ராஜபக்ஷவை சர்வதேச போர் குற்ற நீதிமன்றில் நிறுத்த வேண்டும் : பழனிசாமி

தமிழர்களைக் கொன்றுகுவித்த போர்க் குற்றவாளியான ராஜபக் சவை, சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டுமென முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தெரி வித்திருந்தார். நாங்களும் அதையே வலியுறுத்துகிறோம் என்று தமிழக முதல்வர் கே.பழனிசாமி கூறினார்.

கோவையில் செய்தியாளர் களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் காலியாக உள்ள 20 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் எப்போது தேர்தல் அறிவித்தாலும் அதை எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது. 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு, கெட்டவர்களுக்கும், துரோகி களுக்கும் உரிய பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் தொடர் பாக திமுகவினர் நீதிமன்றத்தை நாடியதால்தான் தாமதம் ஏற்பட் டுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கேற்ப, உரிய காலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்.

முல்லை பெரியாறு அணையை யொட்டி கேரள அரசு புதிய தடுப் பணை கட்டும் முயற்சியைத் தடுத்து நிறுத்தக் கோரி பிரதமர் மற்றும் மத்திய நீர்வளத் துறை அமைச் சருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். புதிய தடுப்பணைகள் கட்ட கேரள அரசு விடுக்கும் கோரிக்கைகளை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்.

ஆனைமலை-நல்லாறு திட் டத்தை நிறைவேற்றுவது தொடர் பாக கேரள அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அவர்கள் காலம் கடத்தி வருகின் றனர். பேச்சுவார்த்தை நடத்தி, திட் டத்தை நிறைவேற்ற தமிழக அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளும்.

தமிழர்களைக் கொன்றுகுவித்த போர்க் குற்றவாளியான ராஜபக் சவை, சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டுமென முன் னாள் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார். நாங்களும் அதையே வலியுறுத்துகிறோம்.

இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களில் இருந்து தமிழக மீனவர்களைக் காக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

பட்டாசு உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதற்காக, உச்ச நீதி மன்றத்தில் பட்டாசு உற்பத்தியாளர் களுக்காக தமிழக அரசு சார்பிலும் வாதாடினோம். குறிப்பிட்ட நேரத் தில் மட்டும்தான் பட்டாசு வெடிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது தொடர்பாக கருத்து தெரிவிக்க முடியாது.

முன்னாள் முதல்வர் ஜெய லலிதாவால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே நீக்கப்பட்டவர் தினகரன், அவர் அதிமுக உறுப்பினரே கிடையாது. எனவே, அவரது கருத்துக்கெல் லாம் மதிப்புகொடுத்து பதில் கூறு வது தேவையற்றது. ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட் டுள்ள 7 பேரின் விடுதலை தொடர் பாக ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும். அத்திக்கடவு-அவிநாசி திட்டத்துக்கு விரைவில் டென்டர் விடப்பட்டு, பணிகள் தொடங்கப் படும் என்று முதல்வர் கூறினார்.

Related posts