நமக்கான ஆட்சி அமைக்க வேண்டிஏப்.14 அன்று நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரபூர்வமான வேட்பாளர்களாக கீழ்கண்டவர்கள் கீழ்காணும் தொகுதிகளுக்கு நிறுத்தப்படுகிறார்கள்''. இவ்வாறு கமல் தெரிவித்தார். மக்கள் நீதிமய்யம் வேட்பாளர்களாக அறிவித்துள்ளவர்களில் 50 சதவீதத்தினர் தொழிலதிபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற வேட்பாளர்கள் வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள். கமல் ரசிகர் மன்றத்தை…

சுயநிர்ணய உரிமை குறியீட்டுப்பொருளா ?

சுயநிர்ணய உரிமையை வெறுமனே ஒரு குறியீட்டுப்பொருளாக மட்டும் ஐக்கிய நாடுகளும் இந்த அவையும் தொடர்ந்தும் அணுகுமேயானால் சுயநிர்ணய உரிமைக்காக உண்மையில் போராடிக்கொண்டிருக்கின்ற அனைவரும் தொடர்ந்தும் இலக்குவைக்கப்படுவார்கள் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று ஜெனிவாவில் தெரிவித்தார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று நடைபெற்ற இலங்கை குறித்த விசேட உபகுழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். அத்துடன் இலங்கை அரசின் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை எதிர்கொண்டு நிற்கும் தமிழ்த் தேசமானது ஒருபோதும் பாராதீனப்படுத்தபடமுடியாத தம் சுயநிர்ணய உரிமையை அடைவதற்காக இலங்கையில் தொடர்ந்தும் போராடிக்கொண்டிருக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கு கிழக்கில் சட்டவிரோதமான புதிய சிங்கள குடியேற்றங்கள்

வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் தமிழ்பேசும் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் நகரமான புல்மோட்டையில் தென்னமரவாடிக்கு அண்மையாகவுள்ள பகுதியில் இரண்டு புதிய சிங்கள குடியேற்றங்கள் சட்டவிரோதமான முறையில் உருவாக்கபட்டு வருகின்றமை (RTI) தகவல் அறியும் உரிமைசட்டம் மூலம் பெறப்பட்ட தகவலுக்கு அமைவாக உறுதிப்படுத்தபட்டுள்ளது . PEARL action என்ற ஆய்வுநிறுவனம் கடந்தவாரம் புல்மோட்டையை அண்டிய பகுதியில் நடைபெற்றுவரும் சிங்கள மயமாக்கல் சம்மந்தமாக ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது .இந்த அறிக்கையில் வடக்கு கிழக்கின் எல்லையில் தமிழ் கிராமங்களை அபகரித்து மேற்கொள்ளபட்டுவரும் திட்டமிட்ட சிங்கள ஆக்கிரமிப்பு தொடர்பில் பல தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. தென்னமராவடியிலிருந்து புல்மோட்டை செல்லும் வீதியில் புல்மோட்டை போககவெவ (B60) வீதியில் உள்ள குச்சவெளி பிரதேச செயலர் பிரிவில் வரும் இரண்டு தமிழ் கிராமங்களை ஆக்கிரமித்து பௌத்த பிக்குகளின் ஆதரவுடனும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பாதுகாப்புடனும் வீடமைப்பு…

இலங்கை, புலம்பெயர் அமைப்புக்கள் ஓரணியில்

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்ளும் விடயத்தில் இலங்கை மற்றும் புலம்பெயர் அமைப்புக்கள் அனைத்தும் ஒரணியில் செயற்படுவது தொடர்பாக நேற்றிரவு ஜெனிவாவில் தீவிரமாக ஆராயப்பட்டது. ஜெனிவா கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக இங்கு வந்துள்ள இலங்கை தமிழ் கட்சிகள், அமைப்புக்கள் மற்றும் புலம்பெயர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த கலந்துரையாடலில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு சர்வதேச மேடையிலும் ஐ.நா. மேடையிலும் ஒரு அணியாக எவ்வாறு செயற்படுவது என்பது குறித்து ஆராயப்பட்டது. இதற்காக பொது வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பது தொடர்பாக இதன்போது தீர்மானம் எடுக்கப்பட்டது. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் எம்.ஏ. சுமந்திரன், சிறிதரன், மற்றும் சிவாலிங்கம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் அதன் வெளிவிவகார அமைச்சர் மாணிக்கவாசகர் பிரித்தானிய தமிழ் பேரவையின் பிரதிநிதி ரவிக்குமார், உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதி அருட்தந்தை இமானுவேல் தமிழர் மரபுரிமை பேரவையின் பிரதிநிதி நவநீதன்…

மனித உரிமைகளை ஊக்குவிக்க அரசு தொடர்ந்தும் செயற்படும்

நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிக்கவும் பாதுகாப்பதற்குமான தனது கடப்பாட்டை மீளுறுதிப்படுத்தும் வகையில் அரசாங்கம் தனது இ​ைறமையை பாதுகாக்கத் தொடர்ந்து செயற்படும் என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டார். இலங்கையில் அனைத்து தேவைகளினதும் அடிப்படையில் அமைந்த இது போன்ற சந்தர்ப்பங்களின் போது நாடுகள் எவ்வாறான நிலையில் இருந்தனவோ அவ்வாறான நாடுகளில் உள்ள நிபுணர்களின் கூட்டுறவுடன் தேசிய முறைமை ஊடாக அரசாங்கம் நீதியை உறுதிப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார். தேசிய நல்லிணக்கம் தொடர்பான நாட்டின் முன்னேற்றம் பற்றி ஐ. நா. மனித உரிமை பேரவை நிலைப்பாடு குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்ட அறிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்த போதே நிதி அமைச்சர் மங்கள சமரவீர இவ்வாறு கூறினார். மக்களை திசை திருப்பும் வகையில் அறிக்கை விடுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி தான் இப்போது ஜனாதிபதியும் அல்ல…