நாடகங்கள், திரைப்படங்கள் மூலம் 251 மில். வருமானம்..

கொவிட் சூழல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த வெளிநாட்டுத் தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் திரைப்படங்களை இலங்கை ஊடகங்களில் ஒளிபரப்புவதற்கான வரி அறவீடு 2021 பெப்ரவரி மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதுடன், இதனால் இதுவரை 251 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்திருப்பதாகவும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இவ்வாறு அறவிடப்படும் வரித் தொகையை மேலும் அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும், இதன் ஊடாக உள்நாட்டின் கலாசாரம் மற்றும் தேசிய தொலைக்காட்சிக் கலை மற்றும் இத்தொழில்துறையை பாதுகாத்து, இந்நாட்டுக் கலைஞர்களைப் பலப்படுத்த முடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். வெகுசன ஊடக அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் அண்மையில் (20) பாராளுமன்றத்தில் நடைபெற்ற போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களை முன்வைத்தார். கொவிட் தொற்றுநோய் சூழல் காரணமாக பாடசாலை மாணவர்களின் கல்வி நிகழ்ச்சிகளை 16 மணித்தியாலங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதற்காக செலவிடப்படும் தொகை 22…

32ஆவது ஒலிம்பிக் போட்டி இன்று ஆரம்பம்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட 32ஆவது ஒலிம்பிக் போட்டி, இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கோலாகலமாக தொடங்குகிறது. இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்கவிழா இன்று மாலை, டோக்கியோ நகரில் துவங்க உள்ளது. ஆரம்பமாகும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவினை அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் உட்பட சுமார் 950 பேர் பிரதான அரங்கத்தில் பார்க்கவுள்ளனர். அந்தக் குழுவிற்கு மேலதிகமாக விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு உறுப்பினர்களும் பங்கேற்பார்கள். அதில் இருந்து போட்டிகளை நேரடியாக பார்வையிடுவதற்கு பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக 2020 டோக்கியோ ஒலிம்பிக்கின் முக்கிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் ஹிடேமாசா நகாமுரா வியாழக்கிழமை ஒரு செய்தியாளர் மாநாட்டில் கூறினார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒவ்வொரு நாட்டில் இருந்தும் 6 அதிகாரிகள் மட்டுமே இந்த துவக்க விழாவில் கலந்து கொள்ள…

ரிஷாட்டின் மனைவி, மாமனார் தரகர் கைது

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில், வீட்டு வேலை செய்து வந்த 16 வயது சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகளுக்கமைய, ரிஷாட் பதியுதீனின் மனைவி, மனைவியின் தந்தை மற்றும் குறித்த சிறுமியை கொழும்புக்கு அழைத்து வந்த டயகமவைச் சேர்ந்த தரகர் ஒருவர் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிஹாப்தீன் ஆயிஷா (46), மொஹமட் சிஹாப்தீன் (70), சங்கர் என அழைக்கப்படும் பொன்னையா பண்டாரம் (64) ஆகிய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் இடம்பெறும் முதலாவது கைது நடவடிக்கை இதுவாகும். ஆட்களை விற்பனை செய்தல், சிறுவர்களை கொடுமைப்படுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். பொரளை பொலிஸார், கொழும்பு தெற்கு குற்றவியல் விசாரணைப் பிரிவு மற்றும் கொழும்பு தெற்கு குழந்தைகள்…

வெளிவராத படங்களின் கதாநாயகன் கமலை வைத்து படம்..

கமல்ஹாசன், விஜய் சேதுபதி ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கும் ‘விக்ரம்’ படப்பிடிப்பு தொடங்கியது. பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் வில்லனாக நடிக்கிறார். கமல்ஹாசன் நடித்து, ‘விக்ரம்’ என்ற பெயரில் ஏற்கனவே ஒரு படம் வெளிவந்தது. அதில் அவர் ஜோடியாக இந்தி நடிகை டிம்பிள் கபாடியா நடித்து இருந்தார். மறைந்த டைரக்டர் ராஜசேகர் இயக்கியிருந்தார். நீண்ட பல வருட இடைவெளிக்குப்பின், ‘விக்ரம்’ என்ற பெயரில் இன்னொரு படம் தயாராகிறது. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக் கிறார்கள். பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் வில்லனாக நடிக்கிறார். இருவரும் இணைந்து நடிக்கும் முதல் காட்சியை டைரக்டர் லோகேஷ் கனகராஜ் படமாக்கினார். தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறுகிறது.

தமிழ் சினிமாவில், 40 வருடங்களை கடந்த கதாநாயகிகள்

தமிழ் திரையுலகில், ஒரு சில கதாநாயகிகளே 40 வருடங்களை கடந்து நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் 4 பேர் முக்கியமானவர்கள். அவர்கள் வருமாறு:- 1. ராதிகா சரத்குமார். அறிமுகமான படம்: கிழக்கே போகும் ரெயில். வெளியான வருடம்: 1978. 2. அம்பிகா. அறிமுகமான படம்: தரையில் வாழும் மீன்கள். வெளியான வருடம்: 1980. 3. விஜயசாந்தி. அறிமுகமான படம்: கல்லுக்குள் ஈரம். வெளியான வருடம்: 1980. 4. பூர்ணிமா பாக்யராஜ்: அறிமுகமான படம்: நெஞ்சில் ஒரு முள். வெளியான வருடம்: 1981. இவர்களை அடுத்து ரேவதி 38 வருடங்களாக நடித்துக் கொண்டிருக்கிறார். அறிமுகமான படம்: மண்வாசனை. வெளியான வருடம்: 1983. ரம்யா கிருஷ்ணன், 37 வருடங்களாக நடித்துக் கொண்டிருக்கிறார். அறிமுகமான படம்: வெள்ளை மனசு. வெளியான வருடம்: 1984.

சற்குணம் டைரக்‌ஷனில் ராஜ்கிரண்-அதர்வா

‘களவாணி, ’ ‘வாகை சூடவா’ படங்களை இயக்கிய டைரக்டர் சற்குணம் அடுத்து இயக்கும் புதிய படத்தில், ராஜ்கிரண்-அதர்வா ஆகிய இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். கதாநாயகி முடிவாகவில்லை. ராஜ்கிரண், அதர்வாவுடன் ராதிகா சரத்குமார், ஜெயப்பிரகாஷ், ஆர்.கே.சுரேஷ், ரவிகாளே, சி.வி.குமார், சிங்கம் புலி, பாலசரவணன், துரை சுதாகர் ஆகியோரும் நடிக் கிறார்கள். லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். ‘‘குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் பொழுதுபோக்கு படம், இது. யதார்த்தமான காட்சிகளுடன் கூடிய கதை. காவிரி ஆற்றுப் படுகை, வெற்றிலை தோட்டம் என பசுமையாக இருக்கும் திருவையாறை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது’’ என்று டைரக்டர் சற்குணம் கூறினார்.

சூர்யா நடிக்கும் 40வது படம் ‘எதற்கும் துணிந்தவன்’

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 40வது படத்திற்கு 'எதற்கும் துணிந்தவன்' என பெயரிடப்பட்டுள்ளது. சூர்யாவின் நடிப்பில் வெளியாக இருக்கும் 40 ஆவது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் தற்பொழுது ரஜினியின் அண்ணாத்த, விஜய்யின் பீஸ்ட், சூர்யாவின் 40 ஆவது படங்கள் உருவாகிறது. இந்நிலையில், நாளை நடிகர் சூர்யா தனது பிறந்தநாளை கொண்டாடவுள்ள நிலையில், சூர்யாவின் 40 ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பட்டிருந்தது. தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ‘எதற்கும் துணிந்தவன்’ என பெயரிடப்பட்டுள்ளது. எதற்கும் துணிந்தவன்' படத்தின் முதல் பார்வையை வெளியிட்டது படக்குழு. இதனை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.