“வலிமை” படத்தின் முதல் பாடல் வெளியீடு

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் படம் “வலிமை”. இந்த படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். மேலும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கின்றனர். வலிமை படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு முடங்கி இருந்த நிலையில் ஐதராபாத்தில் இணைப்புக் காட்சிகளுக்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

ஏறக்குறைய இரண்டு வருடங்களாக இந்த படம் பற்றி எந்தவித தகவலும் வெளியிடாமல் இருந்து வந்த படக்குழு சமீபத்தில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதற்கிடையில் வலிமை படத்தின் பாடல்கள் விரைவில் ரிலீஸ் ஆகும் என யுவன் ஷங்கர் ராஜா சமீபத்தில் தெரிவித்து இருந்த நிலையில் இன்று இரவு வலிமை படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் நடிகர் அஜித்குமாரின் வலிமை படத்தின் முதல் பாடல் இன்று இரவு 10.45 மணிக்கு படக்குழு வெளியிட்டது. இதனை அவரது ரசிகர்கள் சமூக வலை தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

Related posts