உடுப்பிட்டி இரண்டு பகுதியினருக்கு இடையே மோதல்

உடுப்பிட்டி கிராமத்தில் இரண்டு பகுதியினருக்கு இடையே இடம்பெற்று வந்த மோதல் ஊர்ப் பிரச்சினையாக மாறியதையடுத்து பொலிஸாரால் கோரப்பட்டதற்கு அமைய இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதனால் அந்தக் கிராமத்தில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

உடுப்பிட்டி இலகடி மற்றும் வன்னிச்சி அம்மன் கோவில் வேலிந்ந தோட்டம் பகுதியைச் சேர்ந்த இருதரப்பினர் இடையே இடம்பெற்று வந்த மோதல் கடந்த சில நாள்களாக ஊர்ப் பிரச்சினையாக மாறியது.

இந்த மோதலில் சிலர் தலைமறைவாகிய நிலையில் வல்வெட்டித்துறை பொலிஸாரின் அழைப்பின் பேரின் இன்றிரவு இராணுவத்தினர் சுற்றிவளைத்து பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.

அதனால் அந்தக் கிராமத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

——-

மட்டக்களப்பு கள்ளியங்காட்டில் லங்கா சதொச மொத்த விற்பனை நிலையம் இன்று (09) பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்தார்.

இந்த கட்டிட திறப்பு விழா மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் தலைமையில் இடம்பெற்றது. இதில் அதிதிகளாக லங்கா சத்தோச நிறுவன தலைவர் ஆனந்த பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த புதிய கட்டித்தை ஆனந்த பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன், அரசாங்க அதிபர் க.கருணாகரன் ஆகியோர் திறந்து வைத்து வியாபார நடவடிக்கையை ஆரம்பித்து வைத்தனர்.

Related posts