தீபாவளி விருந்தாக அமீர்கானின் ‘தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்’

இந்தி சினிமாவின் டாப் நடிகர்களான அமிதாப்பச்சன் மற்றும் அமீர்கான் இணைந்து நடித்துள்ள 'தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்' தீபாவளி விருந்தாக வரும் நவம்பர் 8ம் தேதி திரைக்கு வருகிறது. இந்தியில் உருவாகியுள்ள இப்படம், தமிழ் மற்றும் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. கடந்த 1839ம் ஆண்டில் வெளியான 'கன்பெஷன் ஆப் ஏ தக்' என்ற நாவலை தழுவி, இந்த படத்தை விஜய் கிருஷ்ணா ஆச்சர்யா இயக்கியுள்ளார், ஆதித்யா சோப்ரா பிலிம்ஸ் பிரம்மாண்டமான முறையில் அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த படமாக உருவாக்கியுள்ளது. 1795ம் ஆண்டு கிழக்கு இந்திய கம்பெனி இந்தியாவுக்கு வந்தது. அப்போது அவர்கள் வணிகம் செய்ய இங்கு வந்தனர். ஆனால் காலப்போக்கில் அவர்கள் நாட்டையே ஆண்டனர். அந்த காலக்கட்டத்தில் பிரிட்டீஸ்கார்களுக்கு ஆசாத் (அமிதாப்) கடும் சவால் விடும் வகையில் போராடுவார். இந்நிலையில ஆசாத்தை (அமிதாப்பை) ஒழித்துக்கட்ட பிராங்கியை (அமீர்கான்)…

ராஜபக்சேவுக்கு சுப்பிரமணியன் சுவாமி வாழ்த்து

இலங்கை பிரதமராக பதவியேற்ற ராஜபக்சேவுக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் இலங்கை சுதந்திர கட்சியின் கூட்டணியில் ரணில் விக்கிரம சிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி இடம்பெற்றிருந்தது. 2015 பொதுத் தேர்தலில் இந்தக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பெற்றது. இந்த கூட்டணியில் சமீப காலமாக பிளவு ஏற்பட்டு வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் இரு கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது. பிரதமர் ரணில் விக்கிரம சிங்கேவிற்கு எதிரான சிறிசேன ஆதரவாளர்கள் சிலர் கடந்த ஏப்ரல் மாதம் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு கொண்டு வந்தனர். இந்தநிலையில்,இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே பதவி நீக்கம் செய்யப்பட்டு முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சே பிரதமராக பதிவியேற்ற நிலையில்,…

சிறீலங்கா அரசியல் மாற்றம் தற்போதய நிலவரங்கள் பல..

நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு, கங்காராம விஹாரையில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் விஜயராம மாவத்தையில் உள்ள அவரது இல்லத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந் நிலையில் மஹிந்தவின் வருகையை எதிர்ப்பார்த்து வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்ட ஏனையோர் விஜயராம மாவத்தை வளாகத்தில் காத்துக் கொண்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. --------------- புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்சவிற்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பெரும் பெருமிதத்துடனும் மகிழ்ச்சியுடனும் நான் புதிய பிரதமரை வாழ்த்துகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் தற்போது ஒன்றிணைந்து மீண்டும் ஸ்திரதன்மை வாய்ந்த முன்னேற்றகரமான தேசத்தை கட்டி யெழுப்புவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். ------------------ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காலியில் இருந்து தற்போது அலரிமாளிகை வந்தடைந்துள்ளார்.இன்னும் சற்று நேரத்தில் விசேட…

கிலரி கிளிண்டன்… ( டென்மார்க் கே.எஸ் துரையின் நூல்)

அன்று அவர் வெல்லுவார் முதல் பெண்மணி ஆவார் என்று நானும் மிகவும் ஆவலாக இருந்தேன். வெல்ல வில்லை என்றதும் வேதனைப்பட்டதும் உண்டு. அவர் தோற்கடிக்கப்பட்டார். பெண்மையெனும் மாண்புடை மேன்மையை கண்மையான கருமேகங்கள் மறைப்பதை திண்மையான வேலையாகக் கொண்டதே வண்மை உலக வழக்கு! வெண்மை கிலரி கிளிண்டனும் விதிவிலக்கல்ல என்றதிந்த நூல்.. கையிலெடுத்ததும் வைக்க மனமற்ற மையலுடைய தமிழும், பரபரப்பும், வல்மான், அரதப்பழைய என்ற சொல்லின் பாவனைகளும் ஒரு வல்லமை மொழிபெயர்ப்பு வீரனை துல்லியமாய்த் துப்பறிந்து காட்டியது இத்தனை ஆண்டுகால மொழிபெயர்ப்பு மொத்தத் துளிகளின் திரட்டலின் சத்தான சாரமிது, சேமித்த சொத்தெமக்கு வரம் இது! பொத்தென்று வீழேன்! மீண்டும் நித்தியமாயெழுவேன் என்கிறது அட்டைப்படம்!. அறிவின் ஒளியும் தீர்க்கமும் அறிவுறுத்த, வீழ்வேனென்று நினைத்தாயோ! தெறிக்கும் தன்னம்பிக்கைச் சிரிப்பது! முறியாத முயற்சியும், தேவைக்குக் குறியான மௌனமும் பெண்ணே எறிவேலாகப் பயனாக்கு! என்கிறது.…

