பாலகிருஷ்ணாவுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி?

பாலகிருஷ்ணா நடிக்கவுள்ள புதிய படத்தின் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
போயபதி சீனு இயக்கத்தில் உருவாகி வரும் ‘அகண்டா’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் பாலகிருஷ்ணா. கரோனா அச்சுறுத்தலால் தடைபட்ட படப்பிடிப்பு, தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை முடித்துவிட்டு மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் பாலகிருஷ்ணா.

——-

சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோரின் கூட்டு குடும்ப வீடுதான் நவீன சொகுசு பங்களாவாக மதிப்பிடப்பட்டது.
நட்சத்திர நடிகர்களில் சில வருடங்களுக்கு முன்பு வரை சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோரின் கூட்டு குடும்ப வீடுதான் நவீன சொகுசு பங்களாவாக மதிப்பிடப்பட்டது.
தற்போது இவர்களின் பங்களாவை விட, விஜய் புதியதாக கட்டியிருக்கும் பங்களா பல மடங்கு பெரியதாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்து தனுஷ் கட்டி வரும் புதிய பங்களா, விஜய் பங்களாவை விட, பிரமாண்டமாக இருக்கும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

—–

காதல் எப்.எம்., குச்சி ஐஸ் ஆகிய படங்களை டைரக்டு செய்த விஜய் பிரகாஷ், ஒரு புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்துக்கு, ‘உலகம்மை’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். வெற்றி மித்ரன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகி கவுரி. இளையராஜா இசையமைக்கிறார் என்று படக் குழுவினர் கூறுகிறார்கள். சு.சமுத்திரம் எழுதிய நாவலை தழுவிய கதை இது.

—–

நடிகைகள் படத்துக்கு படம் சம்பளத்தை உயர்த்துகிறார்கள். நயன்தாரா சம்பளம் ரூ.4 கோடியை தாண்டி உள்ளது. இந்தி நடிகை தீபிகா படுகோனே கதாநாயகனுக்கு இணையான சம்பளம் கேட்கிறார்.

நடிகை பூஜா ஹெக்டேவும் சம்பளத்தை ரூ.3 கோடியாக உயர்த்தி உள்ளார். இவர் இதுவரை ஒரு படத்துக்கு ரூ.2 கோடி வரை சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. தற்போது விஜய் ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.

அடுத்து தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ள படத்தில் நடிக்க ரூ.3 கோடி சம்பளம் பேசி இருப்பதாக கூறப்படுகிறது. இதுபோல் தெலுங்கு இயக்குனர் திரிவிக்ரம் சீனிவாஸ் டைரக்டு செய்யும் படத்தில் நடிக்கவும் பூஜா ஹெக்டேவை அணுகி உள்ளனர். அந்த படத்துக்கும் ரூ.3 கோடி சம்பளம் கேட்டு இருக்கிறார்.

பூஜா ஹெக்டே ஏற்கனவே சிரஞ்சீவியின் ஆச்சார்யா, பிரபாசின் ராதே ஷியாம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இரண்டு இந்தி படங்களும் கைவசம் உள்ளன.

Related posts