இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை இறங்குமுகம் காணத்தொடங்கி இருக்கிறது. மே 25-ந் தேதிக்கு பின்னர் நேற்று முன்தினம் தினசரி பாதிப்பு 2 லட்சத்துக்கு கீழே வந்தது.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 65 ஆயிரத்து 553 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,78,94,800 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 3,460 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 3,25,972 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 2,76,309 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,54,54,320 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 21,14,508 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் இதுவரை 21,20,66,614 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related posts