சாய் பல்லவி பாடல் சர்ச்சையில் சமரசம்

சாய்பல்லவி நடித்துள்ள லவ் ஸ்டோரி தெலுங்கு படத்தில் இடம்பெற்ற சாரங்க தரியா பாடல் சமீபத்தில் யூடியூப் தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. மங்லி பாடிய இந்த பாடலுக்கு சாய்பல்லவி நடனம் ஆடி நடித்து இருந்தார். இந்த நிலையில் வாரங்கலை சேர்ந்த கிராமிய பாடகி கோமாலி, சாரங்க தரியா பாடல் எனக்கு சொந்தமானது. மேடை நிகழ்ச்சிகளில் இதனை பாடி வந்தேன். அந்த பாடலை இயக்குனர் சேகர் கம்முலு படத்தில் பயன்படுத்த என்னிடம் இருந்து வாங்கினார். என்னையே பாடவும் வைத்தார். பின்னர் எனக்கு தெரியாமல் வேறு பாடகியை பாட வைத்து விட்டார். சினிமாவில் கிராமிய பாடகர்களை சுரண்டுகின்றனர்” என்றார். இது சர்ச்சையானது.
இதற்கு பதில் அளித்து சேகர் கம்முலு கூறும்போது, “இந்த பாடலை சிரிஷா என்பவரை தோராயமாக பாட வைத்து படமாக்கினோம். பின்னர் அவர் கர்ப்பமாக இருந்ததால் பாட முடியவில்லை. அதன்பிறகு மங்லி பாடினார். பாடல் வெளியான பிறகுதான் கோமாலி பற்றி தெரிந்தது. இந்த பாடல் விவகாரத்தில் சிரிஷா, கோமாலி ஆகிய இருவருக்கும் பணம் வழங்கப்படும்” என்றார். இதன் மூலம் சர்ச்சைக்கு தீர்வு ஏற்பட்டு உள்ளது.

Related posts