இது தான் என் கடைசி படம் : நடிப்புக்கு முழுக்கும் போடும் கமல்

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2ம் பாகத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 2வது வாரத்தில் தொடங்குவதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இதற்காக பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கிறது. முதல்பாகத்தில் வெளிநாடு செல்வதுபோல் அமைக்கப்பட்ட கமலின் இந்தியன் தாத்தா வேடம் தற்போது இந்தியா திரும்பி வருவதுபோல் அமைக்கப்பட்டிருக்கிறது. கமல் மறுபடியும் இந்தியன் தாத்தா கெட்டப் அணிந்து நடிக்கிறார். இதற்காக ஹாலிவுட்டிலிருந்து ஸ்பெஷல் மேக்அப் மேன்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் கமலுக்கு அவர்கள் ஸ்பெஷல் மேக்அப் அணிவித்தனர். இந்நிலையில், இந்தியன் 2 திரைப்படம் தான், தனது கடைசி திரைப்படம் என்று சமீபத்தில் கேரள விமான நிலையத்தில் பேட்டியளித்த கமல்ஹாசன், இந்தியன் 2 தான், தான் நடிக்கும் கடைசி திரைப்படம். நடிப்பதை கைவிட்டாலும், தனது தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து தரமான படங்களை தயாரித்துக் கொண்டிருக்கும், பல சமூக நல பணிகளையும் மேற்கொள்ளும்’ என…

பழைய டேனிஸ் திரைப்படங்கள் டிஜிற்றல் மயப்படுகின்றன

டென்மார்க்கில் திரைப்படங்கள் தயாராகி 100 வருடங்கள் தாண்டிவிட்டன. நூற்றாண்டு பழமை மிக்க எத்தனையோ திரைப்படங்கள் செலுலாயிட் பிலிமிலேயே கிடக்கின்றன. இப்படியே கிடந்தால் இவற்றின் எதிர்காலம் என்ன..? ஒரு காலத்தில் வாழ்ந்த கலைஞர்கள் அந்தக் காலத்திற்கு ஏற்ப தயாரித்த அரும் பெரும் முயற்சிகள் மக்கி மண்ணோடு போவதுதான் நீதியா..? இத்திரைப்படங்களை காப்பாற்ற இதுவரை காலமும் புது வழி எதுவும் இல்லாமையால் சிறப்பு இடங்களில் பாதுகாக்கப்பட்டு வந்தன. இவ்விதம் திரைப்படங்கள், குறும்படங்களாக 415 திரைப்படங்கள் இருக்கின்றன. இவற்றின் காண்பிக்கப்படும் நேரம் 315 மணித்தியாலங்களாகும். இருப்பினும் புததிதாக வந்துள்ள டிஜிற்றல் மயப்படுத்தும் தொழில் நுட்பம் இவற்றுக்கு புது வாழ்வும், மறு பிறவியும் கொடுக்க தயாராக இருப்பதால் புதிய கதவுகள் திறந்துள்ளன. ஆகவே உடனடியாக இவற்றை டிஜிற்றல் மயப்படுத்துங்கள் என்று டென்மார்க்கில் உள்ள மூன்று பெரிய நிறுவனங்கள் 30 மில்லியன் குறோணர்களை வழங்கியுள்ளன.…

கண்ணாடி துகள்கள் கலந்த பியர்களை குடிக்காதிருக்கவும்

டென்மார்க்கில் உள்ள காள்ஸ்பியா நிறுவனம் பியர் உற்பத்தியில் உச்சக்கட்டம் அடையும் காலம் இது. நத்தார் கொண்டாட்டங்கள் களைகட்டும் டிசம்பர் என்றால் அது தப்பல்ல. பரபரப்பாக உற்பத்தி நடைபெறும் காலத்தில் சில வேளைகளில் தொழிற்சாலைகளில் தவறுகளும் நடப்பது இயல்பானதே.. சிலர் காள்ஸ்பியா போத்தலை உடைத்து வாயில் ஊற்றிய பின்னர் நடத்தும் தப்புத்தாளங்களை இவர்கள் போத்தலில் அடைக்கும்போதே நடத்தியிருக்கிறார்கள் அவ்வளவுதான் வேறுபாடு. முப்பது போத்தல்கள் கொண்ட பெட்டிகளில் அடுக்கி அனுப்பப்பட்ட பிளாஸ்டிக் கேஸ்கள் கொண்ட போத்தல்களிலேயே கண்ணாடித்துணிக்கைகள் கலந்துள்ளதாக அறிவித்துள்னர். அத்தோடு சிறிது குப்பைகளும் கடதாசித் துணிக்கைகளும் மிதக்கலாம். இந்த பெட்டிகள் நாடு முழுவதும் ஏறத்தாழ விற்பனையாகியிருக்கின்றன. ஆனால் எல்லாவற்றிலும் பாதிப்பு இல்லை, ஆனால் இதில்தான் தவறு இருக்கிறதென திட்டவட்டமாகக் கூற முடியாது. பாவிப்போரே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதற்கும் கண்டு பிடிக்க வசதியாக உற்பத்தி செய்த காலத்தை தந்துள்ளார்கள்.…