ஆச்சரியம் ஆனால் உண்மை மகிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்பு

சிறீலங்கா அரசியலில் ஏதோ ஒன்று நடந்து கொண்டிருப்பது கடந்த சில தினங்களாகவே சந்தேகத்தை கிளப்பியிருந்தது. காடு சுட எலி புறப்படும்.. அல்லது மலிந்தால் சந்தைக்கு வரும் என்பது போல அந்த ஊமைப் பொழுதுகளின் உண்மை இப்போது வெளி வந்திருக்கிறது. எல்லாக் கேள்விகளுக்கும் பதிலாக.. சற்று முன் மகிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றிருக்கிறார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளது. குறித்த அறிவிப்பினை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர சற்றுமுன்னர் அறிவித்துள்ளார். மேலும் விலகுவது குறித்த கடிதத்தை அவர் சபாநாயகருக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றுள்ளார். என்றால் ரணில் விக்கிரமசிங்க இப்போது எங்கே என்ற கேள்விகளுக்கான பதில் இதுவரை இல்லை. என்னது.. மகிந்த பிரதமரா..? புலம் பெயர் நாடுகளில் இந்த…

சாகித்திய சுருதிலயாவின் இதயம் கவர்ந்த இசையரங்கம்

டென்மார்க்கின் புகழ் பெற்ற சங்கீத ஆசிரியை இசைக்கலைமணி குமுதினி பிறித்திவிராஜ் அவர்களுடைய சாகித்திய சுருதிலயா இசைக்கல்லூரி எல்லோர் கவனத்தையும் தொடும் சிறந்த கைங்கரியம் ஒன்றை கடந்த 20.10.2018 சனிக்கிழமையன்று சாத்தியமாக்கியிருந்தது. சாகித்திய சுருதி லயாவில் சங்கீதத்தை முறைப்படி பயின்று வரும் மாணவியரில் ஆறு பேரை சங்கீத அரங்கேற்றம் போன்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு தயார் செய்து அரங்கேற்றியிருந்தனர். கேர்னிங் நகரில் உள்ள இலக்கம் 7 கலாச்சார இல்லத்தில் நடைபெற்றது. அத்தருணம் தனித்தனியாக நடைபெறும் அரங்கேற்றங்கள் போலவே ஆறு மாணவியரும் சிறந்த கர்னாடக இசை நிகழ்ச்சியை வழங்கி அவையை மகிழ்வித்தார்கள். இது சங்கீத அரங்கேற்றமா ? இல்லை இசை நிகழ்ச்சியா ? என்று பிரித்தறிய முடியாதளவுக்கு இசை சமர்ப்பணங்கள் நேர்த்தியாக இருந்தன. ஒவ்வொரு மாணவியும் சுமார் ஒரு மணி நேரம் கொண்ட சங்கீதக்கச்சேரியை நடத்தி பல்வேறுவிதமான பாடல்களையும் அரங்கப்படுத்தினார்கள். இதில்…

சுசிகணேசன் போனில் மிரட்டுகிறார் மீண்டும் அமலாபால்

இயக்குனர் சுசிகணேசன் போனில் தன்னை மிரட்டுவதாக நடிகை அமலாபால் மீண்டும் புகார் தெரிவித்துள்ளார். டைரக்டர் சுசிகணேசன் 13 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் டைரக்டர் லீனா மணிமேகலை புகார் கூறினார். இதனை மறுத்த சுசிகணேசன் மான நஷ்ட வழக்கும் தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் நடிகை அமலாபாலும் சுசிகணேசன் மீது பாலியல் புகார் தெரிவித்து உள்ளார். அமலாபால் கூறும்போது, ‘‘சுசிகணேசன் இயக்கிய திருட்டுப்பயலே–2 படத்தில் நடித்தபோது, அவருடைய இரட்டை அர்த்தம் தொனித்த பேச்சு, முகம் தெரியாத யாருக்கோ அவர் கூறும் பரிந்துரைகள், காரணம் இல்லாமல் உடலை ஒட்டி உரசும் தொல்லைகள் என்று பல்வேறு சங்கடங்களை நான் சந்தித்து இருக்கிறேன்’’ என்றார். பெண்ணியத்துக்கு சிறிதளவும் மரியாதை தர தெரியாத, சுசிகணேசனிடம் லீலா மணிமேகலை என்ன பாடுபட்டு இருப்பார் என்பது எனக்கு புரிகிறது. எல்லா துறைகளில் இருந்தும் மீ…

