ரணிலை பிரதமராக விடமாட்டேன்.. புலி உறுப்பினர் கைது.! பொட்டு அம்மான்..!

225 எம்.பிகள் கோரினாலும் கூட ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்க முடியாது என ஜனாதிபதி தங்களிடம் அறிவித்ததாக ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். ஜனாதிபதியுடன் நேற்று இரவு நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதிக்கும் ஐ.தே.மு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த கிரியெல்ல எம்.பி, பாராளுமன்றத்தை கலைக்கும் முடிவும் புதிய பிரதமரை நியமித்த முடிவும் தவறு என நீதிமன்றம் அறிவித்துள்ளது.இந்த நிலையில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுள்ள ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்குமாறு நாம் ஜனாதிபதியிடம் கோரினோம். ஆனால் ஜனாதிபதி அதனை நிராகரித்ததாகவும் கிரியெல்ல எம்.பி குறிப்பிட்டார்.

————–

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு பிரதானி பொட்டு அம்மான் இன்னமும் உயிருடன் இருப்பதாக விநாயகமூர்த்தி முரளிதரன் கூறுகின்றார். எனினும் இறுதி யுத்தத்தின் போது பொட்டு அம்மான் இறந்துவிட்டதாக இறுதி யுத்தத்திற்குத் தலைமை தாங்கிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டிருக்கின்றார்.

எனவே இருவரின் கருத்தைப் பொறுத்தவரையில் யுத்தத்திற்கு தலைமை தாங்கியவரின் கருத்தினை ஏற்பதுவே பொருத்தமாக இருக்கும். அத்தோடு இவ்விடயம் தொடர்பில் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

வவுணதீவில் பொலிஸார் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தினை அடுத்து பொட்டு அம்மான் இன்னமும் உயிருடன் இருப்பதாக கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கருத்து வெளியிட்டிருந்தார். இவ்விடயம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடு குறித்து வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

—————-

சகல அமைச்சுக்களின் செயலாளர்களுடனான விசேட கலந்துரையாடலொன்று ஜனாதிபதியின் தலைமையில் இன்று (04) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதியினால் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பிற்கு அமைவாக நியமிக்கப்பட்ட பிரதமர் மற்றும் அமைச்சரவையினர் தமது கடமைகளை நிறைவேற்றுவதனை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நேற்றைய தினம் (03) இடைக்கால தடை உத்தரவு விடுக்கப்பட்டது.

அதற்கமைய நடைமுறையிலுள்ள சட்டத்திற்கமைவாக பொதுச்சேவைகளை எந்தவித தடைகளுமின்றி தொடர்ச்சியாக நிறைவேற்றுவதற்கு தேவையான ஆலோசனைகளும் கட்டளைகளும் சகல அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் ஜனாதிபதி வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் அரச பாதுகாப்பினைப் போன்றே நாட்டுக்கும் பொதுமக்களுக்குமான தமது கடமைகளையும் பொறுப்புக்களையும் குறைவின்றி நிறைவேற்றுமாறு அனைத்து அரச சேவையாளர்கள், முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

—————-

அமைச்சரவையை இடைநிறுத்தியதாக அறிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (03) பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவிற்கு உடன்பட முடியாது என மஹிந்த ராஜபக்‌ஷ எம்.பி தெரிவித்துள்ளார்.

இந்த இடைக்காலத் தடை உத்தரவிற்கு எதிராக இன்று(04) உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். மேன்முறையீட்டு தீர்ப்பையடுத்து நேற்று மாலை விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர்,

அரசியலமைப்பு தொடர்பில்

நேற்று மேற்படி தீர்ப்பை வழங்கியுள்ளது.

பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தும் வகையில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து அதனை விசாரிப்பதற்கு ஐவரடங்கிய நீதிபதிகள் குழு நியமிக்கப்படுவதாகவும் எனினும், மூன்றில் இரண்டு பெரும்பான்மை தமது கட்சிக்கு உள்ளதாகவும் ரஞ்சன் ராமநாயக்க கூறியிருந்தார்.

மேற்படி கருத்துக்களைக் கவனத்தில்கொண்ட பிரதம நீதியரசர் உள்ளிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு, ரஞ்சன் ராமநாயக்க மற்றும் சட்ட மாஅதிபர் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நேற்று அழைப்பாணை விடுத்தது.

————-

மட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் பொலிஸார் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 2 ஆவது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு, கன்னன்துட பகுதியில் வைத்தே 2 ஆவது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் புலனாய்வு பிரிவை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் பலரிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்நிலையிலேயே, சம்பவம் தொடர்பில் மற்றுமொரு முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

வவுணதீவு, வலையிறவு பாலம் அருகில் பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடந்த வியாழக்கிழமை (29) நள்ளிரவு கடமையில் இருந்த பொலிஸார் இருவர் இனந் தெரியாதோரால் துப்பாக்கிச் சுட்டுக்கு இலக்காகியும் கத்தியால் குத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts