உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 19: 01

உண்மையுடன் கூடிய கீழ்ப்படிவு. (விசுவாசத் தீர்மானம்) சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை. ரெகொபோத் ஊழியங்கள் - டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம். உன்னதத்தின் ஆறதல் நேயர்கள் அனைவருக்கும் உள்ளம் நிறைந்த புதுவருட நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். புதுவருடத்தில் இருந்து வாழ்க்கையில் அனைத்து தேவைகளிலும் சுபீட்சம் அடைந்து நிறைவாக வாழ வாழ்த்துகிறோன். இன்று உன்னதத்தின் ஆறுதல் நற்சிந்தனை 10 வருடநிறைவை முடித்து ஓர் புதிய ஆண்டிற்குள் காலடி எடுத்துவைக்கிறது. பலருடைய தனிப்பட்ட வாழ்வில் இத்தியானம் ஆறுதலைக் கண்டுகொள்ளும் வழியாக இருந்ததையிட்டு மிகவும் மகிழ்ச்சி அடை கிறேன். பாராட்டு தெரிவித்து வாழ்த்து தெரிவித்த நண்பர்களுக்கு எனது நன்றிகள். அலைகள் ஆசிரியர் திரு. கே. செல்லத்துரை குடும்பத்தினருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேவன் அவர்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதித்பாராக. விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான்போகும் இடம் இன்னதென்று அறியாமல்…

நடிகர் விஜயகாந்திற்கு சிறு நீரகம் மாற்றும் அறுவை சிகிச்சை 17ம் திகதி

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கு, வரும், 17ல், 'கிட்னி' உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடக்கவுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள விஜயகாந்துக்கு, முதலில், சிங்கப்பூர் மருத்துவமனையிலும், பின்னர், அமெரிக்கா மருத்துவனையிலும், சிகிச்சை அளிக்கப்பட்டது. சென்னையில் உள்ள, தனியார் மருத்துவமனையிலும், தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இரண்டாம் கட்ட சிகிச்சைக்காக, மனைவி பிரேமலதாவுடன், அவர் அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். அங்கு, விஜயகாந்திற்கு, 'கிட்னி' மாற்று அறுவை சிகிச்சை செய்ய, டாக்டர்கள் முடிவெடுத்துள்ளனர். கிட்னி தானம் செய்ய முன்வந்தவரும், அமெரிக்கா அழைத்து செல்லப்பட்டுள்ளார். ஒரு வாரத்திற்குள், விஜயகாந்திற்கு ஆப்பரேஷன் செய்ய, முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், பொங்கல் பண்டிகை வருவதால், அறுவை சிகிச்சை தேதி, வரும், 17க்கு மாற்றப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு, விஜயகாந்தின் உடல் நிலையையும், மன நிலையையும் தயார்படுத்தும் வகையில், பல்வேறு சுற்றுலா பகுதிகளுக்கு, அவரை அழைத்து சென்று…

300 கோடி ரூபா செலவில் பொன்னியின் செல்வன் : மணிரத்தினம்

தமிழில் கல்கியால் எழுதப்பட்ட பழைய பொன்னியின் செல்வன் நாவலை ஆறு மொழிகளில் திரைப்படமாக எடுக்க இயக்குனர் மணிரத்னம் முடிவு செய்திருக்கிறார். இந்த கதையை முன்னர் எம்ஜிஆர் எடுக்க முயற்சி எடுத்து முடியவில்லை, ஏபி நாகராஜன் சிவாஜியை வைத்து எடுக்க முடிவு செய்து மூன்று கோடி ரூபாய் பட்ஜட் போட்டார். அந்த நாளில் பெரிய பட்ஜெட் என்பதால் யாரும் பணத்தை கொடுக்க முன்வரவில்லை. தற்போது பாகுபலி பத்மாவதி போன்ற படங்கள் வெற்றி பெற்ற காரணத்தினால் இந்த படத்தை எடுக்கலாம் என்ற நம்பிக்கை வந்தது மணிரத்தினத்திற்கு. பொன்னியின் செல்வன் கதையை பல ஆண்டுகளுக்கு முன்பே எழுதி முடித்துவிட்டார் தொழில்நுட்பங்கள் வளர்ந்திருப்பதால் அதற்கேற்ப சில மாறுதல்களை செய்திருக்கிறார். இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மானை ஒப்பந்தம் செய்து பாடலுக்கான சு10ழலையும் கொடுத்துவிட்டார். முதல்கட்டமாக அமிதாப் பச்சன் ஐஸ்வர்யா ராய் ஆகியோரை சந்தித்து பேசி கதையை கொடுத்து…

‘விஸ்வாசம்’ தான் பெஸ்ட் அஜித்

விஸ்வாசம்' பார்த்துவிட்டு, இது தான் நமது இணைப்பில் பெஸ்ட் என்று அஜித் வாழ்த்தியது குறித்து இயக்குநர் சிவா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, ஜெகபதி பாபு, தம்பி ராமையா, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'விஸ்வாசம்'. சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். இதன் தமிழக உரிமையைக் கைப்பற்றியுள்ள கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம், ஜனவரி 10-ம் தேதி பிரம்மாண்டமாக வெளியிடுகிறது. இதற்கான திரையரங்குகள் ஒப்பந்தம் முடிக்கப்பட்டு, விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. முன்னதாக 'விஸ்வாசம்' படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு அஜித்துக்கு திரையிட்டு காட்டியுள்ளார் இயக்குநர் சிவா. படம் முடிவடைந்தவுடன் சிவாவை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார் அஜித். இது குறித்து சிவா அளித்த பேட்டியில், "நாம் இணைந்து 4 படங்கள் பண்ணியிருக்கோம். அதில் 'விஸ்வாசம்' தான் பெஸ்ட் என்று அஜித் சார்…

புகலிடம் கேட்டு தாய்லாந்தில் கதறிய சவுதி இளம்பெண்

குவைத்தில் இருந்து தப்பித்து ஆஸ்திரேலியா செல்லும் வழியில் தாய்லாந்து வந்திறங்கிய சௌதி அரேபிய பெண் அவரது விருப்பத்துக்கு மாறாக அவரது தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படமாட்டார் என்று தாய்லாந்து குடியேற்றப் பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார். தாம் இஸ்லாம் மதத்தை துறந்துவிட்டபடியால், தம்மை தம் குடும்பத்திடம் திருப்பி அனுப்பினால் தாம் கொல்லப்படலாம் என்று ரஹாஃப் மொஹம்மது-அல்-குனன் என்ற அந்த 18 வயதுப் பெண் தெரிவித்துள்ளார். அடைக்கலம் கோரத் திட்டமிட்டுள்ள அந்தப் பெண் தற்போது ஓட்டல் அறை ஒன்றில் இருக்கிறார். அகதிகளுக்கான ஐ.நா. ஹை கமிஷன் அலுவலர்கள் அவரைத் தொடர்புகொண்டுவருகிறார்கள். தனது குடும்பத்தினரே தன்னை உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் கொடுமைப்படுத்தியதாகக் கூறிய ரஹாஃப், அவர்களிடம் இருந்து தப்பி ஆஸ்திரேலியா செல்ல முடிவெடுத்துள்ளார்.. இதற்காக தாய்லாந்தில் உள்ள சுவர்ணபூமி விமான நிலையம் வந்தவரை சவுதி மற்றும் குவைத் அதிகாரிகள் சுற்றி வளைத்ததாகவும் அவரின்…

மனைவியின் பாம்புக்காலை அடித்து முறித்த கணவன்..