ரஜினியை கிண்டலடித்து முரசொலி கட்டுரை

கடந்த 23 ந்தேதி ரஜினிகாந்த் வெளியிட்டு இருந்த ஒரு அறிக்கையில் வெறும் ரசிகர்மன்றத்தை வைத்துக்கொண்டு அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்கமுடியும் என்று யாராவது நினைத்தால், அவரது புத்தி பேதலித்துள்ளது என்றுதான் அர்த்தம் என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டிருந்தார். ரஜினியின் இந்தக் கருத்துக்கு அப்பாவி ரசிகன் என்ன சொல்கிறான் என்பது போல் அது எழுதபட்டு உள்ளது. ‘30, 40 வருடங்களாக ரசிகர் மன்றத்தில் இருந்தது மட்டுமே மக்கள் மன்றத்தில் பதவி பெறுவதற்கோ அரசியலில் ஈடுபடுவதற்கோ முழு தகுதி ஆகிவிடமுடியாது என்று அறிக்கையில் சொல்லியிருந்தார் ரஜினி. இதற்கு, அப்பாவி ரசிகன் ‘நீ திரையில் தோன்றியபோது கற்பூரம் காட்டி ஆரத்தி எடுத்து விசில் எழுப்பி, ஆரவாரக் கூச்சல் போட்டு வாழ்க கோஷம் முழக்கிய எங்களைத் தகுதியற்ற கூட்டமாக்கிவிட்டாயே தலைவா. உன் மனசாட்சி இதை எப்படி ஏற்கிறது? 30,40 வருடங்கள் திரையில் நடித்தது மட்டுமே…

முதுமை அடைவதை சுட்டிக்காட்டும் 9 அறிகுறிகள்

மனிதர் உள்பட பாலூட்டிகள் முதுமை அடைவதை வெளிக்காட்டும் 9 அம்சங்கள்: 1. டிஎன்ஏ சேதங்கள் அதிகரிப்பு செல்களுக்கு இடையில் கடத்தப்படும் மரபணு குறியீடுதான் நமது டிஎன்ஏ. இந்த செயல்முறையில் நிகழுகின்ற தவறுகளால் முதுமை அடைதல் அதிகரிக்கிறது. 2. குரோமசோம்கள் மோசமடைதல் இவ்வாறு டெலோமிர் மோசமாகுவது நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் மற்றும் தீவிர நோய்த்தடுப்பு இல்லாத நிலையான அஃப்ளாஸ்டிக் ரத்த சோகை ஆகிய நோய்களுக்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன. 3. செல் செயல்பாட்டில் பாதிப்பு டிஎன்ஏ வெளிப்பாடு என்கிற செயல்முறையை நமது உடல்கள் கொண்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட செல்லில் இருக்கின்ற ஆயிரக்கணக்கான மரபணுக்கள் அந்த செல் என்ன செய்ய வேண்டுமென முடிவு செய்கின்றன. எடுத்துக்காட்டாக, அது தோல் செல்லாக செயல்படுவதா அல்லது மூளையின் செல்லாக செயல்படுவதாக என முடிவு செய்கின்றன. இந்த கட்டளைகள் வழங்கப்படும் முறையை காலமும், வாழ்க்கை…

திராவிடத்தை காப்போம் வை. கோபாலசாமி ஆவேசம்

மக்கள் விரோத மத்திய, மாநில அரசுகளைத் தூக்கி எறியவும், திராவிட இயக்கத்திற்கு விடப்படும் அறைகூவல்களை எதிர்த்து முறியடிக்கவும், திமுகவின் தலைமையில் செயலாற்றுவோம் என, மதிமுக தீர்மானம் இயற்றியுள்ளது. மதிமுக உயர்நிலைக் குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம், இன்று (வெள்ளிக்கிழமை) காலை, தாயகத்தில், கழக அவைத்தலைவர் திருப்பூர் சு. துரைசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: தீர்மானம் 1 : மதிமுக- மக்கள் விரோத மத்திய, மாநில அரசுகளைத் தூக்கி எறியவும், திராவிட இயக்கத்திற்கு விடப்படும் அறைகூவல்களை எதிர்த்து முறியடிக்கவும், திமுகவின் தலைமையிலான அணியில் தோழமைக் கட்சியாக இணைந்து செயலாற்றி வருகிறது. நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டு செவ்வனே நிறைவேற்றும் வகையில், மதிமுக மாவட்டக் கழகக் கூட்டங்களை நவம்பர் 5 ஆம் தேதிக்குள் நடத்தி, நவம்பர்…