கொழும்பில் தொடர்ந்து அதிகரிக்கும் தொற்றாளர்கள்

இன்று (29) காலை வரையில் இலங்கையில் 2,850 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் -19 வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இவர்களில் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த இலங்கையர்கள் 5 பேர் உள்ளடங்குவர். ஏனைய 2,845 பேரும் உள்நாட்டில் அடையாளம் காணப்பட்டவர்கள் என்பதுடன், இவர்களில் பெரும்பாலானோர் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 512 ஆகும்.

இதற்கமைய கம்பஹா மாவட்டத்திலிருந்து 443 பேர் மற்றும் கொழும்பு மாவட்டத்திலிருந்து 281 பேரும் பதிவாகியுள்ளனர். ஏனைய 1,609 பேரும் நாட்டின் ஏனைய மாவட்டங்களிலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்று (29) காலை வரையிலும் இலங்கையினுள் கொவிட்-19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 177,710 ஆகும். இவர்களுள் புத்தாண்டின் பின்னர் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 80,610 ஆகும்.

இதேவேளை, இன்று (29) காலை வரையிலும் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொவிட் தொற்றாளர்களுல் 146,361 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர். அத்துடன் இன்று காலை (29) வரையிலும் வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை சிகிச்சை நிலையங்களில் 27,412 தொற்றாளர்கள் மேலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இன்று (29) காலை 6.00 மணி வரையிலான கடந்து 24 மணித்தியாலங்களுக்குள் வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை சிகிச்சை நிலையங்களிலிருந்து 2,573 பேர் பூரண குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

இன்று (29) முப்படையினரால் மற்றும் சுற்றுலா விடுதிகளினால் பராமரிக்கப்பட்டு வருகின்ற 61 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 5,169 பேர் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை இன்று காலை (கடந்த 24 மணித்தியாலங்களுக்குள்) 18 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களிலிலிருந்து 500 பேர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

அத்துடன், இன்று (29) காலை வரையிலான கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் கொவிட் வைரஸ் தொற்று பாதிப்பினால் 03 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி இன்று (29) காலை வரையிலும் இலங்கையினுள் கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,363 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் பிரிவுகள் மற்றும் கிராம அதிகாரி பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன், தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ள பயண கட்டுப்பாடு மேலும் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

——-

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 38 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.
அதனடிப்படையில் நேற்றைய தினம் (28) 03 கொவிட் மரணங்கள் இடம்பெற்றதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார்.
மேலும், ஏப்ரல் 29 ஆம் திகதி தொடக்கம் மே 27 ஆம் திகதி வரை கொவிட் நோயாளர்களில் 36 பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் 29 ஆம் திகதி 01 மரணமும், மே 20 ஆம் திகதி 01 மரணமும், மே 21 ஆம் திகதி 02 மரணங்களும், மே 22 ஆம் திகதி 03 மரணங்களும், மே 23 ஆம் திகதி 03 மரணங்களும், மே 24 ஆம் திகதி 03 மரணங்களும், மே 25 ஆம் திகதி 08 மரணங்களும், மே 26 ஆம் திகதி 08 மரணங்களும், மே 27 ஆம் திகதி 07 மரணங்களும் பதிவாகியுள்ளன.
அதற்கமைய இலங்கையில் பதிவாகியுள்ள கொவிட் 19 தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 1363 ஆகும்.

Related posts