ஒரே வாரத்தில் 3 இளம் பெண்கள் மரணம்

கேரளாவில் அடுத்தடுத்து இளம் பெண்கள் வரதட்சணைக் கொடுமை புகாரில் உயிரிழந்த சம்பங்கள் பினராயி விஜயன் தலைமையிலான அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.

கொல்லத்தைச் சேர்ந்த 22 வயது விஸ்மயா வி நாயர் என்ற பெண், சமீபத்தில் தனது கணவர் கிரண்குமார் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். விஸ்மயாவின் மரணம் வரதட்சணை கொடுமையால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்பட்டது. அவரது மரணம் சமூக ஊடகங்களில் விவாதங்களையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியது. விஸ்வமயா ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இளங்கலை மாணவி ஆவார்.

விஸ்மயாவை அவரது கணவர் கிரண் குமார் வரதட்சணை கொடுமை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஜூன் 22 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

மேலும் விஸ்மயா இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் ஒரு உறவினருக்கு விஸ்மயா காயமடைந்த படங்களை அனுப்பியதாக தெரியவந்துள்ளது. இதற்கிடையில், விஸ்மயா பெற்றோர் விஸ்மயா மரணத்திற்கு கிரண் குமார் குடும்பத்தினரும் காரணம் என குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.

ஏற்கனவே விஸ்மயா தற்கொலை வழக்கு கேரளாவை உலுக்கி வரும் நிலையில் திருவனந்தபுரத்தில் 24 வயதான இளம் பெண் ஒருவர் வரதட்சணைக் கொடுமைக்கு பலியாகியுள்ளார்.

திருவனந்தபுரத்தில் உள்ள விஷின்ஜத்தில் அர்ச்சனா என்ற 24 வயது பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அர்ச்சனாவை அவரது கணவர் சுரேஷ் தற்கொலைக்கு தூண்டியதாக அர்ச்சனாவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

அர்ச்சனாவுக்கும் சுரேஷுக்கும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். ஆனால் திருமணமான சில மாதங்களுக்குப் பிறகு, சுரேஷின் தந்தை வரதட்சணையாக ரூ .3 லட்சம் கேட்டார். அந்த தொகை சுரேஷின் சகோதரனுக்காக் கேட்டு வாங்கப்பட்டது.

பின்னரும் சுரேஷ் குடும்பத்தினர் பணம் கேட்டு உள்ளனர், ஆனால் அர்ச்சனாவின் தந்தை இல்லை என்று கூறி விட்டார். இதனால் சுரேஷுக்கும் அவரது மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் இடையில் பிரச்சினைகளுக்கு வழிவகுத்தது. இதை தொடர்ந்து சுரேஷ் அர்ச்சனாவுடன் வாடகை வீட்டுக்கு சென்றார். அப்போதிருந்து, கணவன், மனைவி இருவர் மட்டுமே அங்கு வசித்து வந்தனர்.

ஜூன் 21 அன்று இரவு 11.30 மணியளவில் அர்ச்சனா இறந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது. திங்களன்று அர்ச்சனாவை அழைத்துச் செல்ல சுரேஷ் வந்திருந்தார், அந்த நேரத்தில் அவருடன் டீசல் கேனும் இருந்தது. அர்ச்சனாவின் தந்தை அசோகன் தனது மகள் கொல்லப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார், ஆனால் எறும்புகளைக் கொல்ல டீசலை வாங்கியதாக சுரேஷ் கூறியுள்ளார்.

அசோகன் தனது மகளை சுரேஷ் குடிபோதையில் அடித்து துன்புறுத்தியதாக கூறி உள்ளார். இதை தொடர்ந்து சுரேஷ் கைது செய்யப்பட்டு உள்ளார்.ஆலப்புழாவில் உள்ள வல்லிகுன்னத்தில் உள்ள கணவரின் வீட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை சுசித்ரா (19) என்ற இளம் பெண் இறந்து கிடந்தார். இவரது கணவர் விஷ்ணு ராணுவ வீரர் இவர்களுக்கு கடந்த ஆண்டு மார்ச் 21 ந்தேதி திருமணம் நடந்து உள்ளது. திருமணமான ஒரு மாதத்திற்குப் பிறகு, விஷ்ணு உத்தரகாண்டிற்கு சென்று உள்ளார்.

Related posts