தமிழ் சினிமாவுக்கே ஒரு புதிய முயற்சி – ‘மாநாடு’

மாநாடு’ தமிழ் சினிமாவுக்கே ஒரு புதிய முயற்சியாக இருக்கும் என்று இயக்குநர் வெங்கட் பிரபு கூறியுள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாநாடு'. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட் எம்.நாதன், இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்தது. இன்னும் ஓரிரு நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கி இருக்கிறது. இதனை எங்கு படமாக்கலாம் என்று திட்டமிட்டு வருகிறது படக்குழு. இதுவரை முடிக்கப்பட்ட காட்சிகளுக்கான இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அரசியல் பின்னணியில் உருவாகி வரும் இந்தப்படத்தில் அப்துல் காலிக் என்கிற கதாபாத்திரத்தில் சிலம்பரசன் நடித்து வருகிறார். இந்நிலையில் ட்விட்டர் தளத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த வெங்கட்பிரபு ‘மாநாடு’…

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை மே 2 அன்று நடந்தது. இதில் திமுக அறுதிப் பெரும்பான்மை பெற்றது. திமுக சார்பில் 125 பேர், உதயசூரியன் சின்னத்தில் வென்றவர்கள் 8 பேர் என்கிற நிலையில் 133 பேருடன் பெரும்பான்மை பெற்ற ஸ்டாலின் இன்று (மே 7) காலை தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். நடிகர் சூர்யா ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: "'முடியுமா நம்மால்‌?' என்பது தோல்விக்கு முன்பு வரும்‌ தயக்கம்‌... 'முடித்தே தீருவோம்‌!' என்பது வெற்றிக்கான தொடக்கம்‌... - 'முத்தமிழ்‌…

ஸ்டண்ட் சில்வாவுக்கு புகழாரம் சூட்டியுள்ள சுப்பிரமணிய சிவா

ஸ்டண்ட் சில்வாவுக்கு புகழாரம் சூட்டியுள்ளார் இயக்குநர் சுப்பிரமணிய சிவா. இந்தியத் திரையுலகின் முக்கியமான சண்டைக் காட்சிகளின் இயக்குநர்களில் ஒருவர் ஸ்டண்ட் சில்வா. பல முன்னணி நடிகர்களின் படங்களுக்குச் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு ஸ்டண்ட் சில்வா இயக்குநராகப் போகிறார் என்ற தகவல் வெளியானது. எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்புமே இல்லாமல், தனது படத்தை முடித்துள்ளார் ஸ்டண்ட் சில்வா. இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இயக்குநர் சுப்பிரமணிய சிவா. ஸ்டண்ட் சில்வா படம் தொடர்பாக சுப்பிரமணிய சிவா தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:"மாஸ்டர் ஸ்டண்ட் சில்வா இந்தியாவின் சண்டை இயக்குநர்களில் முக்கியமானவர்களில் ஒருவர். இயக்குநர் விஜய் எழுதிய கதையில், அண்ணன் சமுத்திரக்கனி, ரீமா கல்லிங்கல், பூஜா கண்ணன்(சாய் பல்லவி தங்கை) நடிக்க, தம்பி சில்வா முதல்முறையாக இயக்கும் இப்படத்தில் என்னை நட்புக்காக 7 நிமிடம் வர…

பட அதிபர் சங்கசெயற்குழு ஓ.டி.டி தளம் தொடங்க முடிவு

பட அதிபர் சங்கசெயற்குழு கூட்டம் திரைப்படங்களை வெளியிட ஓ.டி.டி தளம் தொடங்க முடிவு. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் என்.ராமசாமி என்ற முரளி ராமநாராயணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்கும் மு.க.ஸ்டாலின் மற்றும் சட்டமன்ற உறுப்பினராக தேர்வான நடிகர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கொரோனா பரவி வரும் இந்த காலகட்டத்தில் தயாரிப்பாளர்களுக்கு உதவ நன்கொடை பெற நிர்வாகிகள் வற்புறுத்தினர். சங்கத்தின் பொருளாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் சங்கத்துக்கு ரூ.10 லட்சம் நன்கொடை வழங்கினார். தயாரிப்பாளர்கள் குடும்பத்தில் நடைபெறும் திருமணங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி கட்டணத்துக்கு சங்கத்தின் அறக்கட்டளையில் இருந்து நிதி வழங்கவும் வியாபாரம் ஆகாமல் இருக்கும் சங்க உறுப்பினர்கனின் தமிழ் திரைப்படங்களை சங்கம் மூலம் தனி ஓ.டி.டி தளம்…

அமெரிக்கா செல்லும் ரஜினி?

ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. ரஜினிகாந்த் சில வாரங்களாக அங்கேயே தங்கி இருந்து படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் நயன்தாராவும் படப்பிடிப்பில் இணைந்தார். இன்னும் ஒரு வாரத்தில் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு சென்னையில் டப்பிங், கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் நடக்க உள்ளது. படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வருகிறார்கள். அண்ணாத்த படத்துக்கு டப்பிங் பேசிவிட்டு ரஜினிகாந்த் அடுத்த மாதம் (ஜூன்) அமெரிக்கா செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்கா சென்று உடல் பரிசோதனைகள் செய்து இருக்கிறார். எனவே மீண்டும் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்வதற்காக அமெரிக்கா செல்வதாக தெரிகிறது. நடிகர் தனுஷ், மனைவி ஐஸ்வர்யா மற்றும் குழந்தைகளுடன் அமெரிக்காவில் தங்கி ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். ரஜினியும் சில நாட்கள் அவர்களுடன் தங்கி…

கே.பாக்யராஜ்-பூர்ணிமா இருவருக்கும் கொரோனா

டைரக்டர் கே.பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா 2-வது அலையின் தீவிரம் மிகக் கடுமையாக உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. திரையுலக பிரபலங்கள் பலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்த் திரையுலகில் பல்வேறு பிரபலங்களுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். தற்போது முன்னணி டைரக்டர் கே.பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை சாந்தனு தனது டுவிட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக சாந்தனு தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: "என் பெற்றோர் கே.பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எங்கள் பணியாளர்கள் உட்பட அனைவரும் மருத்துவரின் அறிவுரையின் பேரில் வீட்டுத் தனிமையில் இருக்கிறோம். கடந்த…