தீபாவளி விருந்தாக அமீர்கானின் ‘தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்’

இந்தி சினிமாவின் டாப் நடிகர்களான அமிதாப்பச்சன் மற்றும் அமீர்கான் இணைந்து நடித்துள்ள ‘தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்’ தீபாவளி விருந்தாக வரும் நவம்பர் 8ம் தேதி திரைக்கு வருகிறது.

இந்தியில் உருவாகியுள்ள இப்படம், தமிழ் மற்றும் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 1839ம் ஆண்டில் வெளியான ‘கன்பெஷன் ஆப் ஏ தக்’ என்ற நாவலை தழுவி, இந்த படத்தை விஜய் கிருஷ்ணா ஆச்சர்யா இயக்கியுள்ளார், ஆதித்யா சோப்ரா பிலிம்ஸ் பிரம்மாண்டமான முறையில் அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த படமாக உருவாக்கியுள்ளது. 1795ம் ஆண்டு கிழக்கு இந்திய கம்பெனி இந்தியாவுக்கு வந்தது. அப்போது அவர்கள் வணிகம் செய்ய இங்கு வந்தனர். ஆனால் காலப்போக்கில் அவர்கள் நாட்டையே ஆண்டனர். அந்த காலக்கட்டத்தில் பிரிட்டீஸ்கார்களுக்கு ஆசாத் (அமிதாப்) கடும் சவால் விடும் வகையில் போராடுவார்.

இந்நிலையில ஆசாத்தை (அமிதாப்பை) ஒழித்துக்கட்ட பிராங்கியை (அமீர்கான்) பிரிட்டீஸ்காரர்கள் களம் இறக்குகிறார்கள். அவர் பின்னாளில் ஆசாத்துடன் கைகோர்த்து செயல்பட ஆரம்பிக்கிறார். இறுதியில் அமீர்கான் டுவிஸ்ட் அடிக்கிறார். இதனால் நடைபெறும் சம்பவங்களே படத்தின் கதையாக வருகிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் கப்பலில் நடப்பது போன்று இருக்கிறது.

Related posts