தொழிலை விட்டுவிட்டு கஜானாவை சுரண்டுபவன் நானல்ல : கமல்

அரசியலில் யாரும் சேவை செய்ய வேண்டாம்; தேவையான சம்பளம் தரப்படுகிறது; அதற்கு மேல் எடுத்தால் திருட்டு என்று சென்னை தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்; மற்றவர்களைப் போல் தொழிலை விட்டுவிட்டு கஜானாவை சுரண்டுபவன் நானல்ல; நான் சம்பாதிப்பதில் எனக்கு போக மற்றவர்களுக்கும் கொடுப்பேன் என்று கூறினார். தமிழன் என்பது தகுதி அல்ல விலாசம்; எங்கிருந்து வந்து தமிழகத்தில் பல ஆண்டுகள் தங்கியிருந்தாலும் அவர்கள் தமிழரே; இந்நேரத்தில் யார் சிறந்தவர்கள் என்பதை முடிவு செய்ய வேண்டும்; நாங்கள் சிறந்தவர்களாக இருக்க கடமையைச் செய்வோம் என்று கூறிய அவர், நல்ல கரங்கள் வரும்போது கை கொடுக்க வேண்டும்; நோட்டாவுக்கு வாக்களிக்காதீர்கள் என்று தெரிவித்தார். மேலும் அரசியலில் நல்லவர்கள் மட்டும் இருந்திருந்தால், தான் நிச்சயம் அரசியலுக்கு வந்திருக்க போவதில்லை…

இந்தியன் 2’ படத்தில் சிம்புவுக்குப் பதிலாக சித்தார்த்

இந்தியன் 2’ படத்தில் சிம்புவுக்குப் பதிலாக சித்தார்த் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’. அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் கமல் நடித்தார். இப்படம்தான் கமல் - ஷங்கர் இணைந்து பணியாற்றிய கடைசிப் படம். தற்போது 22 வருடங்கள் கழித்து ‘இந்தியன் 2’ உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 18-ம் தேதி தொடங்கியது. லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில் கமல், காஜல் அகர்வால், டெல்லி கணேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஷங்கர் இயக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்துக்காக, தனது அரசியல் பணிகளுக்கு இடையே உடலமைப்பை மாற்றியமைத்துள்ளார் கமல். பொள்ளாச்சி, சென்னை, ஹைதராபாத் மற்றும் பல வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. எழுத்தாளர்கள்…

தேர்தலை பிற்போட மைத்திரி – ரணிலின் நோக்கம் இதுதான்

எல்லை நிர்ணயத்தை காட்டி மாகாணசபை தேர்தலை பிற்போடும் நோக்கம் ஐக்கிய தேசிய கட்சிக்கும், தனது இருப்பை தக்கவைக்கை முதலில் மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டிய நோக்கம் ஜனாதிபதிக்கும் உள்ளது. எவ்வாறு இருப்பினும் முதலில் மாகாணசபை தேர்தலை நடத்தி மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள் என மக்கள் விடுதலை முன்னணி சபையில் தெரிவித்துள்ளது. யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்களின் நலனுக்காக வட மாகாண தேர்தலை அரசாங்கம் நடத்தவில்லை. சர்வதேச அழுத்தமே வடக்கு தேர்தலை நடத்தக் காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார். மாகாணசபை தேர்தலை நடத்தக் கோரி எதிர்க்கட்சி கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு பிரேரணையின் மீதான விவாதத்தின் போது கருத்து தெரிவிக்கும் போதே ஜே.வி.பி யின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனைக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவரும் ஒரே கட்சி என்பது முரண்பாடு

சம்மந்தரை கவிழ்த்து மகிந்தவுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கொடுத்து, மகிந்த ராஜபக்ஷவின் மகன் திருமண வீட்டுக்கு ரணிலே தலைமைதாங்கி, தீர்வுத்திட்டத்தை ஏமாற்றி காரியம் முடிந்துவிட்டது. இப்போது பழைய செல்வநாயகம் காலத்து குரல் சம்மந்தரிடம் கேட்கிறது.. தமிழருக்கான எந்தவொரு தீர்வும் கிடைக்காது என்று பகிரங்கமாக அறிவித்து, அதிலிருந்து விலகி சாதாரணமாக பாராளுமன்றம் போய் வரவேண்டிய நிலை இப்போது கூட்டமைப்பிற்கு. சிறீலங்கா ஆளும் கட்சியும், ஐ.தே.கவும் ஆடியது முற்றுமுழுதான நாடகம் மட்டுமே என்ற இலக்கு நோக்கி இலங்கை அரசியல் போகிறது. இந்த நிலையில் சம்மந்தர் குரல் இப்படியிருக்கிறது.. அரசின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருக்கும் நிலையில் அதேகட்சியைச் சார்ந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்கியிருப்பது முரண்பாடான செயற்பாடாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (25) ஒழுங்குப் பிரச்சினையொன்றை முன்வைத்து…