கொவிட் 19 மரண எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணம்

மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிவதில் ஏற்பட்ட கால தாமதம் மற்றும் மரண சான்றிதழ் வழங்கி மரண நடவடிக்கைகளை நிறைவு செய்வதில் ஏற்பட தாமதங்களுக்கு மத்தியிலேயே கொவிட் மரணங்கள் தொடர்பான அறிக்கைகள் வெளியிடப்பட்டன.
சில மரணங்கள் தொடர்பான விடயங்கள் நீதி மன்றங்களில் நிலுவையில் இருந்ததன. அவற்றை நிறைவு செய்வதில் சில காலம் செல்வது வழமை. இவ்வாறான நிலைக்கு மத்தியலேயே இந்த அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இக்காலப் பகுதியில் அறிக்கையிடப்படாத மரணங்கள் தொடர்பாக அறிக்கைகளை முடிந்த வரையில் முழுமைப்படுத்த முயற்சித்தோம் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
கடந்த சில தினங்களாக நாளந்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததிற்கான காரணத்தை தெளிபடுத்திய போதே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இவ்வாறு குறிப்பிட்டார்.
எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் 72 மணித்தியாள காலப்பகுதிக்குள் அல்லது 96 மணித்தியாளங்களில் மரணித்தோரின் அறிக்கைகளை வெளியிட எதிர்பார்க்கின்றோம் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன மேலும் கூறினார்..

——

எரிபொருள் விலையை உயர்த்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானம் ஒரு மனிதாபிமானமற்ற செயல் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பேரிடர் நேரத்தில் எரிபொருள் விலை அதிகரிப்பு மக்களை மேலும் நிலைக்குலைய செய்துள்ளதாக அவர் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை உயர்வு காரணமாக பொது போக்குவரத்து மற்றும் பேக்கரி பொருட்கள் மற்றும் அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகள் எதிர்காலத்தில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ​மேலும் தெரிவித்துள்ளார்.

—-

நேற்றைய தினம் நாட்டில் 2,789 கொவிட் 19 தொற்றாளர்கள் பதிவாகி இருந்த நிலையில், அதில் அதிகளவானோர் கம்பஹா மாவட்டத்தில் இருந்து பதிவாகி இருந்தனர்.
மேலும், நேற்றைய தொற்றாளர்களில் 30 பேர் வௌிநாடுகளில் இருந்து வந்தவர்களாவர்.
அதேபோல், நேற்றைய தினம் 25 மாவட்டங்களிலும் இருந்து கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 6 மாவட்டங்களில் நூற்றுக்கும் அதிகமான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தில் 741 தொற்றாளர்களும், கொழும்பில் 505 பேரும் மற்றும் களுத்துறையில் 181 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், குருணாகலையில் 145 பேரும், காலியில் 67 பேரும், மாத்தறையில் 40 பேரும், கேகாலையில் 50 பேரும், பதுளையில் 96 பேரும், அம்பாறையில் 66 பேரும், மாத்தளையில் 18 பேரும், அனுராதபுரத்தில் 57 பேரும், முல்லைத்தீவில் 3 பேரும், மன்னாரில் 9 பேரும், வவுனியாவில் 35 பேரும், திருகோணமலையில் 6 பேரும், நுவரெலியாவில் 45 பேரும், கண்டியில் 101 பேரும், இரத்தினபுரியில் 397 பேரும், புத்தளத்தில் 29 பேரும், யாழ்ப்பாணத்தில் 60 பேரும், கிளிநொச்சியில் 8 பேரும், பொலன்னறுவையில் 8 பேரும், மொணராகலையில் 19 பேரும் மற்றும் மட்டக்களப்பில் 67 பேரும் பதிவாகியுள்ளனர்.

Related posts