டென்மார்க் வெற்றி அரை இறுதி ஆட்டத்திற்கு தேர்வு..

இன்று டென்மார்க் செக் குடியரசு ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற ஐரோப்பா கிண்ணம் 2020 உதைபந்தாட்ட போட்டியின் கால் இறுதி ஆட்டம் அஜாபஜான் நாட்டின் தலை நகர் பாக்குவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 2 ற்கு 1 என்ற கோல் கணக்கில் செக் குடியரசை டென்மார்க் அணி வெற்றி பெற்றது. ஆட்டம் ஆரம்பித்த ஐந்தாவது நிமிடம் கிடைத்த ஒரு கோர்னர் அடியின் மூலம் டென்மார்க் முதலாவது கோலைப் போட்டது. கோர்னரை ஜென்ஸ் ஸ்ருயக லாசன் அடிக்க அதை தோமாஸ் டிலானி தலையால் நிலத்தில் அடிக்க பறந்த பந்து தரையில் அடித்து வலையை தொட்டது. ஆட்டத்தின் நிலையை மாற்றியது. தொடர்ந்து 41 வது நிமிடம் கஸ்பா டொல்பியா அடுத்த கோலை போட்டார். இந்தகோல் சர்வதேச தரம் மிக்க கோல் என்று வர்ணனையாளர் வானளாவ புகழ்ந்தார்.

அதன் பின் இடைவேளைக்கு பின் செக் நாடு வியூகத்தை மாற்றி இடைவேளை முடிந்த மூன்றாவது நிமிடமே ஒரு கோலைப் போட்டது. பற்றிக் செசிக் அந்தக் கோலை போட்டார். அப்போது ஆட்டம் 49 வது நிமிடத்தில் நின்றது.

தொடர்ந்து அடுத்த கோலை போடுவதற்காக பலமான நெருக்கடியை கொடுத்து டென்மார்க் அணியை தலை சுழல வைத்தனர் செக் அணியினர். அந்த ஆட்டத்தில் இரு அணிகளின் தலைகள் மோதி இரண்டு செக் வீரர்களுக்கு மண்டைகள் பிளந்து ந்து இரத்தம் ஆறாக ஓடியது. தலையில் கட்டு போட்டபடி அந்த அணியில் இரண்டு வீரர்கள் தமது தேசத்திற்கு இரத்தம் சிந்தினாலும் வெளியேறாத தேச புத்திரர்களாக விளையாடினார்கள். பார்க்க மெய் சிலிர்க்க வைத்தது.

எதிரணி இரத்தம் சிந்தி ஆடுவதையும் நிலமை மோசமடைவதையும் ஆட்டம் 2 – 2 ஆகி அடுத்த சுற்றுக்கு போகும் அபாயம் தெரியவே டென்மார்க் பயிற்றுனர் விழித்துக் கொண்டு வீரர்களை மாற்றி செக் நாட்டின் வெற்றி வியூகத்தை அடைத்தார். தொடர்ந்து இரு அணிகளும் வெற்றிக்காக போராடின ஆடின.. செக் ஒரு கோலைப் போடவும் டென்மார்க் ஒரு கோலை போட விடாது தடுக்கவுமாக ஆடினர். நிறைவாக இரண்டாவது கோலை செக் நாடு போட முடியாத நிலையில் டென்மார்க் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. 32 பாகை வெப்பம் வியர்த்து கொட்ட பிரமாண்டமான ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் ஆட்டம் நடந்து முடிந்தது.

டென்மார்க்கில் வெற்றி களைகட்டி இப்போது எங்கும் கொண்டாட்டமாக இருக்கிறது.

இன்று இரவு ஒன்பது மணிக்கு இத்தாலி தலைநகர் ரோமில் இங்கிலாந்து உக்ரேன் அணிகள் மோதுகின்றன. இதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அந்த அணியுடன் டென்மார்க் எதிர்வரும் புதன் கிழமை இங்கிலாந்து வெம்ப்ளி நகரில் நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் மோதும். வென்றால் 24 வருடங்களுக்கு பின்னதாக ஐரோப்பா கிண்ண இறுதியாட்டத்திற்கு போகும். இறுதியாட்டம் வரும் ஞாயிறு இங்கிலாந்து வெம்ப்ளியில் நடைபெற காத்திருக்கிறது.

ஜெயிக்கப் போவது யார்..?

சூடோ சூடு.. இதற்காக நாடுகள் படும் பாடோ பெரும் பாடு.. அதற்கு முன் பியரை போட்டு ஆடு.. ஆடாமலா போவர் ரசிகர்..


அலைகள் 03.07.2021

Related posts