கிடைக்குமா நீதி இப்போது ஜெனீவாவில் புலம் பெயர் தமிழர்கள் நீதி கேட்டு..

எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுள்ளன.. இதே கவுண்சிலில் இருக்கும் அதிகாரிகள் இத்தனையாண்டுகளாக ஊர்வலம் வந்து நீதி கேட்ட தமிழர்களுக்கு என்ன செய்தார்கள். போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை விட அவர்களை காட்டியே இப்படி மக்களை ஆண்டாண்டு காலமாக ஐ.நா அமைப்பு சீரழித்து வருகிறதே இது நீதியா..? ஐ.நா செயலரின் நாட்டிலும் இனத்திலும் இப்படியொரு அவலம் நடந்தால் இப்படியா இருப்பார்..? ஓர் ஆங்கிலேயனுக்கு நடந்தால்..? ஓர் அமெரிக்கனுக்கு நடந்தால்..? இப்படியா இழுப்பீர்கள் ஜவ்வுபோல..? என்ற தமிழர் குரல் கேட்கிறது..!! மனித உரிமை கவுண்சிலுக்கு தலைமை வகிக்க வருவோர் தமது பதவிக்காலத்தில் காடு, மலை, தீ, பொறி என்று பேசுவார்கள். பதவி முடிந்ததும் அவர்களை எங்கேயென்றும் தெரியாது, பின் புதியவர் வந்து மறுபடியும் அவர் ஊதுகுழலை எடுப்பார். ஒரு தடவை அமெரிக்கா தலைமைதாங்கும் எதுவும் நடக்காது..! பின் பிரிட்டன் தலைமைதாங்கும்…

அலைகள் வாராந்தப் பழமொழிகள் 04.03.2019

மேலை நாட்டு தன்னம்பிக்கை நூல்களை படித்து அவற்றை உங்களுக்கு சுருக்கித் தருகிறோம். ஏனென்றால் உங்கள் வெற்றியே எங்கள் வெற்றி.. 01. வெற்றி என்பது உங்கள் சிந்தனையின் அளவால்தான் தீர்மானமாகிறது. 02. எப்போதுமே பிரமாண்டமாக சிந்திக்க வேண்டும். பிரமாண்டமான சிந்தனையாளர் பயன்படுத்தும் வார்த்தைகளை அவதானிக்க வேண்டும். 03. எதிர்காலத்தில் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை உங்கள் மனதில் காட்சிப்படுத்திக் கொள்ளுங்கள். 04. பொருட்களுக்கு மதிப்பை கூட்டுவது போல, உங்கள் பணிகள் குறித்தும் பிரமாண்டமாக சிந்தியுங்கள். 05. அற்பமான விடயங்களை தாண்டி எது முக்கியம் என்பதை சிந்தித்து அதற்கு முதன்மை கொடுத்து நடக்க வேண்டும். 06. காரியங்களை செய்து முடிக்க படைப்பாற்றலுடன் கூடிய புதிய வழிகளை கண்டு பிடியுங்கள். 07. உங்களால் முடியும் என்று நம்புவதன் மூலம் படைப்பாற்றலை வளர்த்துக்கொள்ளுதல். 08. மனதை முடக்கிப் போடும் பாரம்பரிய சிந்தனைகளை எதிர்த்துப்…

ஈழத்து அஜய் நடித்த ஒருவன் திரைக்கு வரப்போகிறது.. கமான் பாய்ஸ்..!!

நயன்தாரா சொன்னால்தான் நம்மாளுக்கு அறம்..! அவ்வையார் சொன்ன அறம் செய்ய விரும்பை அறம் இயக்குநர் படித்திருந்தால் அறம் என்ற பெயரை வைத்து நயன்தாராவை அதில் நடிக்க வைத்திருப்பாரா என்று புகழ் பெற்ற தமிழ் இயக்குநர் ஒருவர் கேட்டது நினைவுக்கு வருகிறது. த்ரிஷா அம்மனா சூலாயுதத்துடன் வந்தால்தான் நம்மாள் பக்திப்படம் பார்க்க வருகிறான்.. இப்படியிருக்கிறது நமது நிலை.. அது மட்டுமா எத்தனை பேர் போராடி செத்தாலும் விளங்காத விடயம் நம்மாளுக்கு விஜய் வந்து ஆளப்போறான் தமிழன் என்று சொன்னால்தானே விளங்குகிறது. எனவே விளங்கக்கூடிய முறையில் சொல்வது ஒரு வழி.. அந்த வழியில் விஜய் பாணியில் வருகிறது ஒரு படம் அதன் பெயர் ஒருவன். யாழ்ப்பாணத்தில் ஒரு விஜய் இருக்கிறார் இவருக்கு பெயர் அஜய் என்று கூறுகிறார்கள். இவரை நாயகனாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ஒருவன். இந்தத் திரைப்படத்தின் பாடல்…

ஜெனீவா புறப்படுகிறார் சி.வி.விக்னேஸ்வரன் மாற்றம் வருமா..?