பேட்ட ரஜினியின் புதிய புகைப்படம் வெளியானது.

பேட்ட படத்தில் இளமை தோற்றம் கொண்ட ரஜினியின் புதிய புகைப்படம் வெளியானது. ரஜினிகாந்தின் 2.0 திரைக்கு வந்துள்ள நிலையில் அடுத்து பேட்ட மீது எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்தை பொங்கலுக்கு திரைக்கு கொண்டு வருகின்றனர். அஜித்குமாரின் விஸ்வாசம் படமும் பொங்கலுக்கு வருவதால் இரண்டுக்கும் மோதல் ஏற்பட்டு உள்ளது. பேட்ட படத்தில் ரஜினி ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். சசிகுமார், விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, திரிஷா, நவாஜுதீன் சித்திக், சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ் என்று நிறைய நட்சத்திரங்கள் உள்ளனர். இதன் படப்பிடிப்பு டேராடூன், டார்ஜிலிங், ஆக்ரா மற்றும் சென்னையில் நடந்தது. இந்த படத்தில் ரஜினி விடுதி வார்டனாக நடிப்பதாக தகவல். ஏற்கனவே பேட்ட ரஜினியின் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டனர். அதில் ரஜினி இளமையாகவும், ஸ்டைலாகவும் இருந்ததாக ரசிகர்கள் மகிழ்ந்தனர். இந்த படத்தின் ஒரு பாடலை…

‘2.0’ திரைப்படம் 400 கோடியைத் தாண்டி வசூல்

உலக அளவில் ரூ.400 கோடியைத் தாண்டி வசூல் செய்து, தமிழ் சினிமாவில் புதிய சாதனை படைத்ததுள்ளது '2.0' திரைப்படம். லைகா நிறுவனம் தயாரிப்பில் ரஜினி, அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் '2.0'. ஷங்கர் இயக்கியுள்ள இப்படத்துக்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் வசூல் நிலவரங்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. தமிழை விட தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் நல்ல வசூல் செய்து வருவதால் படக்குழுவினர் சந்தோஷமடைந்துள்ளனர். தற்போது முதல் வார வசூலில் '2.0' திரைப்படம் ரூ.400 கோடியைக் கடந்திருப்பதாக லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனால், ரஜினி ரசிகர்கள் கடும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காரணம் என்னவென்றால் இதுவொரு சாதனையாகும். தனது 'எந்திரன்' படத்தின் சாதனையை, அதன் 2-ம் பாகமான '2.0' கொண்டே…

யு-டியூப் மூலம் ஏழு வயதில் 22 மில்லியன் டாலர்கள்

ஒரு நிமிடம் விழிகளை மூடி உங்கள நினைவென்னும் கால இயந்திரத்தில் பயணித்து உங்கள் ஏழு வயதில் நீங்கள் என்னவெல்லாம் செய்தீர்களென நினைத்து பாருங்கள். பள்ளியில் சக மாணவனுடன் சண்டையிட்டது, அம்மாவிடம் வாங்கிய செல்ல திட்டுகள் என பல நினைவுகள் வரலாம். ரயான் முப்பது ஆண்டுகளுக்கு பின் தனது ஏழு வயது நினைவுகளை அசைப்போட்டால் அவருக்கு மில்லியன் டாலர்கள் மதிப்புடைய நினைவுகள்தான் வரும். ஆம், ஏழு வயதில் ரயான் ஈட்டியது 22 மில்லியன் டாலர்கள். இந்த தொகை யு-டியூப் மூலம் திரட்டப்பட்டது. ஃபோர்ப்ஸ் சஞ்சிகையின் கணக்கின்படி பொம்மை விமர்சகரான ரயான் பிரபல யு-ட்யூபரான ஜேக் பாலை இரண்டாம் இடத்திற்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை ரயான் வெளியிட்ட நீல மர்ம முட்டை காணொளியை மட்டும் லட்சகணக்கானவர்கள் பார்த்து இருக்கிறார்கள். மூன்றாம் இடத்தில் ட்யூட் பெர்ஃபெக்ட் சேனல் 20…

திமுக கூட்டணியின் வேண்டா விருந்தாளி வைகோ..!

