டென்மார்க் தலைநகர் பகுதியில் தொடர் துப்பாக்கிச் சூடுகள்

ஒரு குட்டி அமெரிக்காவில் நடப்பது போல டென்மார்க் தலைநகர் பகுதியில் தொடர் துப்பாக்கிச் சூடுகள் இடம் பெறுவது நீதியமைச்சர் சோன் பாப்ப போவுல்சனுக்கு கவலை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த இரவு நோபுரோ பகுதியில் நான்கு முதல் ஐந்து தடவைகள் துப்பாக்கிப் பிரயோகங்கள் இடம் பெற்றன. இந்தச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.

இம்மாதம் 15ம் திகதி : ஈஸ்கொய் பகுதியில் இடம் பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இரண்டு பேர் காயம்.

18ம் திகதி மில்யோ பாக்கன் என்ன இடத்தில் சரமாரியாக வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன யாரும் காயம் இல்லை.

இதே தினம் கேர்லேவ் பகுதியில் ஓர் அவுடி காரில் வந்தவர்கள் நடத்திய தாக்குதலில் பத்து வரையான துப்பாக்கி வேட்டுக்கள் காற்று வெளியில் கலந்தன.

இத்தினம் இடம் பெற்ற மூன்றாவது துப்பாக்கிச் சூட்டில் ஒருவருக்கு தோளில் குண்டு பாய்ந்தது.

மறு நாள் ஐந்து கார்களின் மீது குண்டுகள் பாய்ந்தன. அன்றைய தினம் போலீஸ் நிற்கவே ஒரு குழுவினர் மீது துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன.

இம்மாதம் 21ம் திகதி கொலஸ்ரப் என்ற இடத்தில் ஒரு 30 வயது நபர் மீது பலதடவைகள் துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. மேலும் இன்னோரிடத்தில் மூன்று பேர் மீது சூடுகள் விழுந்தன.

22ம் திகதி ஈஸ்கொய் என்ற இடத்தில் ஒரு காரில் இருந்து மூன்று தடவைகள் வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன.

குழுக்களிடையே நடைபெறும் மோதல் இப்போது போலீசாரின் கட்டு மீறி போயுள்ளதாகக் கூறப்படுகிறது.

உலகின் மகிழ்வான நாட்டில் கேட்கும் தூரத்து வேட்டோசைகள் கிராமத்து மக்களையும் கலங்க வைக்கின்றன.

அலைகள் 26.09.2018

Related posts