300 கோடி ரூபா செலவில் பொன்னியின் செல்வன் : மணிரத்தினம்

தமிழில் கல்கியால் எழுதப்பட்ட பழைய பொன்னியின் செல்வன் நாவலை ஆறு மொழிகளில் திரைப்படமாக எடுக்க இயக்குனர் மணிரத்னம் முடிவு செய்திருக்கிறார்.

இந்த கதையை முன்னர் எம்ஜிஆர் எடுக்க முயற்சி எடுத்து முடியவில்லை, ஏபி நாகராஜன் சிவாஜியை வைத்து எடுக்க முடிவு செய்து மூன்று கோடி ரூபாய் பட்ஜட் போட்டார்.

அந்த நாளில் பெரிய பட்ஜெட் என்பதால் யாரும் பணத்தை கொடுக்க முன்வரவில்லை. தற்போது பாகுபலி பத்மாவதி போன்ற படங்கள் வெற்றி பெற்ற காரணத்தினால் இந்த படத்தை எடுக்கலாம் என்ற நம்பிக்கை வந்தது மணிரத்தினத்திற்கு.

பொன்னியின் செல்வன் கதையை பல ஆண்டுகளுக்கு முன்பே எழுதி முடித்துவிட்டார் தொழில்நுட்பங்கள் வளர்ந்திருப்பதால் அதற்கேற்ப சில மாறுதல்களை செய்திருக்கிறார்.

இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மானை ஒப்பந்தம் செய்து பாடலுக்கான சு10ழலையும் கொடுத்துவிட்டார்.

முதல்கட்டமாக அமிதாப் பச்சன் ஐஸ்வர்யா ராய் ஆகியோரை சந்தித்து பேசி கதையை கொடுத்து இருக்கிறார். தமிழில் ஜெயம் ரவி, சிம்பு, விஜய் சேதுபதி, ஜிவி பிரகாஷ் நடிக்கிறார்கள். n

தெலுங்கில் நடிகர் விஜய் தேரகொண்டா, மலையாள நடிகர் நிவின் பாலி ஆகியோரை நடிக்கலாம் என்று தெரிகிறது. படத்தின் பட்ஜெட் 300 கோடி என்கிறார்கள் இதனை மணிரத்தினம் ஒரு பெரிய நிறுவனத்திற்கு முதல் காப்பி அடிப்படையில் தயாரித்து கொடுக்க முடிவு செய்திருக்கிறார்.

தயாரிப்பு வேலைகள் அதிகம் இருப்பதால் இன்னொருவரை இயக்க சொல்லிவிட்டு மணிரத்தினம் மேற்பார்வை செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.

2020ஆம் ஆண்டில் பொன்னியின் செல்வன் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறார் மணிரத்னம்

Related posts