வைகோ பிரதமரை விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ளவேண்டும் என மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சமீபத்தில் கஜா புயல், ஏழு பேர் விடுதலை போன்ற விவகாரங்களிலும் மேகதாது அணை கட்டும் விவகாரத்திலும் பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். பிரதமர் மோடியை தமிழ் நாட்டுக்குள் விடமாட்டோம் வந்தால் கருப்புக் கொடி காட்டுவோம் என பேட்டி அளித்திருந்தார். இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: ''மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிரதமரைப் பற்றிப் பேசும் போது சற்று நிதானமுடன் பேசவேண்டும், யாரையோ திருப்திப்படுத்த அவர் இவ்வாறு பேசுகிறார். தமிழகத்தில் பிரதமரை அனுமதிக்க மாட்டோம் கருப்புக் கொடி காட்டுவோம் என்றெல்லாம் பேசுகிறார். பிரதமர் தமிழகம் முழுவதும் பயணம் செய்வார். நீங்கள் முடிந்தால் தடுத்துக்கொள்ளுங்கள். துரைமுருகன் போன்றவர்கள் கூட்டணி குறித்து என்ன…

ரணிலை பிரதமராக விடமாட்டேன்.. புலி உறுப்பினர் கைது.! பொட்டு அம்மான்..!

225 எம்.பிகள் கோரினாலும் கூட ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்க முடியாது என ஜனாதிபதி தங்களிடம் அறிவித்ததாக ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். ஜனாதிபதியுடன் நேற்று இரவு நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஜனாதிபதிக்கும் ஐ.தே.மு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த கிரியெல்ல எம்.பி, பாராளுமன்றத்தை கலைக்கும் முடிவும் புதிய பிரதமரை நியமித்த முடிவும் தவறு என நீதிமன்றம் அறிவித்துள்ளது.இந்த நிலையில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுள்ள ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்குமாறு நாம் ஜனாதிபதியிடம் கோரினோம். ஆனால் ஜனாதிபதி அதனை நிராகரித்ததாகவும் கிரியெல்ல எம்.பி குறிப்பிட்டார். -------------- தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு பிரதானி பொட்டு அம்மான் இன்னமும் உயிருடன் இருப்பதாக விநாயகமூர்த்தி முரளிதரன் கூறுகின்றார்.…

மிசேல் ஒபாமாவின் வாழ்க்கை வரலாறு படைத்தது புதிய சாதனை

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் பாரியார் மிசேல் ஒபாமா எழுதியுள்ள எனது வரலாறு என்ற அவருடைய சுயசரிதை நூல் இன்று ஐரோப்பிய புத்தகச் சந்தைக்கு வருகிறது. இந்தப் புத்தகம் அமெரிக்க வெள்ளை மாளிகையில் வாழ்ந்த வரலாறு கொண்ட அதிபர்களும், முதற் பெண்மணிகளும் எழுதிய புத்தகங்களின் விற்பனைகளை எல்லாம் தகர்த்து புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த நவம்பர் 13ம் திகதி வெளியான இந்த நூல் வெறும் இரண்டே வாரங்களில் அமெரிக்கா, கனடா ஆகிய இரு நாடுகளின் புத்தக சந்தைகளில் இரண்டு மில்லியன்கள் புத்தகங்கள் விற்பனையாகியிருக்கிறது. முதற்தடவையாக மொத்தம் 34 லட்சம் பிரதிகள் அச்சாகியிருக்கின்றன. அத்தோடு ஈ.புக் எனப்படும் மின் புத்தகம், ஒலிப்புத்தகம் ஆகிய மூன்று வடிவங்களில் வெளியாகியிருக்கிறது. இன்று அடுத்த தொகுதி புத்தகங்கள் இங்கிலாந்து புத்தகச் சந்தைக்கு வருகின்றன. நாளை பாரீஸ் என்று அடுத்த சுற்று வியாபகம்…