இந்த நாட்டின் நீதி எங்கு உள்ளதென்பதை தேடிப்பார் ?

இந்த நாட்டினுடைய சட்டம் இந்த நாட்டின் நீதி எங்கு உள்ளதென்பதை தேடிப்பார்க்க வேண்டியுள்ளதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்தார். கடலட்டை பண்ணை விவகாரம் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடலட்டை பண்ணை உருவாக்குவது தொடர்பில் மஹிந்த அமரவீர கடற்றொழில் அமைச்சராக இருந்த போது 2017 மார்ச் 8ம் திகதி அரச வர்த்தமானியில் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதிலே கிளிநொச்சி மாவட்டத்தில் ஏனைய மாவட்டங்களையும் விட அதிகமான பிரதேசங்கள் தெரிவு செய்யப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக 11 இடங்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் கடலட்டை பண்ணைக்கு பொருத்தமான இடங்களென தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலட்டை குஞ்சுகளை உருவாக்குவதற்காக அரியாலையில் கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்கம், அப்பகுதி பிரதேச செயலாளரின் அனுமதி பெறப்பட்ட பின்னரே இரண்டு பரப்பு காணிக்குள் கடலட்டை உற்பத்தி செய்யும்…

விஜய்யை வாழ்நாளில் மறக்க மாட்டோம்: கமீலா நாசர்

விஜய்யை வாழ்நாளில் மறக்க மாட்டோம் என்று கமீலா நாசர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். விஜய்யின் பெருந்தன்மை குறித்து நாசர் பேசியுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் நாசர் தனது மூத்த மகன் ஃபைஸலுக்கு நேர்ந்த பயங்கர விபத்து குறித்துப் பேசியுள்ளார். அந்த விபத்துக்குப் பிறகு பழைய ஞாபகங்கள் அனைத்தையும் மறந்துவிட்டார் அவருடைய மகன். அவர் விஜய்யின் தீவிர ரசிகர் என்பதால், அவரைப் பற்றிய ஞாபகங்கள் மட்டுமே இருந்துள்ளன. விஜய்யின் பாடல்கள், படங்கள் பார்ப்பதை மட்டுமே வழக்கமாக வைத்துள்ளார். இதைக் கேள்விப்பட்ட விஜய் மிகவும் நெகிழ்ந்து, நாசரின் வீட்டுக்குச் சென்று அவருடைய மகனுடன் நேரம் செலவிட்டுள்ளார். மேலும், பிறந்த நாளன்று கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதனைத் தனது பேட்டியில் குறிப்பிட்டுப் பேசியிருந்தார் நாசர். இந்த வீடியோ விஜய் ரசிகர்கள்…

தெலுங்கு பட தயாரிப்பாளர்களிடம் அசின் விதித்த நிபந்தனைகள்

தெலுங்கு பட அதிபர்கள் மும்பை சென்று அசினை சந்தித்து பேசியிருக்கிறார்கள். அவர்களிடம், அசின் சில நிபந்தனைகளை விதித்து இருக்கிறார். மும்பை தொழில் அதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கும் தாயான அசின், மீண்டும் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறார். இதையறிந்த சில தெலுங்கு பட அதிபர்கள் மும்பை சென்று அசினை சந்தித்து பேசியிருக்கிறார்கள். அவர்களிடம், அசின் சில நிபந்தனைகளை விதித்து இருக்கிறார். ‘‘இனிமேலும் நான் கதாநாயகியாகத்தான் நடிப்பேன். அக்காள், அண்ணி, அம்மா வேடங்களில் நடிக்க மாட்டேன்...’’ என்பது அந்த நிபந்தனைகளில் ஒன்று. ‘‘தெலுங்கு ரசிகர்கள் உங்களை வயதான வேடங்களில் பார்க்க விரும்ப மாட்டார்கள்’’ என்று அந்த பட அதிபர்கள், அசின் தலையில் பெரிய ஐஸ் கட்டியை வைத்தார்களாம். அவர்கள் சொன்னதை நம்பி, அசின் தன்னை கவர்ச்சியாக படங்கள் எடுத்து சமூகவலை தளங்களில் பரவவிட்டு இருக்கிறார்.

நடிகை நமீதா மனம் திறந்த பேட்டி

நடிகை நமீதா குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு அவர் ஆந்திராவை சேர்ந்த வீரா என்ற இளைஞரை காதல் திருமணம் செய்து கொண்டார். தற்போது நமீதா சொந்த பட நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இந்த பட நிறுவனம் சார்பில், ‘பவ் பவ்’ என்ற படத்தை தயாரித்து முடித்து இருக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெறுகின்றன. அதில் ஈடுபட்டிருந்த நமீதாவிடம் நிருபர் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு நமீதா அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி: ‘பவ் பவ்’ படம் எப்படி வந்திருக்கிறது? எப்போது திரைக்கு வரும்? பதில்: படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது. நான் நன்றாக நடித்து இருப்பதாக படக்குழுவினர் அனைவரும் பாராட்டி வருகிறார்கள். ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட்டதும், படம் திரைக்கு வரும் தேதி…

காலேப் லாண்ட்ரி ஜோன்ஸ்-க்கு சிறந்த நடிகருக்கான விருது

உலக புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கேன்ஸ் திரைப்பட விழா ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 2 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 6 ஆம் தேதி உற்சாகமாக துவங்கிய 74-வது கேன்ஸ் திரைப்பட விழா 17ம் தேதி வரை நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த நடிகருக்கான விருது அமெரிக்காவின் காலேப் லாண்ட்ரி ஜோன்ஸ்-க்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருதை நார்வே நாட்டை சேர்ந்த ரெனடா ரீன்ஸ்வே வென்றார். புகழ்பெற்ற பால்ம் டோர் விருது- பிரான்ஸ் திரைப்படமான ‘Titane’க்கு வழங்கப்பட்டது.