ஆண்டுக்கு ஒருக்கா வருகுதப்பா நமக்கு ஐந்தாறு மிட்டாய் கிடைக்குதப்பா என்று வருடம் தோறும் ஜெனீவாவில் ஒரு மனித உரிமைக்கூட்டம் நடக்கும் இலங்கை தமிழ் ஊடகங்களில் அது பெரும் செய்தியாகும். பின்னர் மறுபடியும் முடியும்.. ஆனால் அமெரிக்க பிரதிநிதி சமந்தா பவர் கூறியது போல ( அவருக்கும் எழுதி கொடுக்கப்பட்டதுதான்) பிள்ளைகளையும் உறவுகளையும் பறிகொடுத்த தாய் அதே புகைப்படங்களுடன் கண்ணீருடன் நிற்கும் புகைப்படம் வருடா வருடம் தொடரும்... இதற்கு சரியான பதில் ஒன்றை சென்ற வாரம் ரணில் கூறியிருந்தார்.. விடுதலைப் புலிகளும் சிறீலங்கா இராணுவமும் மன்னிக்கப்பட வேண்டும் என்று.. அதற்கு பத்தாண்டு வேண்டும் என்று.. மக்களை மறக்கச் செய்து கைகழுவுவதே மனித உரிமைகள் கழகத்தின் வேலை என்பதை அவர் உரையில் காணலாம். தமிழ் தலைமைகள் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப ஜெனீவா நாடகம் ஆடுகின்றன என்பதை யாழ்ப்பாணத்தில் கண்ணீருடன் நிற்கும்…

தமிழர் தேசிய ஒளியூட்டி நாள் – மார்ச் 21

தமிழர் தேசிய கருத்தியல் எனும் நவீன அறிவுசார் அரசியல் தத்துவத்தை தமிழர்களுக்கு வழங்கி, 500 ஆண்டுகளுக்கும் மேலாக இருள் சூழ்ந்து காணப்படும் தமிழர்களின் அரசியலுக்கு தன் உயிரால் ஒளி கொடுத்து வழிகாட்டிச் சென்றவர் தமிழர் தேசியத் தந்தை செல்வா பாண்டியர் அவர்கள்... தமிழர் தேசிய தந்தை அவர்கள் தன் இன்னுயிரால் தமிழின இளைஞர்களுக்கு தமிழர் தேசிய அரசியல் ஒளியூட்டி சென்ற மார்ச் 21 ம் நாளை தமிழர் தேசிய ஒளியூட்டி நாளாக வழிபட தமிழர் நடுவம் முடிவு செய்துள்ளது ... நடுவத்தின் தலைமையகம் சார்பாக மார்ச் 21 அன்று மாலை 3 மணி அளவில் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகரில் உள்ள AMM மஹாலில் தமிழர் தேசிய ஒளியூட்டி நாள் வழிபாடும் தமிழர் தேசிய கருத்துரை நிகழ்வுகளும் நடைபெறும். ஒளியூட்டியின் அறிவொளியைப் பெற அனைத்து தமிழ்க்குடி உறவுகளையும்…

போதை வஸ்த்து கும்பல் தலைவன் கைது சைவத்தமிழ் புத்தகம் : உலகம்

இன்றைய காலை உலகச் செய்தியில் மூன்று முக்கிய விடயங்கள் இடம் பெறுகின்றன.. சைவத்தமிழ் பண்பாட்டு பேரவை பொதுக்கூட்டம் நேரடி படப்பிடிப்பு.. மாபியா தலைவன் கைது, புதிய புத்தகம் தரும் சிந்தனை.. தாழ்மையும் தன்னடக்கமும் கொண்டு தருகிறோம்.. அலைகள் 04.03.2019

உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 19. 19

தேடி வந்த நேசர் இயேசு. சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை. ரெகொபோத் ஊழியங்கள் - டென்மாhக்கிற்காக பிரார்த்திப்போம். நீங்கள் என்னைத் தெரிந்து கொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்து கொண்டேன். யோவான் 15:16 இன்று மானிடஉலகம் பலபிரச்சனைகளினால் வாடி மனஅமைதியைத் தேடுகிறது. மனிதன் நிம்மதிக்காக ஏங்கி அதை எங்கே கண்டடையலாம் என்று வாஞ்சித்துக் கதறுகிறான். இயற்கையாகவே மனுசனுடைய வல்லமைக்கு அப்பாற்பட்ட ஒரு வல்லமை இருக்கிறதை மனிதன் உணருகிறபடியால், அந்த வல்லமையுள்ள ஒருவர் மூலம்தான் தன்னுடைய பிரச்சனைக்கு தீர்வு காணமுடியும் என்று எண்ணுகிறான். தேடியும் ஓடுகிறான். இயற்கையாகவே மனிதனுடைய உள்ளத்திலே மெய்ப்பொருளைக் கண்டடைய வேண்டும், இறைவனைக் கண்டடைய வேண்டும், மனஅமைதியை, சாந்தியைத்தரும் சக்தியை கண்டடைய வேண்டும் என்ற ஏக்கம் இருக்கிறது. அதற்காக மனிதன் பல இடங்களுக்கு ஓடிச்செல்கிறான். சிலர் பாதயாத்திரை செய்கிறார்கள். சிலர் புண்ணிய ஸ்தலங்களை நாடி ஓடுகிறார்கள். சிலர் தங்களை…