கமல் நடிக்கும் படத்தில் 2 நிமிட காட்சிக்கு ரூ.2 கோடி செலவு

இயக்குனர் ஷங்கர் படங்களில் அரங்குகளுக்கு பிரமாண்ட செலவு செய்யப்படுவது வழக்கம் அடுத்து கமல் நடிக்கும் இந்தியன் 2ம் பாகம் இயக்குகிறார். கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். 2.0 படம் முடிந்து ரிலீஸ் ஆனதை தொடர்ந்து இந்தியன் 2ம் பாகத்தில் கவனத்தை முழுமையாக திருப்பி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புக்கான பணிகள் தொடங்கி உள்ளது. சமீபத்தில் ஹாலிவுட்டிலிருந்து வந்த மேக்அப் மேன்கள் கமலுக்கு இந்தியன் தாத்தா கெட்டப் அணிவித்து டிரையல் பார்த்தனர்.

அதேபோல் காஜல் அகர்வாலின் புதிய தோற்றத்துக்கான மேக்அப் அணிவித்து ஸ்டில்ஸ் எடுக்கப்பட்டது. முதல் கட்ட படப்பிடிப்பு நடத்துவதற்காக பிரமாண்ட செட்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. முழுமையாக தங்கம்போல் தகதகவென ஜொலிக்கும் அரங்கு ஒன்று அமைக்கப்படுகிறது. இதற்கு வெளிநாட்டிலிருந்து பொருட்கள் வரவழைக்கப்படுகின்றன. இந்த அரங்கிற்காக மட்டுமே ரூ.2 கோடி செலவழித்திருக்கறேன். படத்திலும் 2 நிமிடம் மட்டுமே இடம்பெறுமாம்.

Related posts