உண்மையில் பாம்பென்று அடித்தாரா இதுதான் சந்தர்ப்பமென அடித்து துவைத்தாரா என்பது சந்தேகம்தான். ஆடை, அணிகலன்களில் அதிக ஆர்வம் கொண்டவர்கள் பெண்கள். பெண்களுக்குத்தான் விதவிதமான டிசைன்களில் உடைகள் உருவாக்கப்படுகின்றன. குறிப்பாக புலி, பாம்பு போன்றவைகளின் உருவங்களும் அவற்றின் வரி, வடிவங்களும் பெண்களின் ஆடைகளில் உருவாக்கப்படுகின்றன. அப்படித்தான் இஸ்லாமாபாத்தில் ஒரு பெண், பாம்பைப் போன்ற உருவ, வடிவம் கொண்ட கால்சட்டையை (stockings) அணிந்திருந்தார். அதுவே அவருக்கு வினையானது. கணவன் வரத் தாமதமானதால், படுக்கை அறையில் இரவு விளக்கை மட்டும் எரியவிட்டுவிட்டுத் தூங்கினார் மனைவி. இரவு தாமதமாக வந்த கணவனுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. குறைவான வெளிச்சத்தில் படுக்கையின் மீது இரண்டு பாம்புகள் இருந்ததுபோலத் தெரிந்துள்ளது. உடனே அருகிலிருந்த பேஸ்பால் மட்டையால் அவற்றைச் சரமாரியாகத் தாக்கினார். உடனே மனைவி வலியால் அலறித் துடித்தார். இதனையடுத்து உண்மையை அறிந்த கணவன், உடனடியாக மனைவியை…

வடக்கு ஆளுநராக புத்தமதம் பற்றி படித்த கலாநிதி சுரேன் ராகவன்

வடக்கு ஆளுநர் றெஜினோல்ட் குரே அங்கிருந்து தூக்கப்பட பல காரணங்கள் கூறப்படுகிறது. அதில் முக்கியமானது அவர் சந்திரிகாவிற்கு விசுவாசமாக இருந்தார் என்பது ஊடகங்கள் தரும் செய்தி. அதுபோல தீவு பகுதிக்கு அவர் பக்கச்சார்பாக நடந்தார் என்பதும், வெளிநாடு வந்தபோது தீவு பகுதி தமிழர்களையே அதிகம் சந்தித்தார் என்பதும், பிரான்சில் இருந்த பழைய தீவுப்பகுதி தொலைக்காட்சி நிர்வாகி இவரை மடை மாற்றினார் என்பதும் இன்னொரு குற்றச்சாட்டு. எது எப்படியோ பழைய ஜே.வி.பியும், இந்தியாவில் ஆயுதப்பயிற்சி எடுத்தவரும், தமிழ் பேசும் ஆற்றல் உள்ளவருமான றெஜினோல்ட் குரேயின் காலம் இனி இல்லை. ஆகவே இப்போது எந்தப்பக்கங்களும் தெரியாத, கலாநிதி சுரேன் ராகவன் வடக்கு கவர்னர் ஆகியிருக்கிறார். இவர் புத்தமதத்தில் உயர்கல்வி கற்றவர் என்று இவரைப்பற்றிய தகவல்கள் கூறுகின்றன. இவர் சக்சபோன் வாத்தியம் வாசிக்க வல்லவர், இந்திய சினிமா நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தவர்…

நியூ கொல்ம்ம ஒன்பது செயற்கை தீவுகள் டென்மார்க்கில் உருவாகிறது

டென்மார்க்கின் தலைநகரை அண்டி, கடற்பகுதியில் ஒன்பது புதிய தீவுகள் உருவாக்கப்பட இருக்கின்றன. இந்தத் தீவுகள் அனைத்தும் 3.1 மில்லியன் சதுர கி.மீ பரப்பளவு கொண்டதாக இருக்கும். இந்த அழகிய புதிய தீவுகளில் மொத்தம் 380 புதிய தொழில் நிறுவனங்கள் அமைவு பெறும், சுமார் 12.000 பேருக்கு நேரடியாக வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும், வேலையாட்கள் வெளிநாடுகளில் இருந்து உயர் தொழில்நுட்ப வல்லுநர்களாக இருப்பர் நிறுவனங்கள் பெருகும். அதனால் அரசாங்கத்தின் பொருளாதார பலம் மேலும் கூடும். மண்ணை வைத்து விண்ணைத் தொடும் திட்டம் என்று இதைக் கூறலாம். காரணம் நாட்டின் பலபகுதிகளிலும் விரைவாக நடைபெறும் கடடுமானப்பணிகள் தோண்டப்படும் ஏராளமான மண்ணை கொட்ட இடமில்லாதளவுக்கு குவிந்து கொண்டிருக்கின்றன. இவற்றை கடலில் கொட்டினால், அதுவும் தலைநகரை அண்டிய 17 கி.மீ நீளத்திற்குக் கொட்டினால் இன்னொரு செயற்கையான சிங்கப்பூர் உருவாகிவிடுமல்லவா.. 18 கி.மீ நீளமான…

டென்மார்க் ரயில்வண்டி விபத்தின் காரணம்தான் என்ன..?

கடந்த புதன் கிழமை டென்மார்க் தலைநகர் போகும் வழியில் பெரிய பாலத்தை அண்டி நடந்த ரயில் விபத்தில் எட்டுப்பேர் மரணித்தது தெரிந்ததே. இந்த விபத்து எப்படி நடந்ததென ஆய்வு செய்த காவ்றிகமிஷன் தனது அறிக்கையை பரிபூரணமாக உறுதி செய்ய சுமார் ஒரு மாத காலம் ஆகும் என்று கூறப்படுகிறது. ஆனாலும் அவர்கள் இன்று சமர்ப்பித்த யோசனைகள் ரயில் விபத்து நடந்தமைக்கான காரணத்தை விளக்குவதாக இருக்கிறது. லாரிகளில் இழுத்துச் செல்லப்படும் பின்னால் உள்ள லாரிப் பெட்டியை சரக்கு ரயில் வண்டியில் ஏற்றி இழுத்துவந்து, பின் அவற்றை லாரிகள் இழுத்துச் செல்லும் முறை ஒன்று இருப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு லாரி பெட்டிகள் ரயில் வண்டியின் இரும்புத்தளத்தில் இறக்கப்படும்போது நடுவில் ஓர் இரும்பு அதில் சரியாக பொருந்த வேண்டும். அப்படி பொருந்தாவிட்டால் பாரிய பிரச்சனை ஏற்படும். அன்றைய…

செயட் மன்சூர் இப்போது மொறோக்கோவில்.. விடுதலையாகலாம்

டென்மார்க்கில் குடியேறி, டேனிஸ் பெண்மணியை மணமுடித்து, குழந்தைகளையும் பெற்று கூடவே குடியுரிமையும் பெற்று ஒரு புத்தகக் கடை நடத்தி வாழ்ந்தவர் செயட் மன்சூர் என்ற மொறோக்கோ நாட்டு பிரஜை. இவர் பயங்கரவாத அல் குவைடா அமைப்பின் ஆதரவாளர் என்று குற்றம் சுமத்தப்பட்டு குடியுரிமை பறிக்கப்பட்டு, சில தினங்களுக்கு முன்னர் மொறோக்கோவிற்கு நாடும் கடத்தப்பட்டுள்ளார். இவரை மொறோக்கோ அரசு சித்திரவதை செய்யும் என்று கூறியிருந்தார் அவருடைய சட்டத்தரணி. ஆனால் இப்போது மொறோக்கோவில் தடுப்புக்காவலில் விசாரிக்கப்பட்டுவரும் 58 வயது மன்சூர் சில தினங்களில் விடுதலை செய்யப்பட்டு இயல்பு வாழ்வு வாழ அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்படுகிறது. டென்மார்க் வரலாற்றில் குடியுரிமை பெற்ற ஒருவர் பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவு தெரிவித்து, நாடுகடத்தப்பட்ட முதல் சம்பவம் இதுவாகும். இந்தச் சம்பவம் மேலும் பல நாடுகடத்தல்களுக்கும், பயங்கரவாத செயற்பாடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செயட்…