லிங்குசாமி படத்தின் தமிழ் உரிமை விற்பனை

லிங்குசாமி இயக்கி வரும் தெலுங்கு படத்தின், தமிழ் உரிமை விற்பனையாகியுள்ளது.
தெலுங்கில் முன்னணி நாயகனாக வலம்வரும் ராம் பொத்தினேனி நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் லிங்குசாமி. இதன் நாயகியாக ‘உப்பெனா’ படத்தில் நடித்து, அனைவரது கவனத்தையும் ஈர்த்த கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார். ஆதி, நதியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் பணிபுரிந்து வருகிறார். நேற்று (ஜூலை 12) லிங்குசாமி – ராம் பொத்தினேனி படத்தினை தயாரிப்பாளர் சுபாஷ் சந்திர போஸ் கிளாப் அடித்து துவங்கி வைத்தார்.
பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தின் தமிழக உரிமையை மாஸ்டர் பீஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. படப்பிடிப்பு தொடங்கப்பட்ட முதல் நாளே தமிழக உரிமை விற்பனையாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts