கிடைக்குமா நீதி இப்போது ஜெனீவாவில் புலம் பெயர் தமிழர்கள் நீதி கேட்டு..

எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுள்ளன.. இதே கவுண்சிலில் இருக்கும் அதிகாரிகள் இத்தனையாண்டுகளாக ஊர்வலம் வந்து நீதி கேட்ட தமிழர்களுக்கு என்ன செய்தார்கள்.

போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை விட அவர்களை காட்டியே இப்படி மக்களை ஆண்டாண்டு காலமாக ஐ.நா அமைப்பு சீரழித்து வருகிறதே இது நீதியா..?

ஐ.நா செயலரின் நாட்டிலும் இனத்திலும் இப்படியொரு அவலம் நடந்தால் இப்படியா இருப்பார்..?

ஓர் ஆங்கிலேயனுக்கு நடந்தால்..?

ஓர் அமெரிக்கனுக்கு நடந்தால்..?

இப்படியா இழுப்பீர்கள் ஜவ்வுபோல..?

என்ற தமிழர் குரல் கேட்கிறது..!!

மனித உரிமை கவுண்சிலுக்கு தலைமை வகிக்க வருவோர் தமது பதவிக்காலத்தில் காடு, மலை, தீ, பொறி என்று பேசுவார்கள். பதவி முடிந்ததும் அவர்களை எங்கேயென்றும் தெரியாது, பின் புதியவர் வந்து மறுபடியும் அவர் ஊதுகுழலை எடுப்பார்.

ஒரு தடவை அமெரிக்கா தலைமைதாங்கும் எதுவும் நடக்காது..!

பின் பிரிட்டன் தலைமைதாங்கும் பின்போடப்படும்..!

காணாமல் அடிக்கப்பட்டவன் மறுபிறவி எடுத்து வந்து ஜெனீவாவுக்கு ஊர்வலம் போய் தன்னையே தேட வேண்டியளவுக்கு கிடக்கிறது மனித உரிமை சீத்துவக்கேடு என்ற குரல்கள் கேட்கின்றன யாழ். மண்ணில்.

தமிழன் ஜெனீவாவுக்கு ஊர்வலமாக வருவான்.. இத்தனை பேர் ஊர்வலமாக வருவதால் நாமும் பெரிய தாபனம் என்று கருதும் மனித உரிமைகள் கழகம் அதன் மூலம் பெறும் நன்மை என்ன..?

போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் ஒன்பது வருடங்கள் வழக்கு காணி வழக்கு போல ஆயுட் காலம் வரை நீண்டு போவது ஏன்..?

போர் குற்றமா..?

இதுபோன்ற செயல்கள் குற்றமா..?

உலகமே உன் நீதியில் எங்கோ ஓரிடத்தில் பிழை இருப்பது போல தெரிகிறது..!

உலக நீதி பாடிய தமிழனுடைய காதிலேயே பூச்சுற்றுகிறாயே உலகமே..!!

எங்கே பிழை.. சிலவேளை நம்மில்தான் பிழையா..?

இவர்கள் நம்மை வைத்து ஏதாவது காமடி கீமடி பண்ணுகிறார்களா என்று கேட்க வேண்டிய நிலையில் இருக்கிறது மனித உரிமை.. காரணம் மேலும் இரண்டு ஆண்டு அவகாசமாம்..?

தொடர்கிறது தமிழர் ஜெனீவா ஊர்வலங்கள்..

இப்போது நடைபெறும் ஆர்பாட்டங்களின் புகைப்படங்கள்…சில..

அலைகள் 04.03.2019

Related posts