ஓடிடியில் வெளியாகிறதா மஹா?

மஹா திரைப்படம் தணிக்கை முடிந்து ஓடிடியில் நேரடியாக வெளியாகிறது என்கிற செய்திக்கு மறுப்பு தெரிவித்து படத்தின் இயக்குநர் ஜமீல் ட்வீட் செய்துள்ளார். ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் 50-வது படம் 'மஹா'. ஜமீல் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தை மதியழகன் தயாரித்து வருகிறார். சிம்பு, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட சிலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக ஜிப்ரான், ஒளிப்பதிவாளராக லக்‌ஷ்மன், எடிட்டராக ஜான் ஆப்ரஹாம் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இந்தப் படத்தில் சிலம்பரசன் கௌரவத் தோற்றத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் அவரது ரசிகர்களிடையேயும் இந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது. ஆனால் படம் ஆரம்பித்து பல வருடங்கள் கழித்தும் படத்தைப் பற்றிய சரியான தகவல்கள் எதுவும் தெரியவில்லை என்பதில் ரசிகர்கள் சிலர் ஏமாற்றம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் வேலைகள் முடிந்துவிட்டதாகவும், தணிக்கைக்கு அனுப்பியிருப்பதாகவும், விரைவில் ஓடிடி…

சமந்தா, படப்பிடிப்பில் கலந்து கொள்ள மறுப்பு

கொரோனா பயம் காரணமாக நடிகை சமந்தா ஒரு படப்பிடிப்பில் கலந்துகொள்ள மறுத்து விட்டார். சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி படங்களிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். நயன்தாராவுக்கு அடுத்த இடத்தில் அவர் இருந்து வருகிறார். ஒரு படத்துக்கு அவர் ரூ.3 கோடி சம்பளம் வாங்கி வருகிறார். இம்மாதம் ஒரு தெலுங்கு படத்தில் நடிப்பதற்கு அவர் ‘கால்சீட்’ கொடுத்து இருந்தார். அதன்படி, அந்த படத்தின் படப்பிடிப்பை ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தயாரிப்பாளர் செய்து வந்தார். இந்த நிலையில், சமந்தா அந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள மறுத்து விட்டார். கொரோனா பயம் காரணமாக அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மறுத்து இருக்கிறார். இதனால் அவர் நடிக்க இருந்த தெலுங்கு படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அடுத்தகட்ட படப்பிடிப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிப்போடப்பட்டு இருக்கிறது. இதேபோல்…

‘தலைவி’ படம் திரைக்கு வருவது எப்போது?

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு, ‘தலைவி’ என்ற பெயரில் படமாகி இருக்கிறது. தேசிய விருது பெற்ற பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத், ஜெயலலிதா வேடத்தில் நடித்து இருக்கிறார். எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்தசாமி நடிக்க, மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி வேடத்தில் நாசர் நடித்துள்ளார். கிரீடம், மதராச பட்டினம், தெய்வதிருமகள், தலைவா உள்பட பல படங்களை இயக்கிய விஜய், ‘தலைவி’ படத்தை டைரக்டு செய்து இருக்கிறார். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. படத்தொகுப்பு, குரல் சேர்ப்பு, பின்னணி இசை சேர்ப்பு ஆகிய பணிகளும் முடிவடைந்தன. படம் திரைக்கு வர தயாராக உள்ளது. புதிய (தி.மு.க.) அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், ‘தலைவி’ படத்தில் கருணாநிதியின் கதாபாத்திரம் எவ்வாறு அமைந்துள்ளது? படம் எப்போது திரைக்கு வரும்? என்ற கேள்விகள் சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளன. இந்த கேள்விகளுக்கு படக்குழுவினர் பதில் அளித்துள்ளனர். ‘‘தலைவி…

கதாநாயகனாகத்தான் நடிப்பேன் என்று வடிவேல் பிடிவாதம்

சென்னைக்கு வந்து நடிகர்-டைரக்டர்-தயாரிப்பாளர் ராஜ்கிரண் அலுவலகத்தில் வேலை செய்தது பழைய கதை. மதுரையில் கூலித்தொழிலாளியாக இருந்த வடிவேல் சினிமா ஆசையில் சென்னைக்கு வந்து நடிகர்-டைரக்டர்-தயாரிப்பாளர் ராஜ்கிரண் அலுவலகத்தில் வேலை செய்தது பழைய கதை. அதே ராஜ்கிரண் கருணையினால் அவர் இயக்கிய ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில், ஒரு சின்ன வேடத்தில் தலையை காட்டினார். அடுத்து ராஜ்கிரண் இயக்கிய ‘அரண்மனை’ படத்தில் நகைச்சுவை நடிகர் ஆனார். படிப்படியாக வளர்ந்த அவர், முன்னணி நகைச்சுவை நடிகராக-ஒரு நாளைக்கு ரூ.10 லட்சம் சம்பளம் வாங்குகிற அளவுக்கு வளர்ந்தது, அவருடைய அதிர்ஷ்டம். டைரக்டர் ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில், ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தில் கதாநாயகன் ஆனது, வடிவேலின் பேரதிர்ஷ்டம். அந்த படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ‘இந்திரலோகத்தில் நா.அழகப்பன்,’ ‘தெனாலிராமன்’ ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்தார். அப்போது அவரை தேடி…

மு.க.ஸ்டாலினுக்கு டைரக்டர் கே.பாக்யராஜ் வாழ்த்து

முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு திரைப்பட இயக்குனர் கே.பாக்யராஜ் வாழ்த்து செய்தி அனுப்பி இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது. பொறுத்தார் பூமி ஆள்வார். ஆனாலும், பொறுப்பு தங்களை தேடி வர அப்பாவின் ஆசி கனிந்துள்ளது. அதைவிட தங்களது தன்னம்பிக்கையும், தளராத உழைப்புமே மிக மிக உன்னதம் என என் மனம் நெகிழ்கிறது. தேர்தல் முடிவு வந்ததுமே, உங்களை சந்தித்து வாழ்த்த நினைத்தேன். ஆனால் எனக்கு இருந்த நோயின் அறிகுறி காரணமாக சந்திப்பை தவிர்த்தேன். இப்போது தொற்று உறுதியானதால், காலதாமதமின்றி கடிதம் மூலமாக வாழ்த்துகிறேன். நிறைவான ஆட்சி அரங்கேறி, நாடு நலம் பெற அப்பாவின் அருள் உடனிருக்கும் என வாழ்த்துகிறேன். இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் கே.பாக்யராஜ் கூறியிருக்கிறார்.