அலைகள் வாராந்தப் பழமொழிகள் 26.09.2018 புதன்

01. பத்தாயிரம் தடவைகள் தோல்வியடைந்த தாமஸ் அல்வா எடிசன் கடைசியில் நான் தோல்வியடையவில்லை என்றார். தான் தோல்வியடைந்த 10.000 வழிகளும் பயன்தராது என்பதை தன் தோல்விகளால் கண்டறிந்தாகக் கூறுகிறார். 02. ஒவ்வொரு தோல்வியும் பயன்படாத விடயங்களை அடையாளம் காட்ட உதவுகிறது. 03. பிரிட்டனுடன் போர் செய்ய இரவோடு இரவாக கப்பல்களில் சென்று இறங்கினான் சீசர். அடுத்து அவன் செய்த வேலை தாம் வந்த கப்பல்களை கொழுத்தியதுதான். பின்னர் சொன்னான் தப்பியோட வழியில்லை.. வெற்றி அல்லது வீர மரணம் என்றான். அந்தப் போரில் சீசர் வென்றான். 03. உங்களுக்கு பின்னால் உள்ள பாலங்களை அனைத்தையும் எரித்துவிடுங்கள். பின்வாங்க இயலாத நிலை வரும்போது எப்படி நீங்கள் பணியாற்றுகிறீர்கள் என்று பாருங்கள். 04. ஒருவனை சிறந்த மனிதனாக்க இயற்கை பல சோதனைகளை தருகிறது. களிமண்ணை பிசைந்து சிலையை உருவாக்குவது போல அது…

காச நோயை உலகப் பந்தில் இருந்து அகற்ற தலைவர்கள் முடிவு

வருடாவருடம் ஐ.நா சபையில் கூடும் தலைவர்கள் தத்தம் நாட்டு மக்களுக்கு ஒரு கிளுகிளுப்பை ஏற்படுத்த ஏதாவது பேசி முழங்கி பின் ஊர் போவது இப்போது ஓர் உற்சவமாகிவிட்டது. பலர் ஆளில்லாமல் வெறித்தோடிய கதிரைகளுக்கு முழங்குவதும் நடைபெறுவதுண்டு. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போல ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் தத்தமது நாட்டு தலைவர்களின் பேச்சு பொன் குஞ்சு பேச்சாக அமையும். இது வரை காலமும் இந்தத் தலைவர்கள் ஐ.நாவில் பேசி என்ன விடிந்திருக்கிறதென இன்று வரை கேட்க யாரும் இல்லாமல் தொடர்கிறது உற்சவம். இருந்தாலும்.. இந்த ஐ.நா உற்சவத்தில் உருப்படியாக ஏதாவது செய்யவும் தலைவர்கள் முயல்வதுண்டு அதில் இம்முறை சிக்குண்டுள்ள விடயம் காச நோயாகும். இந்த நோய் பழைய பாலும் பழமும் படம் வெளி வந்த காலத்தில் இருந்து இன்றுவரை மனித குலத்தை ஆட்டிப்படைக்கும் ஒரு…

தியாகி திலீபன் நினைவு நாள் தாயகத்தில்

தியாகி திலீபன் நினைவு நாள் இப்போது இலங்கையின் பல பகுதிகளிலும் உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்பட்டு வருகிறது. இன்று யாழ். நல்லூரில் பெருந்திரளான மக்கள் கூடி திலீபன் அஞ்சலியை நடத்தினார்கள். இது போல வல்வை உட்பட இலங்கையின் இதர பகுதிகளிலும் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு திலீபன் நினைவு நாள் கூடுதலான சுதந்திரத்தோடு நடைபெற்றதை காணமுடிகிறது. வல்வை ஆதிகோயிலடியில் நடைபெற்ற திலீபன் நினைவு நாளில் பங்கேற்றவர்களிடம் இது குறித்து விசாரித்தபோது, அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாது. இது குறித்து இராணுவத்தின் நிலைப்பாடும் எமக்குத் தெரியாது ஆனால் நினைவேந்தல் நடக்கிறது என்று ஒருவர் நம்மிடம் கூறினார். இன்று நல்லூர் திலீபன் நாள் மிகவும் வித்தியாசமான கோணத்தில் இடம் பெற்றது. இது குறித்து இலங்கை அரசு தொடர்ந்து மௌனம் காத்து வருகிறது. இறந்தோரை அஞ்சலிக்கும் உரிமை அப்பகுதி மக்களுக்கு இருக்கிறதென முன்னரே தலைவர்களால்…

டென்மார்க் தலைநகர் பகுதியில் தொடர் துப்பாக்கிச் சூடுகள்

ஒரு குட்டி அமெரிக்காவில் நடப்பது போல டென்மார்க் தலைநகர் பகுதியில் தொடர் துப்பாக்கிச் சூடுகள் இடம் பெறுவது நீதியமைச்சர் சோன் பாப்ப போவுல்சனுக்கு கவலை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த இரவு நோபுரோ பகுதியில் நான்கு முதல் ஐந்து தடவைகள் துப்பாக்கிப் பிரயோகங்கள் இடம் பெற்றன. இந்தச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்தார். இம்மாதம் 15ம் திகதி : ஈஸ்கொய் பகுதியில் இடம் பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இரண்டு பேர் காயம். 18ம் திகதி மில்யோ பாக்கன் என்ன இடத்தில் சரமாரியாக வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன யாரும் காயம் இல்லை. இதே தினம் கேர்லேவ் பகுதியில் ஓர் அவுடி காரில் வந்தவர்கள் நடத்திய தாக்குதலில் பத்து வரையான துப்பாக்கி வேட்டுக்கள் காற்று வெளியில் கலந்தன. இத்தினம் இடம் பெற்ற மூன்றாவது துப்பாக்கிச் சூட்டில் ஒருவருக்கு தோளில் குண்டு பாய்ந்தது. மறு நாள் ஐந்து…

வில்லன் நடிகர் மீது பிரபல நடிகை பாலியல் குற்றச்சாட்டு

ரஜினியின் 'காலா' படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று பிரபல நடிகை குற்றம்சாட்டியுள்ளார். காலா படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்தவர் நானா படேகர். தமிழில் பொம்மலாட்டம் என்ற படத்தில் நடித்துள்ளார். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவர் புதிது என்றாலும், பாலிவுட்டில் பிரபலமான நடிகர். மத்திய அரசால் வழங்கப்படும் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை மூன்று முறை பெற்றுள்ள இவர் மீது, இப்போது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டை முன் வைத்திருப்பவர் முன்னாள் மிஸ் இந்தியாவும், பாலிவுட் நடிகையுமான தனுஸ்ரீ தத்தா. தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்திருந்த தனுஸ்ரீ தத்தா தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவர் தற்போது நானா படேகர் தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டார் என்று தனியார் தொலைக்காட்சியின் நேர்காணல்…

சில்க் தற்கொலை இல்லை! சீரழித்த அரசியல்வாதிகள்!

சில்க் தற்கொலை இல்லை! சீரழித்து நடு தெருவில் விட்ட அரசியல்வாதிகள்! அவரை வைத்து முதல் படம் இயக்கிய இயக்குனர் திடுக்கிடும் தகவலை வெளியிட்டு உள்ளார். நடிகை சில்க் ஸ்மிதா இடம் பெறும் பாடல்களே இல்லாத படங்கள் இல்லை என்று கூறலாம். என்பதுகளில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடிகையாகவும், குணச்சித்திர வேடங்களில் நடித்தும் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தவர். 1995 ஆம் ஆண்டு ராக தாளங்கள் என்ற படத்தை எடுத்தார். ஆனால் அந்த படம் வெளியாகாமல் நின்று போனது. அந்த படத்தை வெளியிட இயக்குநர் திருப்பதி ராஜன் முயன்று வருவதாக சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. அப்படத்தின் இயக்குநர் திருப்பதி ராஜன் அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொள்ளவில்லை…

விஸ்வரூபம் இரண்டில் விட்ட தவறுகள் போதாதா கமல்..?

‘தேவர் மகன்’ இரண்டாம் பாகத்தின் கதையைக் கமல்ஹாசன் எழுதி வருகிறார் எனத் தகவல் உலா வருகிறது. பரதன் இயக்கத்தில் 1992-ம் ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி ரிலீஸான படம் ‘தேவர் மகன்’. கமல்ஹாசன் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், அவருடைய அப்பாவாக சிவாஜி கணேசன் நடித்தார். கெளதமி, ரேவதி இருவரும் ஹீரோயின்களாக நடிக்க, நாசர், வடிவேலு, காக்கா ராதாகிருஷ்ணன், எஸ்.என்.லட்சுமி, தலைவாசல் விஜய் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். கமல்ஹாசன் இந்தப் படத்துக்குக் கதை எழுதியதோடு, தன்னுடைய ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் தயாரித்தார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா இசையமைத்தார். இந்தப் படம் ரிலீஸாகி, அடுத்த மாதத்துடன் 26 ஆண்டுகள் நிறைவடையப் போகிறது. இந்நிலையில், ‘தேவர் மகன்’ படத்தின் இரண்டாம் பாகத்துக்கானக் கதையை கமல்ஹாசன் எழுதி வருவதாக தகவல் உலா வருகிறது. கமல்ஹாசன் நடிப்பில் கடந்த…

ராஜபக்சே பார்த்திருந்தால் சிரித்திருப்பார்

திமுக என்றாலே சிம்ம சொப்பனம் தான் என்பதால், எப்போதும் நடுங்கும் முதல்வரும், ஆட்சியாளர்களும் துணிவிருந்தால், எங்கள் மீது வழக்குப் போடட்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “முதல்வர் பதவிக்கே களங்கம் விளைவிக்கும் வகையில், நாளொரு ஊழல் பொழுதொரு முறைகேடு என கஜானாவைத் தினந்தோறும் திருடிக் கொழுத்துக் கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அமைச்சரவையினர், தங்கள் மீது தமிழ்நாட்டு மக்கள் கொண்டுள்ள கடும் அதிருப்தியையும், கோபத்தையும் மறைக்க நினைத்து, திமுகவுக்கு எதிராகப் பொதுக்கூட்டம் நடத்தி, ஜனநாயகத்தையே நகைச்சுவைப் பொருளாக்கி நாற்றமெடுக்கச் செய்திருக்கிறார்கள். கடந்த 2011 முதல் ஆட்சியில் இருப்பது அதிமுக.தான்; திமுக எதிர்க்கட்சியாக இருக்கிறது. எங்காவது, 7 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்க்கட்சியாக உள்ள அரசியல் கட்சிக்கு எதிராக, ஆளுங்கட்சியின் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் எல்லாரும்…

சரத் பொன்சேகா CIDயில் வாக்குமூலம்

ஊடகவியலாளர் கீத் நொயார், கடத்தப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்ப்பட்ட சம்பவம் தொடர்பில், வாக்குமூலம் வழங்குவதற்காக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பொலிஸ் குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகி உள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில், கடந்த செப்டம்பர் 12ஆம் திகதி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவிடம், சுமார் 4 மணிநேர வாக்குமூலத்தை CID யினர் பதிவு செய்திருந்தனர். குறித்த விடயம் தொடர்பில் கடந்த செப்டம்பர் 17 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், அவரது இல்லத்தில் வைத்து சுமார் 2 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் சிஐடியினால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருந்ததோடு, சபாநாயகர் கருஜயசூரியவிடமும் அது தொடர்பில் வாக்குமூலம் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கடந்த 2008, மே 22 ஆம் திகதி, தெஹிவளை பிரதேசத்தில் வைத்து, ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு, சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சம்பவத்திற்கு, உதவி, ஒத்தாசை புரிந்ததாக…

சிங்கள இனவாதத்தை தூண்ட அரசியல்வாதிகள் முயற்சி

அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் நாட்டில் சிங்கள இனவாதத்தை தூண்ட அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர். இதேவேளை அரசியல்கைதிகளை வைத்துகொண்டு தனிப்பிட்ட அரசியல் நோக்கங்களை நிறைவேற்றி கொள்வதாக அரசியல் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார். நாட்டில் முதலில் சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுகொடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். அநுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கும் அரசியல்கைதிகள் தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.